Ad Widget

அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லையாயின் முறையிடவும்

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையாயின் அது தொடர்பில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 0716027912 – 0788714726 – 0777205137 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பில் முறையிடுமாறு அவ்விரு சங்கங்களும் கோரியுள்ளன.

தங்களுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் கண்டறிந்து அவற்றை உறுதி செய்துகொண்டு நுகர்வோர் அதிகார சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கமைய, பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், கோதுமை மா, பாண் மற்றும் பஸ் கட்டணங்கள் உள்ளிட்ட, இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலைகள் குறைக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் முறையிடலாம் என்றும் அச்சங்கங்கள் மேலும் கூறியுள்ளன.

Related Posts