மாணவர்களுக்கு மதனமோதகம் விற்றவர் கைது

காங்கேசன்துறை வீதியிலுள்ள மருந்தகமொன்றில் மதன மோதகம் என்னும் போதைப் பொருளை மாணவர்களுக்கு விற்பனை செய்த ஒருவரை வியாழக்கிழமை (02) கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 5ஆம் வட்டாரம் மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த கடைக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரைக்...

குருநாகலிலேயே மஹிந்த போட்டியிடுவார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுவார் என்று அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
Ad Widget

பொதுதேர்தலில் மஹிந்தவுக்கு பிரியாவிடைக்கு பதில் அதிர்ச்சி விடை கிடைக்கும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, ஜனவரி 8 ஆம் திகதி பெற்ற 58 லட்சம் வாக்குகளில் 25 லட்சத்தையாவது பொதுத் தெர்தலில் பெற்று காட்டட்டும். அவரை சுற்றி இன்று இருக்கும் அரசியல் கோமாளிகள், இனவாதிகள், மதவாதிகள், கூட்டுக்களவாணிகள், தமிழ்-முஸ்லிம் துரோகிகள் ஆகியோரை வெற்றி பெற செய்துக்காட்டட்டும். இந்த முறை மஹிந்தவுக்கு கிடக்கப்போவது பிரியாவிடை இல்லை. அது அதிர்ச்சி...

புலிகளுக்கு உதவிய இராணுவ அதிகாரி விடுதலை

விடுதலைப் புலிகளுக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியை விடுதலை செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டார். விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு இராணுவத்தினரின் தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் பட்டத்துவ ஆராய்ச்சிஹே...

இளம் பெண் மீது தாக்குதல்

அச்சுவேலி பகுதியில் அழகு நிலையத்தை நடத்தி வந்த இளம்பெண் மீது வெள்ளிக்கிழமை (03) இனந்தெரியாத நபர் ஒருவர், தாக்குதல் மேற்கொண்டதில் பாதிக்கப்பட்ட பெண் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த கஜேந்திரன் சிந்துஜா என்ற 21 வயதுடைய பெண் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அழகு நிலையத்தில் தனித்திருந்த பெண் மீது,...

நிரந்தர அரசியல்தீர்வு நோக்கிய நகர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு! – சுமந்திரன்

நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை நோக்கிய நகர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். நேற்றுமுன்தினம் குடத்தனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் - பல தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 6 வருடங்களுக்கு முன்பு மே...

விளையாட்டுக்கழக கைகலப்பு; 23பேருக்கு விளக்கமறியல்

கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகத்தில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட 23பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கராசா கணேசராசா வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டார். மேற்படி சம்பவத்தில் அறுவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கொற்றாவத்தை...

புனர்வாழ்வு முகாமில் இன்னமும் 50 பேரே உள்ளனராம்! பொறுப்பதிகாரி பெர்ணான்டோ!!

விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கத்துவம் வகித்த மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் என கைது செய்யப்பட்டவர்களில் 50 பேரே தற்போது பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வருவதாக புனர்வாழ்வு அதிகாரி லெப்.கேணல் பீ.பீ.எச்.பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்...

மைத்திரி – மஹிந்த 9ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்றாக மேடையேறக்கூடும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் 9 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் ஒன்றாக மேடையேறுவார்கள் என பங்காளிக் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுகிறது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் களமிறங்குகிறார். இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் அதன் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் போட்டியிட மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாய்ப்பு வழங்க...

சூழலியல் விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப்பொருளில் யாழில் இடம்பெற்ற கலந்துரையாடல்

சூழலியல் விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப்பொருளில் சேதன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (03.07.2015) யாழ் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. விவசாய இரசாயனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் மூலமும் உணவுச்சங்கிலிகள் மூலமும் இரசாயன நஞ்சுகள் உடலைச் சென்றடைவதால் மனித ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக விவசாய இரசாயனங்களைப்...

பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவருக்கு விளக்கமறியல்!

பாடசாலை மாணவிகள் 5 பேரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரபல கல்லூரி ஒன்றின் ஓய்வுபெற்ற பிரதி அதிபரான சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் ம.கணேசராசா உத்தரவிட்டுள்ளார். 5 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என பருத்தித்துறை பொலிஸாரால்...

முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ‘ஜனநாயகப் போராளிகள்’ கட்சி உதயம்!

முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று வெள்ளிக்கிழமை (03.07.2015) காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய - ஆற்றவேண்டிய - ஜனநாயக பங்குபணி குறித்து சுமார் மூன்று மணி நேரம் ஆராய்ந்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு...

காணாமற்போன வல்வெட்டித்துறை மாணவர்கள் கொழும்பில் மீட்பு

கடந்த ஜூன்மாதம் 30ஆம் திகதி முதல் காணாமற்போன வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களும் கொழும்பு கொம்பனித் தெருவில் இருந்து வியாழக்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த எஸ்.விஸ்ணுராஜா (வயது 15), கம்பர்மலையைச் சேர்ந்த இ.தர்ஷன் (வயது 16), வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பா.சுகிர்தன் (வயது 15) ஆகிய 3 சிறுவர்களுமே...

மைத்திரி கொலை முயற்சி: புலி சந்தேகநபருக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, பொலன்னறுவை மேல்நீதிமன்ற நீதிபதி அமின்டர் செனவிரத்ன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிபதி, மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார். 2005/2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்த கொலை முயற்சி...

இலங்கையிலும் 108 அம்புலன்ஸ் சேவை ஆரம்பம்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 108 அம்புலன்ஸ் சேவை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அம்புலன்ஸ் சேவை இலங்கையில் செயல்படுவதற்கான நிதி உதவியையும் இந்தியா அளிக்க உள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்புலன்ஸ் சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவிடம் உதவியை நாடியிருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் இலங்கைக்குப் பயணம் சென்றிருந்தபோது...

யாழ் மாவட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களின் விபரம் கசிந்தது !

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் வேட்புமனு இறுதிநாளான ஜூலை 15ம் திகதி வரை தாமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் கசிந்துள்ளது. 7 வேட்பாளர்களுக்காக 10 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். இவர்களில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ,ஈ.சரவணபவன், சுரேஸ்...

இரகசிய முகாம்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிடவும் – டக்ளஸ்

இலங்கையில் இரகசிய முகாம்கள் இருக்கின்றன என்றால் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். நகரத்திலுள்ள விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,...

ஐ.ம.சு.முன்னணியின் பிரதமர் வேட்பாளராக சமல்! ஜனாதிபதிக்கு யோசனை சமர்ப்பிப்பு!!

"எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவுகின்ற நிலையில், அதில் மத்தியஸ்தம் வகிக்கும் பிரிவினரால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது'' - என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். இதேவேளை,...

மிருசுவில் படுகொலையின் பின்னணி

பதினைந்து ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம். நீதி கிடைப்பதற்கு நீண்ட காலம் எடுத்துள்ளது. இருப்பினும் இறுதியில் நீதியைப் பெற்றுத் தந்தமைக்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்’ என மிருசுவிலில் இடம்பெற்ற படுகொலையில் கொல்லப்பட்ட கதிரன் ஞானச்சந்திரனின் மனைவியும் ஞானச்சந்திரன் சாந்தனின் தாயுமான ஞானச்சந்திரன் பரமேஸ்வரி தெரிவித்தார். 19 டிசம்பர் 2000 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள மிருசுவிலில்...
Loading posts...

All posts loaded

No more posts