சில அத்தியவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை

அத்தியவசிய பொருட்கள் சிலவற்றை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி பருப்பு ஒரு கிலோ 190 ரூபாவாகவும், கிழங்கு ஒரு கிலோ 145 ரூபாவாகவும், வெங்காயம் ஒரு கிலோ 155 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் கோழியிறைச்சி ஒரு கிலோ 480 ரூபாவாகவும்,...

இலங்கைப் பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்லும் உத்தரவு குறித்து மேன்முறையீடு

இலங்கைப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் விதித்துள்ள தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்ய வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சவுதியில் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் பிறிதொருவருடன் தகாத உறவைப் பேணியதாக கூறி ஷரியா சட்டத்தின் பிரகாரம் அவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது....
Ad Widget

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றமில்லை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றமில்லை. நாக்பூர் (நவ.25-29), டெல்லி (டிச.3-7) டெஸ்ட் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), முரளிவிஜய், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, ரோகித் சர்மா, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன்,...

பஞ்சாங்கம், நாசா குறிப்பிடுவது போல் சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்யுமா? எஸ்.ஆர்.ரமணன் பதில்

வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை கொட்டியது. அதிலும் குறிப்பாக கடந்த 14-ந் தேதி (சனிக்கிழமை) இரவு முதல் 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) முதல்...

பாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை

பாரிஸில் சென்ற வாரம் 129 பேரை பலிகொண்ட பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படுபவரை இலக்குவைத்து பாரிஸின் புறநகர்ப் பகுதி ஒன்றில் அடுக்கு மாடிக் குயிருப்பு வீடொன்றில் ஆயுத பொலிசாரும் சிப்பாய்களுமாக அதிரடி வேட்டை ஒன்றை நடத்தியுள்ளனர். சந்தேக நபர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். அதில் ஒருவர் பெண் என்றும் அவர் தன் மீது...

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க அமைச்சரவை அனுமதி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பிலான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது . இது குறித்து பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்று இடம் பெற்ற கூட்டத்தின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் இன்று...

‘திறமைக்கு தொழில்’ தொழிற்சந்தை கொழும்பு மாவட்டச் செயலகத்தில்

'திறமைக்கு தொழில்' தொழிற்சந்தை இம்மாதம் 20ஆம் திகதி காலை கொழும்பு மாவட்ட செயலகத்தின் முதலாவது மாடியில் அமைந்துள்ள பிரதான கேட்போர்கூடத்தில நடைபெறவுள்ளது. கைத்தொழில் தொடர்பு அமைச்சின் ஆளணி மற்றும் தொழில்வாய்ப்பு திணைக்களத்தின் கீழ் கொழும்பு மாவட்டச் செயலகத்தின் மக்கள் சேவை மத்தியநிலையம் இத்தொழில் சந்தையை ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் தொழில்சந்தையில் பங்குபற்றவிருப்போருக்காக பிரபல பேச்சாளர்...

சவுதியில் விபச்சாரக் குற்றம் : இலங்கை பணிப்பெண்ணை கல்லெறிந்து கொலை செய்ய நீதிமன்றம் தீர்ப்பு!!

விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை பணிப்பெண் ஒருவரை கல்லெறிந்து கொலை செய்ய சவுதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு, மருதானைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சவுதியில் பணி புரியும் மற்றுமொரு இலங்கை ஆணுடன் இவர் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இந்த இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 கசை அடிகள்...

சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தீர்மானித்துள்ளது. ​மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற முறையில் சிறுவர்கள் பயணிக்கும்போது விபத்துக்கள் நேர்வதாக சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். இருவர் மாத்திரம் பயணிக்க கூடிய மோட்டார் சைக்கிளில் மூவர் அல்லது நால்வர் பயணிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள...

அங்கஜனால் கொலை மிரட்டல்?

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (17) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். நல்லூர், கோவில் வீதியில் அமைந்துள்ள அங்கஜனது அலுவலகத்தக்கு தன்னை அழைத்து, அவருடன் இணைந்து செயற்படவில்லையெனவும், இதனால் வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்...

