Ad Widget

அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லையாயின் முறையிடவும்

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையாயின் அது தொடர்பில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 0716027912 – 0788714726 – 0777205137 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இது...

யாழில் 9 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல்போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் கவனீயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் அரசு மற்றும் அரச ஒட்டுக்குழுக்களினால் கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரியும், சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அண்மைக்காலங்களில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது....
Ad Widget

மாவட்டச் செயலர்களுக்கும் இடமாற்றம் : புதிய தபால் மா அதிபரும் நியமனம்

நாடு முழுவதிலும் கடமையாற்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் இடமாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதேவேளை, புதிய தபால் மா அதிபராக டீ.எல்.பீ.ஆர்.அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைத்திரி, மஹிந்த, சந்திரிகா ஆகியோரை ஒரே மேடையிலேற்ற யோசனை

எதிர்வரும் பொதுச் சேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேடைக்கு அழைத்து வர வேண்டும் என மேல் மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று தீர்மானித்துள்ளனர். இந்த தீர்மானம் அடங்கிய கடிதமொன்றில் கூட்டமைப்பின்...

2,200பேருக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கியுள்ள மஹிந்த அரசாங்கம்

முன்னைய அரசாங்கத்தினால் 2,200பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் 1,800பேருக்கு இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பெண்கள் மட்டுமே நடித்திருக்கும் ‘இனி வரும் நாட்கள்’

மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் துளசிதாஸ் தமிழில் இயக்கும் படம் ‘இனி வரும் நாட்கள்’. எம்.ஜே.டி. புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் கூட ஆண்கள் நடிக்கவில்லையாம். இப்படத்தில் இனியா, ஆர்த்தி, சுபிக்சா, ஈடன், அர்ச்சனா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில்...

ஈரானிய படத்திற்காக உலகப்புகழ் பெற்ற இசைக்குழுவுடன் கைகோர்த்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஈரானிய சினிமாவை உலகளவில் பேச வைத்த படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படத்தை மஜித் மஜிதி என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் 1997-ல் வெளிவந்து உலக ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஒரு ஜோடி ஷூவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் இயக்குனர். உலகப் பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை...

இலங்கை அணி வெற்றி பெற்றால் 130 மில்லியன் ரூபா வழங்க தீர்மானம்

உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில் அணிவீரர்களை உற்சாகமூட்டும் வகையில் 130 மில்லியன் ரூபாய்களை வழங்க உள்ளதாகவும், குறித்த பணத்தை திறைசேரியில் இருந்து பெறாமல் தனியார் துறைகளின் ஊடாக பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...

கல்வி ராஜாங்க அமைச்சர் யாழ். வருகை

கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் நேற்று வட்டு இந்து கல்லூரிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். வட்டுகோட்டை இந்து கல்லூரியின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று கல்வி ராஜாங்க அமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் வருகைதந்திருந்தனர். புதிய அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்று 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் நேற்றைய...

சிறுவர்களை உயிரோடு புதைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்த ஒரு தீவிரவாத குழு, இஸ்லாமிய நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் ஒரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதிகள் என்றழைக்கப்படும் இந்த தீவிரவாத குழு ஈவு, இரக்கமற்ற அட்டூழிய செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. சமீபத்தில் பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த ஜோர்டான்...

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய ‘ஜனாதிபதி செயலணி’!

நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அவற்றுக்கிடையே இருக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடித் தீர்வுகளை பரிந்துரை செய்ய நல்லிணக்கத்துக்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இந்த விசேட ஜனாதிபதி செயலணியானது அரசியல் கைதிகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கடந்த கால மோதல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைக் குறைப்பது...

மஹிந்த வென்றிருந்தால் தமிழ் மக்களின் தனித்துவம் இல்லாது போயிருக்கும் – மாவை

மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஜனாதிபதி ஆகியிருந்தால் தொடர்ந்து 08 ஆண்டுகள் ஆட்சி புரிந்து தமிழ் மக்களின் தேசிய தனித்துவங்களை இல்லாது அழித்தொழித்து இருப்பார் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புறநெகும திட்டத்தின் கீழ் 52 மில்லியன் ரூபாய் செலவில் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட நல்லூர்...

ஜனாதிபதி மைத்திரி, 15ஆம் திகதி இந்தியா செல்வார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவிருக்கின்றார். அவர், அங்கு 18ஆம் திகதி வரை தங்கியிருப்பார். மைத்திபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நேற்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை பதாகையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை முன்னிலை சோஷலிஸக் கட்சியால் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக இந்தக் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைஆரம்பிக்கப்பட்டது. கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற பதாகையில், 'அரசியல்...

துர்க்கா மகளிர் வீட்டுத்திட்டம் திறந்துவைப்பு

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய தேவஸ்தானத்தினால் துர்க்கையம்மன் ஆலயத்தில் வாழும் பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி நிர்மாணிக்கப்பட்ட துர்க்கா மகளிர் வீட்டுத்திட்டம் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. துர்க்கையம்மன் ஆலய தேவஸ்தான தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் இருந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு வீடுகளுக்குமான...

வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் கடற்படையினர் சோதனை

முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சோதனை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு ரெட்பானா பாரதி வித்தியாலய மாணவர்களில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உபகரணப் பொருள்களை வழங்கி விட்டு ரவிகரன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தச் இடம்பெற்றுள்ளது. ராணுவத் தளபாடங்கள் வைத்திருந்தார் எனக் கூறியே கடற்படையினரால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சோதனை...

நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகம் திறந்து வைப்பு

நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகம் மற்றும் கலாசார மண்டபம் ஆகியன தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, யாழ்.இந்திய துணைதூதரக அதிகாரி எஸ்.தட்சணாமூர்த்தி ஆகியோரால் வியாழக்கிழமை (05) திறந்து வைக்கப்பட்டது. புறநெகும திட்டத்தின் கீழ் 52 மில்லியன் ரூபாய் செலவில் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட 3 மாடிகளை கொண்ட கட்டடமே திறந்து வைக்கப்பட்டது....

வவுனியாவில் பொலிஸ் அதிகாரி மீது சூடு

வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியில் பொலிஸார் மீது வியாழக்கிழமை (05) அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா, பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீதே இனந்தெரியாதோர் இந்த...

தேசியக்கொடி ஏற்றாமை குறித்து பொலிஸ் விசாரணை

சுதந்திர தினத்தன்று நல்லூர் பிரதேச சபையில் தேசியக்கொடி ஏற்றப்படாமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் கூறினார். இலங்கையின் 67ஆவது சுதந்திர தினமான புதன்கிழமை (04), நல்லூர் பிரதேச சபையில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த தவிசாளர்,...

கே.பி,வெளிநாடு செல்ல தடை

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கடவுச்சீட்டை ரத்து செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு இன்று உத்தரவிட்டது.
Loading posts...

All posts loaded

No more posts