பூபாலப்பிள்ளை பிரசாந்தன் டிசம்ர் 01 வரை தடுப்புக் காவலில்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தனின் தடுப்புக் காவல், மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் டிசம்பர் 01ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க...

யாழில் மழை காரணமாக 52 ஆயிரத்து 270 பேர் பாதிப்பு; 2 ஆயிரத்து 57 குடும்பங்கள் முகாம்களில்

யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களாக பெய்துவரும் அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 14 ஆயிரத்து 334 குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 57 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 486 பேர் 42 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்....
Ad Widget

வடமாகாண சபை செயலற்று கிடக்கிறது; கூட்டமைப்பினருக்கே திருப்தியில்லை

மத்திய அரசினால் வழங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட நிதியில் இருந்து 38 சதவீத நிதிகளையே வடமாகாண சபை பயன்படுத்தியுள்ளதாகவும், ஏனைய நிதிகள் கிடப்பில் இருப்பதாகவும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு...

சீவலப்பேரி பாண்டி இரண்டாம் பாகத்தில் கமல்?

சீவலப்பேரி பாண்டி படம் நினைவிருக்கிறதா? நடிகர் நெப்போலியன் ஹீரோவாகக் களமிறங்கி கலக்கிய படம். நெல்லையில் உள்ள சீவலப்பேரி என்ற கிராமத்தில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் இது. ரிவியில் தொடராக வந்தபோது கிடைத்த வரவேற்பைப் பார்த்து திரைப்படமாக எடுத்தனர். பாண்டி என்ற அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் நெப்போலியன். அச்சு அசலான அவரது...

தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் : 5 பெரும் நட்சத்திரங்களை இணைக்கிறார் பாலா

பாலிவுட்டில் மல்டி ஸ்டாரர் எனும் பல பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படங்கள் சர்வசாதாரணமாக வருவது வழக்கம். எண்பதுகளில் அமிதாப், ரஜினி, கமல் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடித்தார்கள் (இந்தி). ஆனால் தமிழில் அது மிக அரிதாகத்தான் இரு பெரும் ஹீரோக்கள் இணைந்து நடிப்பார்கள். முன்பு கார்த்திக் - அஜீத் அப்படி சில...

அஜித்துடன் பேச 20 நிமிடங்களே கிடைத்தது: பால சரவணன் வருத்தம்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு அறிமுகமானவர் பால சரவணன். இவர் தமிழில் ‘குட்டிப்புலி’, ‘என்றென்றும்’, ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளர். தற்போது, அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேதாளம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பாலசரவணன் கூறும்போது, நான் வேதாளத்துக்காக சென்னை மற்றும் கொல்கத்தாவில்...

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ஜான்சனுக்கு சச்சின் வாழ்த்து

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஜான்சன். 34 வயதான இவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று அறிவித்தார். நியூசிலாந்துக்கு எதிராக பெர்த் மைதானத்தில் முடிந்த டெஸ்டோடு ஜான்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். மிச்சேல் ஜான்சன் 73 டெஸ்டில் விளையாடி 311 விக்கெட் கைப்பற்றியுள்ளார். சராசரி 28.52...

யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் கஜேந்திரகுமார்

யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். நேற்று பிற்பகல் யாழ் சிறைச்சாலைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். செல்வராசா கஜேந்திரன் திருமதி பத்மினி சிதம்பரநாதன், மற்றும் சட்டத்தரணி திருக்குமார் ஆகியோர் சென்று கைதிகளை சந்தித்து...

இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்வர்களுக்கான உரிய ஏற்பாடுகள் குறித்து டக்ளஸ் வலியூறுத்தல்!

அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்கள் உரிய முறையில் உரிய அளவில் வழங்கப்படுவதன் அவசியம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் வலியூறுத்தியூள்ளார். அண்மைக்கால அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள்...

நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றிய நிஜ ஹிரோ!!

லெபனானின் , பெய்ரூட்டில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 44 பேர் உயிரிழந்ததுடன் , சுமார் 200 பேர் வரை காயமடைந்தனர். இக் குண்டு வெடிப்புகளின் போது நபரொருவர் தனது உயிரை பறிகொடுத்து , பல நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அடெல் டேர்மோஸ் என்ற அந்நபர் சம்பவத்தின் போது தனது மகளுடன் சந்தைக்கு சென்றுள்ளார். இதன்போது ஒரு...

