Ad Widget

திருமண பதிவுக் கட்டணக் குறைப்பு அமுல்

அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் புதன்கிழமை (25) தெரிவித்துள்ளார்.

முன்பு வீட்டுக்கு வந்து திருமணப் பதிவு செய்ய 3,500 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டது. தற்போது அக்கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளருக்கு 1500 ரூபாய் கட்டணம் வழங்க வேண்டிய நடைமுறை தற்போது 750 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, திருமணப் பதிவு தொடர்பான அறிவித்தல் கோரும் நோட்டீஸ் கட்டணம் 100 ரூபாய், பிங்க் போம் (pink form) கட்டணம் 100 ரூபாய் ஆகியவற்றில் எதுவித மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் கூறினார்.

புதிய நடைமுறையின்படி பதிவாளர் கட்டணம் 750 ரூபாய், பதிவுக் கட்டணம் 50 ரூபாய், நோட்டீஸ் கட்டணம் 100 ரூபாய், பிங்க் போம் (pink form) கட்டணம் 100 ரூபாய் என ஆக மொத்தம் 1,000 ரூபாய், திருமணப் பதிவுக் கட்டணமாக அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts