- Thursday
- May 7th, 2026
இங்குள்ள மக்களை மீள்குடியேற்றிய பின்னரே இந்தியாவில் உள்ள அகதிகள் மீள்குடியேற்றப்படுவார்கள் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இன்று வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டு வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு வருகைதந்த அவர் அங்குள்ள மக்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் - வடபகுதி உள்ளிட்ட இப்பகுதி மக்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பான நிறைய பிரச்சினைகள்...
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து நின்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி க.சிவபாதசுந்தரம் வியாழக்கிழமை (26) அனுமதியளித்துள்ளார். அத்துடன் மாதத்தின் முதலாம் மற்றும் இறுதி சனிக்கிழமைகளில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு சென்று கையொப்பமிடவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரன்,...
பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.விஜிந்தன், வியாழக்கிழமை (26) பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். கடந்த 2ஆம் திகதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனால் பனை அபிவிருத்திச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு, 25 ஆம் திகதி பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். வடமாகாண...
பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இரு வருடங்களில் காண முடியுமென தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதால் நிச்சயமாக இது சாத்தியப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அதிகூடிய அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு...
வீடுகளிலுள்ள எலிகளைக் கொல்வதற்காக இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய தரமற்ற எலிப்பாஷணங்களால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசநோய்ப் பிரிவின் தலைவரும் இயல்பியல் நோய் நிபுணருமான வருண குணதிலக்க, இவ்வாறான எலிப்பாசனங்களை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். விதவிதமான நிறங்களில் தயாரிக்கப்படும் இந்த எலிப்பாசனங்களை வீட்டின் பல்வேறு...
கடற்படையில் கடமையாற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய தந்தையின் பாதுகாப்பு பிரிவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு யோசித்த ராஜபக்ஷ ஏற்கெனவே கோரியிருந்தார்.
உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருவது ஒருபோதும் இனவாதமாக முடியாது. உண்மையை முதலில் அறிந்தால் தான் நல்லெண்ணம் பிறக்க வழிவகுக்கலாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் குறித்து, "நல்லாட்சிமிக்க அரசாங்கத்துடன் விளையாட வேண்டாம். இதுவே இனவாதிகளுக்கான எனது இறுதி எச்சரிக்கை" என பிரதமர் ரணில்...
சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை இரவு 9.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சங்கத்தானை ரயில் நிலையம் முன்பாக உள்ள காணியிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த காணியை இன்று...
வெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில் 37 லட்சம் ரூபா பெறுமதியில் தீயாகி அறக்கட்டளை அமைப்பால் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் மேலும்...
லாரன்ஸ் நாயகனாக நடித்து இயக்கிய முனி படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை காஞ்சனா என்ற பெயரில் எடுத்தார். அதுவும் வெற்றிகரமாக ஓடியது. தற்போது இப்படங்களின் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தை எடுக்கிறார். இதற்கு முனி 3 கங்கா என பெயரிடப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் தலைப்பை காஞ்சனா-2 ஆக மாற்றி விட்டதாக...
சிம்பு நடித்த படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளிவராமல் உள்ளன. ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்கள் முடிவடைந்தும் ரிலீசாகமல் உள்ளது. மேலும், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மார்ச் மாதத்தில் இப்படத்தின் அனைத்து வேலைகளையும் பரபரப்புடன் முடிக்கவுள்ளதாக சிம்பு கூறியுள்ளார். இதுகுறித்து சிம்பு தனது டுவிட்டர்...
வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் கலந்துள்ளது தொடர்பாக ஆராய்வதற்காக நோர்வே நாட்டு நிபுணர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக வடக்கு விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (25.02.2015) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்....
வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய வவுனியா வலையத்திற்கு உட்பட்ட அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் இந்திரராசா தன்னை அச்சுறுத்தியதாக அவைத்தலைவர் மற்றும் அளுநருக்கு முறைப்படி அறிவித்தல் விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும்...
ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன்டே இலங்கை வரவுள்ளார். அவர் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு பயணமாவார் என்று ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஜெப்ரி பெல்ட்மன்ட் தனது இலங்கை...
யாழ்ப்பாணம், சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் சமையல் அறையில் அமைக்கப்பட்ட புகைப்போக்கி வித்தியாசமான முறையில் எண்ணெய் பரல்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள வீடுகளில் சீமெந்து கட்டுக்களிலான புகைப்போக்கிகள் வீடுகளில் நிர்மாணிக்கப்படுவது வழமை. எனினும் இந்த புகைப் போக்கியானது 5 எண்ணெய் பரல்களை அடுக்கி அமைக்கப்பட்டுள்ளது. புகைப்போக்கி சரிந்து விழாமல் இருப்பதற்கு உறுதுணை கம்பிகளும் கட்டப்பட்டுள்ளன.
எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இன்று புதன்கிழமையுடன் நிறைவு செய்ய வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...
புதிதாக அண்மையில் நியமனம் பெற்ற இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் எ.டபிள்யூ.ஜே.கிரிசாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துள்ளார். புதிதாக இராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்ட இவர் தனது நியமனத்தின் பின் நேற்று ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இலங்கை இராணுவத்தில் 36 வருட கால சேவையை பூர்த்தி...
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கடந்த மாதம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான அறுவரில், பிரதான சந்தேக நபரை கொல்லப்பட்டவரின் மனைவி, செவ்வாய்க்கிழமை (24) அடையாளம் காட்டினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மல்லாகம் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றபோது, சந்தேகநபர்கள் அறுவரும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைக்கு...
இலங்கை ஜனாதிபதி, சாரணர் விருதுக்கான நேர்முகத் தேர்வு இலங்கை சாரணர் தலைமையக பிரதி பிரதம ஆணையாளர் எஸ்.ஏ.அமரசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றது. யாழ்.மாவட்ட சாரண ஆணையாளர் ச.சௌந்தரராஜனினின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வில், இலங்கை சாரணர் தலைமையகத்தைச் சேர்ந்த ரூபன் ஆரியரத்தின, எஸ்.சௌந்தரராஜன், சரத் சோம விக்கிரம சிங்க,...
யாழில் கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி மானிப்பாய் பொலிசாரால் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் திருமணம் முடித்துள்ளார். அவர் தனது தனது கணவர் கேட்டதற்கு இணங்க, 50 கிராம் உடைய கஞ்சாவை வாங்கிச் சென்றுள்ளார். இதன்போது வீதியில் வைத்து பொலிசார் இவரைக் கைதுசெய்துள்ளனர்....
Loading posts...
All posts loaded
No more posts
