Ad Widget

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஞாயிறு விடுமுறை வேண்டும்

ஆலயங்கள் தோறும் அறநெறிப்பாடசாலை வகுப்புக்களை நடத்தவதற்கு ஏதுவாக தனியார் கல்வி நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என யாழ். சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரி ஜாக்கிராத் சைதன்ய சுவாமிகள் தெரிவித்தார். வரலாற்றுச்சிறப்பு மிக்க 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுன்னாகம் தாழையம்பதி அரிகர புத்திர ஐயனார் தேவஸ்தானத்தின் 'தாழையம்பதியான் இசைத்தமிழ்' இசைப்பேழை இறுவெட்டு...

திருமண பதிவுக் கட்டணக் குறைப்பு அமுல்

அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் புதன்கிழமை (25) தெரிவித்துள்ளார். முன்பு வீட்டுக்கு வந்து திருமணப் பதிவு செய்ய 3,500 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டது. தற்போது அக்கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளருக்கு 1500...
Ad Widget

இலங்கை கடும் சவால்களை எதிர்கொள்ள நேரும் – அமெரிக்கா

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னைய ஜனாதிபதியின் தீங்குமிக்க கொள்கையிலிருந்து நாட்டை விலக்கிச் செல்கின்ற போதும் முன்னைய அரசாங்கம் விட்டுச் சென்ற நிதி சிக்கல் உட்பட பல கடுமையான சவால்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடுமென அமெரிக்கா கூறியுள்ளது. 'இலங்கை மக்களும் சிறிசேன அரசாங்கமும் இனிவரும் மாதங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆயினும், இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவதில்...

கோட்டாவின் கணக்குகளை சோதிக்க உத்தரவு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின், சகல வங்கிக்கணக்குகளையும் சோதனைக்கு உட்படுத்துமாறு காலி நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன மற்றும் அவன்கார்ட் நிறுவன பணிப்பாளர் சபையின் அனைத்து அங்கத்தவர்களினதும் வங்கிக் கணக்குகளையும் சோதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், நாட்டுக்கு திரும்பியுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்...

கமலஹாசனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்

மும்பையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ) நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகர் அமீர்கான் மற்றும் திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமீர்கான் பேசும்போது, கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்துக்கு 2013–ல் பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடையும் விதிக்கப்பட்டது. அப்போது கமலுக்கு ஆதரவாக நான்...

திங்கள் முதல் அமுலுக்கு வருகிறது இலவச WiFi திட்டம்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளராக களம் இறங்கிய மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலவச WiFi வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஜனாதிபதியின் 100 நாள் வேலைத் திட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட நாட்கள் நிறைவுற்றுள்ள நிலையில் இதுவரை இலவச WiFi வழங்கப்படும் திட்டம் செயற்படுத்தப்படவில்லை. இதனால் இளைஞர் யுவதிகள் விரக்தியில் உள்ளனர்....

தேசிய கீதத்தை தமிழில் பாட ஊக்குவிப்போம் உண்மையான நல்லிணக்கமே இலக்கு – பிரதமர் ரணில் உறுதி

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்னாபிரிக்கா போன்று உண்மையை கண்டறிய விசேட குழு அமைக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த அடுத்த கட்டம் நோக்கிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினூடாக சுமார் ஒரு மில்லியன் வரையான வீட்டு சுற்றுச்சூழலை சோதனைக்கு உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார், இராணுவத்தினர், சமூக சேவை அமைப்புகள் மற்றும் சுகாதார...

சந்திரிக்காவுக்கு சந்தர்ப்பம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தககவல் வெளியிட்டுள்ளது. அது தொடர்பில் களுத்துறை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்னசிறி விக்கிரம நாயக்க இராஜினாமா செய்வதற்கு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் இதற்கு முன்னர் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் நாடாளுமன்ற...

தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்; நுண்கலைப்பீட மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது

யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள் இன்று காலை மூன்றாவது தடவையாக வகுப்புப் பகிஷ்கரிப்பு ஒன்றினை மேற்கொண்டனர். யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள் மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதி வகுப்புப் பகிஷ்கரிப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். எனினும் அவர்களது கோரிக்கைக்கு பதில் கிடைக்காத போது...

சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் நச்சு மாசுகள் இல்லை – எம்ரிடி வோல்கர்ஸ் பிஎல்சி

யாழ் குடாநாட்டின், சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நச்சு மாசுகள் இல்லை என்று அந்தப் பிரதேசத்தின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக ஆய்வு நடத்திய நிபுணர் குழு தெரிவித்திருக்கின்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் த.ஜெயசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் கு.வேலாயுதமூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த டாக்டர்...

சமூக முன்னேற்றத்திற்காக இளைய சமூகம் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் – டக்ளஸ்

மனோபலமும் உடல் உழைப்பும் கொண்டு செயற்படும் சமூகத்தினால் மட்டுமே பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் முன்னேற்றம் காண முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த இளைஞர் யுவதிகள் மத்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு மனித சமூகம்...

வடக்கு விவசாய அமைச்சில் 61 பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

வடமாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் அமைய அடிப்படையில் பணியாற்றிய 61 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு நிரந்தர...

வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவும் நீர் பற்றாக்குறைய தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்!

வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவும் நீர் பற்றாக்குறைய தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க கட்டார் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆராய அந்நாட்டு அமைச்சு பிரதிநிதிகள் விரைவில் இலங்கை வரவுள்ளனர் என நேற்று (24) இலங்கைக்கு விஜயம் செய்த கட்டார் மன்னர் ஷீக் தம்மி பின் ஹாமட் அல் தானி தெரிவித்துள்ளார். நேற்று ஜனாதிபதி காரியாலயத்தில்...

நாடாளுமன்ற விதிகளே எதிர்க்கட்சித் தலைவரைத் தீர்மானிக்கும்! பதவியை ஏற்க அழைப்புக் கிடைத்தால் பரிசீலிப்போம்!!

"நாடாளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய...

நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக புதன்கிழமை(25) ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 தொண்டர் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கருத்துக்கூறுகையில், தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களுக்கான நியமனம் கடந்த 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அ ந்த நியமனத்தின் போது, 52...

பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு வருகை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(27) யாழ்ப்பாணத்துக்கு விஜயம்செய்யவுள்ளதுடன் பல்வேறு நிகழவுகளிலும் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர், முதலில் யாழ்.நாகவிகாரைக்கு செல்லவுள்ளதுடன் பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள, கர்ப்பிணிகளுக்கு 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொள்வார். அத்துடன் யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட, பிரதேச செயலாளர்களுடன்...

நேர்மையே சேவைக்கு உரித்தானது – புதிய யாழ். மாவட்டச் செயலாளர்

மக்களுக்கான சேவையை நேர்மையான வழியில் செய்வதே சிறந்தது என யாழ்.மாவட்டச் செயலராக இன்று புதன்கிழமை (25) கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலாளராக இதுவரை காலமும் கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு மாற்றலாகி செல்வதையடுத்த, இதுவரை காலமும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகராக கடமையாற்றிய நாகலிங்கம் வேதநாயகன் யாழ். மாவட்டச் செயலாளராக...

கெஹெலிய, ஹந்துன்நெத்திக்கு அழைப்பாணை

2011ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோஷலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை (25) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், இவ்விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு யாழ். நீதவான் பொ.சிவகுமார், நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார். இதேவேளை,...

லலித், குகன் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

கைது செய்யப்பட்டு காணாமற்போன லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி முன்னிலை சோஷலிசக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று யாழ். நகரில் இன்று புதன்கிழமை (25) நடத்தப்பட்டது. 'தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?', 'லலித், குகன் ஆகியோரை உடன் விடுதலை செய்', போன்ற வாசகங்கள் ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். லலித்,...
Loading posts...

All posts loaded

No more posts