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் நிறைவு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்று காலை இவர்கள் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தம்மை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம் மற்றும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை போன்றவற்றில் இருந்த அரசியல் கைதிகள்...

பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) சென்னையில் காலமானார். பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார். தென்னாப்ரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார் தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல...

சர்வதேச திரைப்பட விழாவில் 6 விருதுகளை அள்ளியது உத்தமவில்லன்

சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 6 விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது கமல் ஹாசன் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் திரைப்படம். கமல் ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, ஊர்வசி மற்றும் நாசர் நடிப்பில் வெளியான திரைப்படம் உத்தமவில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்த இப்படத்தை லிங்குசாமியுடன் இணைந்து கமல் தயாரித்து இருந்தார். ஜிப்ரான் இசையில் கடந்த மே...

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிறையில் எந்த ஒரு அரசியல் கைதியும் இல்லை

சிறைச்­சா­லை­களில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதி­களில் உடல்நிலை அசா­தா­ரண நிலைக்கு ஆளான எவரும் சிறைச்­சா­லைக்குள் இல்லை. அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் ஒரு கைதிக்கு சிறைச்­சாலை வைத்­தியசாலையில் சேலைன் செலுத்­தினோம் என்று சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் ரோஹண புஷ்­ப­கு­மார தெரி­வித்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகளின் நிலைவரம் தொடர்பாக கேட்போதே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

ஆனந்தசங்கரி தலைமையில் கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தலைமையில், கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கருத்து வெளியிட்ட ஆனந்தசங்கரி, சிறையிலுள்ள அரசியல் கைதிகளை தற்காலிகமாக புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுப்பார்கள்: பிணையில் வந்த கைதி நம்பிக்கை

தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தாங்கள் பூரணமாக நம்புவதாக பிணையில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊறணியை சேர்ந்த அழகையா சுதாகரன் என்பவர் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். அவரை கிழக்கு...

புனர்வாழ்வு குறித்த கைதிகளின் கோரிக்கையை அரசு சாதகமாக பரிசீலிக்கும்

தம்மை புனர்வாழ்வுத் திட்டத்தில் சேர்த்து பின்னர் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை, இலங்கை அரசு சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்திருக்கிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் குறித்து கலந்தாலோசிக்க கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட சுமந்திரன்,...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் விஜய் நற்பணி மன்றம் உதவி

யாழ் விஜய் நற்பணி மன்றம், யாழ் வர்த்தகர்கள் எற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலையில் உள்ள மக்களுக்கு உணவுப்பொருட்கள்,குடிநீர் மற்றும் ஆடைகள் வழங்கிவைக்கப்பட்டது. யாழ்.மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று தினங்களாக பெய்த கனமழையினால் மாவட்டத்தில் தாழ்நில பகுதிகளிலிருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கின்றது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் இடம் பெயர்ந்த குடும்பங்களின்...

பஞ்சாங்கத்தில் புயல் பற்றிய கணிப்பு : 22ம் திகதி புயல்!!

வானத்தில் சுழலும் நவகிரகங்களின் இயக்கம், அதனால் உலகில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை தொடர்பான குறிப்புகள் அடங்கியது ‘பஞ்சாங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் நவீன வானியல் ஆய்வுக்கருவிகள் இல்லாத சூழ்நிலையில், முனிவர்கள் நவ கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாக கணித்தனர். தங்களது கணிப்புகளை சுலோகங்களாக (பாடல்களாக) எழுதியும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை...

விஜய் படத்துக்கு தலைப்பு உறுதியானது?

விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விஜய்க்கு 59-வது படம் என்பதால் விஜய் 59 என்ற தலைப்பு வைத்தே அழைத்து வந்தனர். இந்நிலையில், இப்படத்திற்கு ‘காக்கி’, ‘வீரன்’ ஆகிய தலைப்புகளை படக்குழுவினர் பரிசீலனை செய்து வந்தனர். இந்த படத்தில் விஜய், போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் இந்த தலைப்புகளை பரிசீலித்து வந்தனர்....
Loading posts...

All posts loaded

No more posts