பாரீசில் மீண்டும் கடும் துப்பாக்கி சண்டை !!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ம் திகதி இரவு தீவிரவாதிகள் ஹோட்டல், கேளிக்கை விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர். அதில், 129 பேர் பலியாகியதோடு, 352 பேர் காயம் அடைந்தனர். இந்த தொடர் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஈவு இரக்க மற்ற இத்...

விறகு வெட்டிக் கொண்டிருந்த பாட்டியின் அருகில் சென்ற குழந்தை பரிதாபமாக பலி

மஹியங்கன - தியகோமல பிரதேசத்தில் கோடரி தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. தனது பாட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த குழந்தை அந்தப் பக்கம் சென்றுள்ளது. இதன்போது குழந்தையின் தலையில் கோடரி தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனால் படுகாயமடைந்த குழந்தை பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு...

கிளிநொச்சியில் வெள்ளப்பாதிப்பால் இடம்பெயர்ந்தவர்களுக்கு வடக்கு விவசாய அமைச்சால் உலர் உணவு விநியோகம்

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்தார் முதலமைச்சர்!

யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று நேரில் பார்வையிட்டு, உலர் உணவு பொதிகளையும் வழங்கினார். கடந்த 3 தினங்களாக யாழ்.குடாநாட்டிலும் பெய்த கனமழையினால் தாழ்நில பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்து தங்கியுள்ள கல்லாரை பகுதியை சேர்ந்த...

லீலை மன்னனுக்கு நையப்புடைப்பு : பாதிக்கப்பட்ட பெண்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை!!

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து வந்த நபரை, பிரதேச மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தோப்பூர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அப்துல் கலீம் (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு நையப்புடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், நல்லூர்...

தமது விடுதலைக்காக அமையம் ஒன்றை உருவாக்கி, பெரும் கூட்டமாக போராடுமாறு அரசியல் கைதிகள் வலியுறுத்து!

தமது விடுதலைக்காக வடக்கு மாகாண முதலமைச்சரையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமுக மனித உரிமை அமைப்புகள், சட்டவாளர்கள், சர்வ மதத்தலைவர்கள், புலம்பெயர் உறவுகள் ஒன்றுபட்டு, தமது விடுதலைக்காக ஒரு அமையம் ஒன்றை உருவாக்கி, குழுவாக சகல முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என்று அரசியல் கைதிகள் தெரிவித்தனர். நாடு முழுக்கவும் உள்ள...

காணாமற் போகச்செய்யப்பட்ட 5,000 பேர் குறித்த தகவல்கள் ஐ.நாவிடம் கையளிப்பு!

காணாமற் போகச்செய்யப்பட்ட சுமார் 5 ஆயிரம் பேரின் விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஐ.நா. செயற்குழு பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்றும் காணாமற் போகச்செய்யப்பட்டோரின் பெற்றோர்கள் ஒன்றியம் அந்த அறிக்கையை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள குறித்த குழுவிடம் கையளித்துள்ளது. குறித்த அறிக்கையில் காணாமற் போகச்செய்யப்பட்டோர் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியத்தின் அழைப்பாளர்...

புலம்பெயர் இலங்கையர் நாடு திரும்பவேண்டும்! பிரதமர் ரணில் அழைப்பு!!

"யுத்தம், அரசியல், மதப் பிரச்சினைகளால் இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியுள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும்'' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது. உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில்...

பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்கு படையினர்களின் உதவிக்கரம்!

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வன்னி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் 700 க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட பள்ளியாறு, வண்ணிக்குளம், மண்டகலாறு, பண்ணங்கண்டி,நெடகலியாறு பகுதிகளிலும், முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட முதியகட்டு பகுதியிலும், வன்னி பாதுகாப்பு தலைமையகத்துக்குற்பட்ட கொக்கிலாய்,...

மூன்றாம் தவணைக்காக பாடசாலை விடுமுறை டிசெ.4 இல்!

இவ்வருடத்துக்கான மூன்றாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் டிசெம்பர் 04 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி திறக்கப்படுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் (16) வட மாகாண பாடசாலைகளில் மூடப்பட்டமைக்குப்...
Loading posts...

All posts loaded

No more posts