Ad Widget

உண்மையைக் கூறுவது ஒருபோதும் இனவாதமாகாது : பிரதமர் ரணிலுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதில்

உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனக் கோரு­வது ஒரு­போதும் இன­வா­த­மாக முடி­யாது. உண்­மையை முதலில் அறிந்தால் தான் நல்­லெண்ணம் பிறக்க வழிவகுக்­கலாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

wigneswaran__vick

வட­மா­காண சபையில் அண்­மையில் நிறை­வேற்­றப்­பட்ட இனப்­ப­டு­கொலை தீர்­மானம் குறித்து, “நல்­லாட்­சி­மிக்க அர­சாங்­கத்­துடன் விளை­யாட வேண்டாம். இதுவே இன­வா­தி­க­ளுக்­கான எனது இறுதி எச்­ச­ரிக்கை” என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்தமைக்கு பதி­ல­ளிக்கும் முக­மாக முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கருத்து
வெளி­யிட்டபோதே இதனைத் தெரி­வித்தார்.

விக்­கி­னேஸ்­வரன் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது:

“எம் மக்­க­ளுக்கு நடந்­ததை வெளி­யி­டு­வதை இன­வாதம் என்று பிர­தமர் சொல்­லி­யி­ருப்­பது வருத்­தத்தைத் தரு­கின்­றது. உண்மை கூறு­வது ஒரு­போதும் இன­வா­த­மாக முடி­யாது. இன­வா­தத்தை வேண்­டு­மானால் உண்மை இது தான் என்று குறிப்­பிட்டுக் காட்­டலாம். அத­னைத்தான் வட­மா­காண சபையில் கொண்­டு­வ­ரப்­பட்ட எமது பிரே­ரணை எடுத்­துக்­காட்­டி­யது. உண்மை தெரிந்­தால்த்தான் நல்­லெண்ணம் பிறக்க உதவி புரி­யலாம். தென் ஆபி­ரிக்­கவில் Truth And Reconciliation Commission என்ற ஆணைக்­குழு உண்­மைக்கும் நல்­லெண்­ணத்­துக்­கு­மான ஆணைக்­குழு என்றே அழைக்­கப்­பட்­டது. முதலில் உண்­மையை அறிந்தால் தான் நல்­லெண்ணம் பிறக்க வழி வகுக்­கலாம்.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யி­லான விசா­ரணை அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­வதை கால­தா­மதம் செய்­வ­தற்கு உங்­க­ளுக்கு சார்­பாக சர்­வ­தேசம் முற்­ப­டு­கின்­றது என்­பதை அமெ­ரிக்க பிர­தி­நி­தி­யிடம் இருந்து அறிந்து கொண்­டதன் பின்னர் தான், எமது பிரே­ர­னையை நாங்கள் கொண்­டு­வந்தோம். எமது மனோ­நி­லையை எல்­லோ­ருக்கும் தெரி­யப்­ப­டுத்­தவே அந்தப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது. வண்­டிலை முன்­வைத்து குதி­ரையை பின்­வைப்­பது போல் ஐக்­கிய நாடுகள் தீர்­மா­னத்தை முன்­னரே அறிந்து அந்த நேரத்தில் கொண்­டு­வந்த பிரே­ர­ணைக்கு, உலக நாடுகள் கன்­னத்தில் அடித்­தது என்று பிர­தமர் ரணில் கூறி­யது வியப்­பாக இருக்­கின்­றது.

அர­சியல் கலா­சா­ரத்தை மாற்­றுங்கள் என்று நான் கோரி­ய­தற்கு எமக்­க­ளிக்­கப்­பட்ட பிர­த­மரின் பதில் இது என்று தெரி­கின்­றது. எங்கள் மக்கள் உண்­மை­யான நல்­லெண்­ணத்தை தெற்கில் இருக்கும் எவ­ரி­டமும் எதிர்­பார்க்க முடி­யாது என்று சொல்­வ­தனை உண்மை ஆக்­கப்­பார்க்­கிறார் பிர­தமர்.

ஆனால் நான் அப்­படி நினைக்­க­வில்லை. சிங்­கள மக்கள் நல்­ல­வர்கள். அவர்­களின் அர­சி­யல்­வா­தி­கள்தான் இது­ வரைகாலமும் அவர்­களை பிழை­யான விதத்தில் வழி நடத்தி வந்­துள்­ளார்கள்.

உதா­ர­ணத்­துக்கு சந்­தி­ரிகா அம்­மையார் 2000 ஆம் ஆண்டு நல்­ல­தொரு அர­சியல் யாப்பு நகலைக் கொண்­டு­வந்த போது நாட்டைப் பற்றிச் சிந்­திக்­காது அதனை எதிர்த்து பாரா­ளு­மன்­றத்தில் அந்த நகலை யார் எரித்­தார்கள் என்­பது நான் சொல்லி பிர­தமர் ரணி­லுக்குத் தெரி­ய­வேண்­டி­ய­தில்லை.

குறு­கிய கால சுய நன்­மைக்கே அதை செய்­தார்கள். நாட்டு நலம் கருதி நாட்டு நலம் கருதி அல்ல. தயவு செய்து இனவாதம் வேண்டாம் என்று கோரி விட்டு நீங்களே இனவாதத்தை எழுப்பாது பார்துக்கொள்ளுங்கள். சென்ற ஜனாதிபதித் தேர்தலில் எமது மக்கள் பெருவாரியாக உங்களுக்கு ஆதரவளித்ததை மறந்துவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்று வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Posts