- Wednesday
- May 13th, 2026
வடக்கு கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1,37,529 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நவீன துரித வீட்டுத் திட்டக் கட்டுமானப் பணிகளுக்கான ஆர்வலர்களிடமிருந்து திட்டக்கோரலுக்கான பத்திரங்களை நிதியிடல் வசதியுடன் பெற்றுக் கொள்ள புனர் வாழ்வளிப்பு மீள் குடியேற்றம் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு...
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது ஐ.நா.வின் அறிக்கையிலும், குறித்த பிரேரணையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அரசாங்கத்தால் கோரப்பட்டுள்ள சொற்றொடர்கள், புதிதாக இணைக்கப்படவுள்ள சொற்றொடர்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் மனித...
வடபகுதி கடலில் இந்திய டோலர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கண்டித்து, வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம், யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து நடத்திய, அறவழிப் போராட்டம் புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 'அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வடபகுதி கடலை விற்காதீர்கள்'...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமான நடைப்பவணி புதன்கிழமை (23) காலை நடைபெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகிய இந்த நடைபவனியானது, காங்கேசன்துறை வீதி வழியாக சென்று மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து, அங்கிருந்து கல்லூரி வீதி பலாலி வீதி சந்தியை சென்றடைந்து பலாலி வீதி வழியாக கந்தர்மடச் சந்தியை அடைந்து,...
நுணாவில், அல்லிக்கரை ஒழுங்கையிலுள்ள வீடுகள் இரண்டு 15 பேர் கொண்ட இனந்தெரியாத குழுவொன்றினால் செவ்வாய்க்கிழமை (22) இரவு 11 மணியளவில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்த இருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலசுப்பிரமணியம் சந்திரலேகா (வயது 56), அவரது மகன் பாலசுப்பிரமணியம் அஜந்தன் (வயது 35) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
கைதடிப் பகுதியில் இரண்டு பெண்களை தாக்கி, அவர்களின் ஆடைகளைக் கிழித்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரம், புதன்கிழமை (23) உத்தரவிட்டார். கைதடி பகுதியிலுள்ள சனசமூக நிலையமொன்றில், கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில்,...
சுன்னாகம் நகரப்பகுதியில், பாடசாலை மாணவர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும், நான்காவது சந்தேகநபரை எச்சரித்த நீதவான், அவரை...
மோட்டார் சைக்கிளில் பயணித்த விசேட தேவையுடைய ஒருவரை, போக்குவரத்து பொலிஸார் நடைபாதையில் போட்டு புரட்டி, புரட்டி தாக்கிய சம்பவம் கஹட்டகஸ்திகிலிய நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கஹட்டகஸ்திகிலிய பொலிஸின் போக்குவரத்து பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் நேற்று முன்தினம் 22ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலைவேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீடியோ சமுக மற்றும் செய்தி வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன....
கிளிநொச்சி நீதிமன்றில் இருந்து திருடி வந்த 18 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய வவுனியா மாவட்ட நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி நீதிமன்றில் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அறை...
தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான தாச்சி விளையாட்டுப் போட்டி அடுத்தாண்டு முதல் வடமாகாண மட்டத்தில் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடத்தப்படவுள்ளதாக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த. குருகுலரசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். அவர்...
ஜப்பானில் 105 வயதுடையவர்களுக்கான ஓட்டபந்தயப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 100 மீ துாரத்தை 42.22 விநாடிகளில் கடந்து ஜப்பானை சேர்ந்த ஹிடோகிசி மியாஸாகி(105) புதிய கின்னஸ் சாதனை படைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் , கூடுதல் பயிற்சி செய்து, 'மின்னல் மனிதன்' உசைன் போல்ட்டுடன் போட்டியிடுவதே தனது லட்சியம் எனக் கூறினார். முன்னதாக தனது...
தன்னலம் பேராசைகளிலிருந்து விடுபட்டு ஏழை எளியோர்க்கு வாரி வழங்கி சமூகத்தின் உயர்வு, தாழ்வுகளை போக்க அனைவரும் முன்வர வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முழு மனித சமூகமும் ஆன்மீக மற்றும் லெளகீக ரீதியிலான வெற்றியை அடைந்துகொள்ள வேண்டுமாயின் நாம் அனைவரும் தன்னலம்...
மன்னார் வளைகுடா பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருப்பதால், இந்தியாவின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு செல்லும் பெரிய கப்பல்கள், இலங்கையை சுற்றி செல்ல வேண்டி இருக்கிறது. இதனால், பெரிய கப்பல்கள் செல்வதற்கு வசதியாக மன்னார் வளைகுடா பகுதியில் கடலை ஆழப்படுத்தும் சேது சமுத்திர திட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்...
‘என்னை அறிந்தால்...’ படத்தை அடுத்து ஏ.எம்.ரத்னம் மிக பிரமாண்டமான முறையில் அஜித்குமாரை வைத்து ஒரு புதிய படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. படத்துக்கு பெயர் சூட்டப்படாத நிலையில், இந்த படம் வேகமாக வளர்ந்து வந்தது. படத்தின் பெயரை அறிந்து கொள்வதற்கு அஜித்குமார் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணைக்கான வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ எண்ணைக்கான விஷேட பாண்ட வரி 90 ருபாவில் இருந்து 110 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய எண்ணெய் உற்பத்தியாளர்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்று கைதான சந்தேகநபர் தானே அதனைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரயந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர் தொடர்ந்தும் காவலில் வைக்கப்பட்டு விசாரணை...
வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தமக்கிடையே மோதிக் கொண்டதால் சபை நடவடிக்கைகள் நேற்று பாதிப்படைந்தன. நீண்ட நாட்கள் நிலவி வந்த பனிப்போர் நேற்றைய தினம் கடுமையாகியதாலேயே சபை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. முதலமைச்சர் தலைமையில் அவைத் தலைவர் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்த இரு அணிகளும் நேற்று மோதிக் கொண்டன. இதனை எதிக்கட்சியினர் அமைதியாக இருந்து...
வேலணை, சரவணை பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை, கத்தி முனையில் கடத்திய இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (22) மாலை கைது செய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். திருமணமாகி 8 மாதங்களாகிய குடும்பப் பெண்ணை, இரண்டு சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை (22) காலையில் கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை...
எவன்காட் சம்பவம் குறித்து தொடர்ந்தும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்...
யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 20 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி யாழ். நகரப்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ்....
Loading posts...
All posts loaded
No more posts
