- Thursday
- May 14th, 2026
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியொருவரை விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பெற்றுக்கொண்ட முதலாவது தருணத்துக்கு மஹிந்த ராஜபக்ஷ முகங்கொடுத்தததாக பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான விசாரணை குழுவின் செயலாளர் செயலாளர் லெசில் த சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகளை அனுப்பி விசாரணைகளை முன்னெடுத்தமையானது, பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரணை...
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து பொதுநலவாய மற்றும் வெளி நாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, அமெரிக்கா சமர்ப்பித்துள்ள திருத்தப்பட்ட புதிய பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித அலுவலகம் வௌியிட்ட அறிக்கையின்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை கோரும் அமெரிக்காவின் தீர்மான வரைவு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை தொடர்பான தீர்மானத்திற்குப் பிரதான அனுசரணையாளரான அமெரிக்காவுடன் பிரிட்டன், மஸிடோனியா, மொன்டிநிக்ரோ மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் இணை அனுசரணை வழங்கியுள்ளன. விரைவாக...
வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை வன்புணர்ந்த பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அந்தப் பெண் அவர்களது காலில் விழுந்து கதறியதோடு புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டதால் உயிர்தப்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேலணையிலுள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு இரண்டு சந்தேக நபர்களும் சென்றுள்ளனர். அவர் திருமணமாகி 7...
தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் உறவுப்பாலத்தை வளர்ப்பதற்காக எனது தந்தை பணியாற்றியதை போல, தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை பேணும் வகையில் செயற்படுவேன் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா, வியாழக்கிழமை (24) நடைபெற்ற போது, அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...
'பஞ்சவர்ண நரியார்' சிறுவர் நாடகம், எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் மேடையேறவுள்ளது. குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய இந்த நாடகத்தை செயல்திறன் அரங்க இயக்கம் தயாரித்துள்ளது. நல்லூர் நாடகத் திருவிழா 2015இல் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், புதன்கிழமை (23) ஜெனீவாவுக்கு பயணமானார். வடமாகாண சபையில் விடுமுறை பெற்றுக்கொண்டு, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவின் அனுமதியுடன் இவர் ஜெனீவாவுக்கு சென்றுள்ளார். 'இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்' மற்றும் 'இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனஅழிப்பு'...
ஜெனிவாவில் இலங்கை மீதான நகல் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் புதிய தீர்மானமொன்றை வழமை போல 'ஆக்கபூர்வமான செயற்பாடு' எனும் போர்வையின் கீழ் சீனாவும் ரஷ்யாவும், கியூபாவும் ஆதரவளிக்கின்றன என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை காப்பகம் கூறியுள்ளது. இந்த தீர்மான வரைவின் மீது மனித உரிமை பேரவையில் இலங்கை தூதுக்குழு தொடர்ச்சியாக பல...
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய நகரத்தில் வைத்து கடந்த 22ஆம் திகதியன்று போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட விசேட தேவையுடையவருக்கு எதிராக இதுவரையிலும் ஒன்பது வழக்குகள் உள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த நபர், போக்குவரத்து பொலிஸாரின் சமிக்ஞையை மீறி, மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றதாகவும் அவரிடம், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அவருக்கு எதிராக,...
ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்புரிமையாளர்கின் கணக்கில் இருந்து நூற்றுக்கு 30 சதவீதத்தை கடனாக பெற்றக்கொள்ளும் வேலைத்திட்டம் மாகாண மட்டத்தில் விரிவுப்படுத்துமாறு தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டப்ளியு. ஜே.செனவிரத்ன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த செயற்பாடு, பிரதான காரியாலயத்தில் மட்டும் முன்னெடுக்கப்படுவதால், கடுமையாக தாமதமாகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடன் பெற்றுக்கொள்வதற்கு 65...
இராட்சத விண்கல் ஒன்று இன்று பூமியை கடக்க உள்ளது. இதனால் மனிதகுலமே அழியும் என்ற பீதி கிளம்பி உள்ளது. ஆனால், இதனை நாசா மறுத்துள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள தகவலில், சுமார் 270 மீட்டர் சுற்றளவுடைய இராட்சத விண்கல் பூமியில் இருந்து 50 இலட்சம் மைல் தொலைவில் கடக்க உள்ளது உண்மை தான். ஆனால்...
தமிழக அகதி முகாம்களில் இருந்த ஆறு இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட போது கைதாகியுள்ளனர். கொச்சி பொலிஸாரால் முனம்பம் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலும் இவர்களுடன் நான்கு இந்தியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கும் ஆலோசனை மருத்துவர் டாக்டர் பெண்டன் ஜியாப் கூறுகிறார். சிங்கப்பூரிலிருந்து பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், டாக்டர் ஜியாப், "ஆயரின் உடல் நிலை இப்போது நன்றாக இருக்கிறது. அவரது வலது கையிலும் வலது...
ஆண்டுதோறும் நடக்கும் ஹஜ் யாத்திரையின்போது புனித நகரான மக்காவுக்கு அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியானவர்களின் எண்ணிக்கை 700க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 800க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஹஜ் யாத்திரையின் இறுதிக் கடமையான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வுக்காக மினாவில் யாத்ரீகர்கள் திரண்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து மீட்புப் பணிகளுக்காக நான்காயிரம் பேர் அனுப்பப்பட்டிருப்பதாக...
வருடாந்த ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட சனநெரிசலில் நூறுபேர் கொல்லப்பட்டதாக சவுதி அரேபியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மேலும் 400 பேர் காயமடைந்ததாக கூறப்படுகின்றது.தற்போது மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது. புனித ஹஜ் கடமைகளுக்காக மில்லியன் கணக்கான மக்கள் அங்கு திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் கைதிகளின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் பிள்ளைகளை இழந்த பெற்றோர் என 860 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் இவ்வருட இறுதிக்குள் வழங்கப்படும் என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, குறித்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் பொருட்டு,...
யாழ் முற்றவெளி அரங்கில் காலையில் ஒன்று கூடிய முஸ்லீம் மக்கள் தமது ஹஜ் பெருநாளின் விசேட தொழுகையை மேற்கொண்டதுடன் தமது உறவுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா். ஹஜ் பெருநாள் தொழுகையின் போது நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் மக்கள் சுபீட்சமடைய வேண்டியும் பிரார்த்திக் கொண்டனா். ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை...
பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் 18 வயது முஸ்லீம் மாணவி ஒருவர் எல்லையைக் கடக்க முற்பட்டுள்ளார். அவரை முதலில் துப்பாக்கியால் குறிவைத்த இஸ்ரேலிய ராணுவத்தினர் குறித்த மாணவியை சுட எத்தணித்துள்ளார்கள். அருகில் உள்ள ராணுவ வீரர் ஒருவர் சுடவேண்டாம் என்று சைகை காட்டுகிறார். மாணவியின் பாடசாலைப் பைக்குள் என்ன இருக்கிறது என்று அவர்கள் கேட்டவேளை...
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய ஆசனத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன் அமர்ந்தார். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு உரித்தான ஆசனங்களில் வேறு எவரேனும் உறுப்பினர்கள் அமர்தல் ஆகாது என்பது பாராளுமன்ற மரபாகும். எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்த உறுப்பினர் சரவணபவன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் உரையாடிக்...
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவினால் நடத்தப்பட்ட கையெழுத்து வேட்டையின் போது பெறப்பட்ட ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான கையெழுத்துக்கள் அடங்கிய பிரதிகள் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான அலுவலர் பிரதீப் வகிஸிடம்...
Loading posts...
All posts loaded
No more posts
