Ad Widget

மைத்திரி கொலை முயற்சி: புலி சந்தேகநபருக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, பொலன்னறுவை மேல்நீதிமன்ற நீதிபதி அமின்டர் செனவிரத்ன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிபதி, மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.

2005/2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொஹமது சுல்தான் காதர் மொஹிடீன் ஏ.கே.ஏ. சேனன் என்றழைக்கப்படும் சிவராஜ் ஜெனிவன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டபணத்தை செலுத்த தவறின் மேலதிகமாக ஒருவருடம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கிளைமோர் குண்டை வைத்தே இந்த கொலை முயற்சியை மேற்கொண்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

37 வயதான சந்தேகநபர், யாழ்ப்பாணம் கோவிலடி பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்புக்கு 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதியன்று பஸ்ஸில் பயணித்துகொண்டிருந்த போதே பொலிஸார் இவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்திருந்தனர்.

Related Posts