Ad Widget

தாமதமாக ஆரம்பமாகிய சபை அமர்வு

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபைக்கு வரத் தாமதமாகியதால் வடமாகாண சபை அமர்வு காலை 10.09 மணிக்கே ஆரம்பமாகியது. வழமையாக வடமாகாண சபை அமர்வு 9.30 மணிக்கு ஆரம்பமாகின்ற நிலையில் இன்றைய அமர்வு தாமதமாக ஆரம்பமாகியது.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் மாதாந்த சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (10) ஆரம்பமாகியது. ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்த 2014 ஆம் ஆண்டு சபையில் சமர்ப்;பிக்கப்பட்டு, விவாதத்துக்கு இதுவரையில் எடுத்துக்கொள்ளப்படாத ‘தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது, மேற்கொள்ளப்பட்டு வருவது இனவழிப்பு என்றும், இதனை ஐ.நா விசாரணைக்குழு கவனம் செலுத்தவேண்டும்’ என்று கூறும் பிரேரணை இன்றைய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பிரேரணை தொடர்பில் முதலமைச்சர் விசேட உரையாற்றுவதாக இருந்தமையால் முதலமைச்சர் வருகைதரும் வரையில் சபை அமர்வு ஆரம்பிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts