கிறிஸ்துமஸ் மரத்திற்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் தேவாலயத்தில் இடமில்லை

இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் (நத்தார் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்) கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று ஆயர்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை ஆயர்கள் மன்றத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 'கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வழிபாட்டுக்கு உரியவை அல்ல' என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய...

2015-ம் ஆண்டிற்கான உலக அழகியாக பிலிப்பைன்ஸ் அழகி தெரிவு!

2015-ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் வென்றுள்ளார். உலக அழகி போட்டியில் மிஸ் கொலம்பியா அரியட்னா குடியர்ரெஸ் இரண்டாவது இடத்தினையும், மிஸ் யுனிவர்ஸ் யு.எஸ்.ஏ ஒலிவியா ஜோர்டான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் நேற்று நடந்த 65வது உலக அழகிப்...
Ad Widget

இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா? அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ்,வலி வடக்கு மக்கள் தங்கியிருக்கும் கோணப்புலம் நலன்புரி முகாமுக்கு சென்றிருந்தார். அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறுவர்கள் உட்பட அனைத்து...

தலைகீழாகத் தொங்கிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த!!

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனநிலையை திடப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரம் கைவிட்டு போன பின்னர் முன்னாள் ஜனாதிபதி அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 70வது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடிய இவர், மறுதினம் இலங்கையின் புகழ்பெற்ற...

யாழ். ஆயரைச் சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி!

நேற்று யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். யாழ். ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில், அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மீள்குடியேற்றம் தொடர்பில் மாகாணக் கொள்கை

வட மாகாணத்தில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான தேவைகளைக் கண்டறிவதற்காக மாவட்ட மட்டத்திலான கூட்டம் 5 மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளது. அத்துடன், மீள்குடியேற்றம் தொடர்பிலான மாகாண கொள்கை உருவாக்கப்படுவதாகவும் இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியிடம் அதனைக் கையளிக்கவுள்ளதாகவும் வட மாகாண புனர்வாழ்வு அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கின் 5 மாவட்டங்களிலும் கூட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலேயே அவர்...

மண்ணைக் கவ்வியது இலங்கை ! டெஸ்ட் தொடர் நியூஸிலாந்து வசம்

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முதலாவதாக இடம்பெற்ற டெஸ்டில் நியூஸிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது...

பாடசாலைகளுக்கு அதிவேக இணையத்தள வசதிகள்!

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இணையத்தள வசதியை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு தேசிய அதி வேக இணையத்தள வேலைத்திட்டம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்துதல் ஆணைக்குழு ஆகியவற்றுடன் ஒன்றிணைந்தே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. தற்போது சில பாடசாலைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள 128 Kbps...

இந்தியாவின் உதவியுடன் இலங்கை ராணுவம் நவீனமயமாக்கப்படும்

இந்தியா உள்ளிட்ட மேம்பட்ட நாடுகளின் உதவியுடன் நாட்டு ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த சில படைப் பிரிவினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு, தியாதலாவா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்க பேசியதாவது: ஆசியக் கண்டத்தில் இந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு அடுத்தபடியாக பழைமையானது இலங்கை ராணுவம்....

சென்னையின் எஃப்சி சாம்பியன்

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில், 3-2 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழத்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னையின் எஃப்சி. இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி, கடந்த அக்.3-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை...

சுனாமியை நினைவூட்டும் டிசம்பர் மாதம்: மீண்டும் மீண்டும் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் உள்ள போர்னியோ தீவுப்பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை. சுனாமி ஏற்படுவதற்கான...

பீப் பாடல் பற்றி நடிகர் சங்கம் விளக்கம்

சிம்பு எழுதி பாடி அனிருத் இசையமைத்திருப்பதாக கூறப்படும் பீப் சாங், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பாடல் பற்றி நடிகர் சங்கம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘‘முறையாக வெளியிடப்பட்டதா?, திருட்டுத்தனமாக...

தெறி கிளைமாக்ஸ் காட்சிக்காக விஜய் எடுத்த ரிஸ்க்

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு சென்னை ஒமேகா தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை...

பீப் பாடலால் ஏற்பட்ட களங்கத்தை என் கண்ணீரால் துடைக்க விரும்புகிறேன் ! டி.ஆர்

நடிகர் சிம்பு எழுதி, பாடியதாக வெளிவந்த ‘பீப் சாங்’ பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த பீப் பாடல் வெளியானது குறித்து நடிகர் சிம்பு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிம்புவின் அப்பாவும், பிரபல இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தரும் இந்த பாடலுக்கு விளக்கம் அளிக்கும்விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, இந்தப் பாடல்...

அரசத்துறை பணியாளர்களுக்கு 2500 ரூபா அடிப்படை சம்பளத்தில் சேர்ப்பு

அரசதுறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவில் 2500 ரூபா எதிர்வரும் ஜனவரி முதல் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வரவுசெலவுத்திட்ட இறுதியுரையில் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை வரவுசெலவுத்திட்ட சமர்ப்பிப்பின் பின்னர் இடம்பெற்ற குழுநிலை விவாதங்களின் போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி 35,500 மில்லியன் ரூபாய்கள் மேலதிக...

கோத்தபாயவைக் கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி அழுத்தம்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் எழுப்பப்பட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்கள் சுயேச்சையாக...

கிராம இராஜ்ஜிய திட்டத்துக்கு கூட்டமைப்பு போர்க்கொடி!

மாகாணசபைக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் 'கிராம இராஜ்ஜியம்' திட்டம் அமைந்துள்ளதால் அதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எனவே, இந்தத் திட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பொருளாதார...

முதலமைச்சர் விக்கி தலைமையில் தமிழ் மக்கள் பேரவை உதயம்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வன் தலைமையில் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான செய்திகள்  வெள்ளிக்கிழைமை இரவு தெரியவந்திருந்தது எனினும் கூட்டவிபரங்கள் இரகசியமாகவே பேணப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெற்ற இரகசிய கூட்டத்திலேய இந்தக்...

வரவுசெலவு 2016 : அதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2016 வரவுசெலவுக்கான இறுதி வாக்கெடுப்பு நேற்று (19) 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக51 வாக்குகளும் கிடைத்துள்ளன.13 பேர் சமூகமளிக்கவில்லை. எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது வரவுசெலவு திட்டம் கடந்த நவம்பர் 20ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் 11 அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்புடன் சமர்ப்பிக்கப்பட்டது. ஐக்கிய...

இராணுவத்தினர் வசமுள்ள பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் – பிரதமர்

வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வடக்கில் இராணுவத்தினரினால்...
Loading posts...

All posts loaded

No more posts