Ad Widget

கிறிஸ்துமஸ் மரத்திற்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் தேவாலயத்தில் இடமில்லை

இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் (நத்தார் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்) கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று ஆயர்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை ஆயர்கள் மன்றத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

‘கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வழிபாட்டுக்கு உரியவை அல்ல’ என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய வழிபாட்டு இயக்குநர் அருட்தந்தை இக்னேஷியஸ் வர்ணகுலசிங்கம் கூறினார்.

‘கிறிஸ்துமஸ் மரங்கள் வீடுகளுக்கு உரியவை- அவை தேவாலயங்களுக்கு உரியவை அல்ல’ என்றும் அருட்தந்தை வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வெவ்வேறு காரணங்களுக்காக பிற்காலத்தில் வந்தவை என்றும், வணிக காரணங்களுக்காக அவை பிரபல்யபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த விடயங்கள் கிறிஸ்தவ வழிபாட்டுக்கு முரணானவை என்றும் அருட்தந்தை தெரிவித்தார்.

இலங்கையில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மரங்களை வைக்கின்ற வழக்கம் நீண்டகாலமாக இருந்துவருகின்றது.

அந்த நடைமுறையை மாற்ற வேண்டியது அவசியம் என்று கத்தோலிக்க திருச்சபை கருதுவதாக அருட்தந்தை இக்னேஷியஸ் வர்ணகுலசிங்கம் கூறினார்.

Related Posts