என்னை திட்டிய ரவிசாஸ்திரி மீது நடவடிக்கை எடுக்கவும் – ஆடுகள பராமரிப்பாளர் கடிதம்

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 25-ந் தேதி நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்ததுடன், தொடரையும் இழந்தது. இதில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் குவித்தது. அந்த அணியில்...

பல்கலை மாணவர்கள் மீதான பொலிஸாரின் தடியடி ; அறிக்கை கோருகிறார் ரணில்

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தடியடி தாக்குதல் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு சட்ட ஒழுங்கு மற்றும் சிறசை்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு பணிப்புரை விடுத்துள்ள பிரதமர், விசாரணை அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் இனங்ககோனுக்கு பணித்துள்ளார்....
Ad Widget

முல்லைத்தீவில் தொடர்ந்தும் அபகரிக்கப்படும் மக்களின் பூர்வீக நிலங்கள்

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான காணியை பிரிகேடியர் வனசிங்க தலைமையிலான 682 ஆவது காலால் படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளதாக காணியை இழந்த மக்கள் தெரிவித்துள்ளனர். வடக்கில் புதுக்குடியிருப்பு - புதுமாத்தளன் வீதியையும், கிழக்கில் வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வீதியையும், தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள வீதிகளையும் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காணியில் ஏழே முக்கால்...

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் முஸ்லிம்கள் போராட்டம்

யாழ் முஸ்ஸிம் மக்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்னும் கருப் பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. யாழ் மாவட்ட முஸ்லிம் அமையத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவர்கள் எமக்கான நீதியினை பெற்றுத்தர வேண்டும் மற்றும் அதற்கான அணைக்குழுவொன்று வேண்டும், எமது மீள்குடியேற்றத்தில் அரச அதிகாரிகள் கவனம்...

விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்து செல்கின்றமை மனவேதனை அளிக்கிறது – மஹிந்த

பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்து செல்கின்றமை தனக்கு உளத் துன்புறுத்தலாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவுக்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

ஆசிரியை கொலை செய்த மாணவனுக்கு மரணதண்டனை

தனக்குக் கற்பித்த ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று, அவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு கொலை செய்ததாகக் கூறப்படும், அவரது மாணவனைக் குற்றவாளியாக இனங்கண்ட மாத்தறை மேல் நீதிமன்றம், அவரதுக்கு நேற்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மாத்தறையில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையடிப்பதற்காகச் சென்றிருந்தபோதே, அவர், ஆசிரியையைப் படுகொலை செய்திருந்தார். 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தில் மாத்தறை...

பின்லேடன் கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் பற்றி அம்பலமானது

பின்லேடன் கொலையில் ஒபாமாவுக்கு சட்ட வழிமுறைகள் வகுத்து தந்தது 4 வக்கீல்கள்தான் என்பது உள்ளிட்ட இரகசிய தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் இராணுவ தலைமையகம் மீதும், நியூயோர்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி விமானங்களை மோதி அல்கொய்தா தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தி 3,000 பேரை...

மாற்று வலுவுடைய மாணவிகள் துஷ்பிரயோகம் : அதிபருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைக்கு விளக்க மறியல்

மாற்று வலுவுடைய மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு துணையாக இருந்தார் எனக் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியையை விளக்கமறியலில் வைக்க யாழ். சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதடி நவீல்ட் மாற்று வலுவுடையோருக்கான பாடசாலையில் கல்வி கற்ற 5 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டில் அதன் அதிபர் மூன்று மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு இருந்தார். துஷ்பிரயோகத்துக்கு...

கொத்து ரொட்டிக்குள் ரோமம், தீக்குச்சி!- யாழ் உணவகமொன்றிற்கு எதிராக வழக்கு

யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றின் மீது வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகத்தின் மீது பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. குறித்த உணவகத்தில் கொத்து ரொட்டி பாசல் ஒன்றை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், அதனுள் தீக்குச்சி மற்றும் இறைச்சியில் அகற்றப்படாத ரோமம் ஆகியன உள்ளமை கண்டு குறித்த உணவகத்திற்குச்...

தாழமுக்க வலயமானது வலுவடைந்து சூறாவளியாக மாற்றம்!

கடந்த சில தினங்களாக அராபியக்கடல் பகுதியில் தோன்றியிருந்த தாழமுக்க வலயமானது படிப்படியாக வலுவடைந்து, தற்போது அயனமண்டல (Tropical Storm) சூறாவளியாக உருவெடுத்துள்ளது. இதற்கு சபாலா (Chapala) என பெயரிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை (2015.10.30) செய்யப்பட்ட அவதானிப்பின் போது, இந்த சபாலா சூறாவளியானது மணித்தியாலத்திற்கு 07 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது தற்போது...

குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி

2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற அழகிப் போட்டியில் கிரீடம் சூடிய இளம் பெண் குறித்து இந்நாட்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Miss Uncensored எனும் பெயரில் தாய்லாந்தில் இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர், தாய்லாந்தின் ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்த மின்ற் கனிஸ்டா என்பவராவார். இவரது தாய், பாதையிலுள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் தொழிலில்...

யாழ்.போதனா வைத்தியசாலை ‘பாஸ்’ நடைமுறை நீக்கம், பார்வையிடும் நேரங்களிலும் மாற்றம்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளை மறுதினம் தொடக்கம் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெறவருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்த நடைமுறைகளுக்கு பொதுமக்கள் அனைவரையும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 6மணிமுதல் காலை...

தாய்லாந்தில் விபத்து: இலங்கையர்கள் படுகாயம்

தாய்லாந்து, போத்ரம் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று, பள்ளமொன்றில் தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானதில் 22 இலங்கை சுற்றுலாப்பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் கைது

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், HNDE மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து, 39 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 5 பெண்களுடம் 2 பிக்குமாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள் நூற்றுக்கணக்கில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படுகின்ற போதிலும், இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஒன்பது கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆணைக்குழுவின்...

தமிழரின் உரிமைகளை சிங்களவர் அன்பளிப்பாகத் தரமாட்டார்கள் போராடியே பெறவேண்டும் – சொல்ஹெய்ம்

இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழர்கள் தமது உரிமைகளைப் போராடியே பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கும்...

டெங்குவினால் நடிகர் விவேக்கின் மகன் மரணம்!

டெங்குவின் கோரப் பிடியில் சிக்கி சென்னையில் உயிர் துறந்தார் நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா (வயது 13). பிரசன்னாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அது என்ன நோய் என்று ஆரம்பத்தில் கண்டறிய முடியவில்லை. பின்னர்தான் டெங்கு காய்ச்சலால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்குள் உடல்நிலை மோசமாகி, கோமா நிலைக்குப் போய்விட்டார். சென்னை...

ஏஞ்ஜலினா ஜோலியின் ஸ்பெஷல் புகைப்படங்கள்: எடுத்தது யார் தெரியுமா?

ஹாலிவுட்டின் எவர்கிரீன் அழகி, அகதிகளுக்கான ஐ.நா. சபை ஆணையத்தின் சிறப்புத் தூதர், பாலியல் வன்முறைக்கு எதிரான அமைப்பின் இணை நிறுவனர். உலகில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளர் என்று பன்முகங்கள் கொண்ட ஏஞ்ஜலினா ஜோலியின் ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. சினிமாவிலும் சரி நிஜ வாழ்விலும் சரி...

தனுஷுக்கு அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர்

தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடித்துள்ள ‘தங்கமகன்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இவ்விரு படங்களுக்கு பிறகு தனுஷ், துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகள் இருவரை ஒப்பந்தம் செய்ய முடிவு...

மஹிந்தவின் மேலும் ஒரு நிலக்கீழ் மாளிகை கண்டுபிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மாளிகை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழி என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான நிலக்கீழ் மாளிகை ஒன்று அலரி மாளிகையினுள் உள்ளதாக அபயராமையில் வைத்து அவர் குறிப்பிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ச கூறும் வகையில் மேலும் ஒரு நிலக்கீழ் பதுங்கு குழி...
Loading posts...

All posts loaded

No more posts