Ad Widget

சிம்புவுக்கு பரபரப்பு கொடுக்க வரும் மார்ச் மாதம்

சிம்பு நடித்த படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளிவராமல் உள்ளன. ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்கள் முடிவடைந்தும் ரிலீசாகமல் உள்ளது.

simbu-silambarasan

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மார்ச் மாதத்தில் இப்படத்தின் அனைத்து வேலைகளையும் பரபரப்புடன் முடிக்கவுள்ளதாக சிம்பு கூறியுள்ளார்.

இதுகுறித்து சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, ‘இது நம்ம ஆளு’ படத்தின் டப்பிங் பணி அதைத் தொடர்ந்து கவுதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு, ‘வாலு’ படத்தின் தாறுமாறு பாடல் படப்பிடிப்பு, ‘இது நம்ம ஆளு’ ஆடியோ வெளியீடு, அதைத் தொடர்ந்து ‘வாலு’ படம் வெளியீடு என இந்த மார்ச் மாதம் முழுவதும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.

இந்த படங்களையெல்லாம் முடித்து விட்டு செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு இணையவிருக்கிறார். ஆகவே, இந்த வருடத்தில் சிம்பு நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி, ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று நம்புவோம்.

Related Posts