Ad Widget

வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவும் நீர் பற்றாக்குறைய தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்!

வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவும் நீர் பற்றாக்குறைய தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க கட்டார் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆராய அந்நாட்டு அமைச்சு பிரதிநிதிகள் விரைவில் இலங்கை வரவுள்ளனர் என நேற்று (24) இலங்கைக்கு விஜயம் செய்த கட்டார் மன்னர் ஷீக் தம்மி பின் ஹாமட் அல் தானி தெரிவித்துள்ளார்.

kaddar

நேற்று ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் – இலங்கைக்கான விஜயம் குறுகிய காலம் என்ற போதிலும் இது மிக முக்கியமான பயணம் ஆகும். இலங்கையில் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிமாக்குமாறு இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மன்னரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

முதலீடு தொடர்பில கட்டார் ராஜ்யம் மிக ஆர்வத்துடன் உள்ளது என்று கூறிய மன்னர் அதற்கான செயற்றிட்டத்தை ஒழுங்குப்படுத்துவதாக ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

மேலும் இலங்கையில் எரிபொருள் மற்றும் வாயு தொடர்பில் ஆராய்ச்சி செய்வது தொடர்பில் விருப்பம் தெரிவித்த மன்னர் மன்னார் பிரதேசத்தில் அது தொடர்பில் ஆய்வு செய்ய பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையில் பல்வேறு துறைகளுக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

சுமார் 25 ஆயிரம் இலங்கையர் கட்டாரில் பணிபுரிகின்றனர். அவர்களின் நலன்புரியை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

Related Posts