Ad Widget

பாடசாலைகளுக்கு அதிவேக இணையத்தள வசதிகள்!

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இணையத்தள வசதியை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு தேசிய அதி வேக இணையத்தள வேலைத்திட்டம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்துதல் ஆணைக்குழு ஆகியவற்றுடன் ஒன்றிணைந்தே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது சில பாடசாலைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள 128 Kbps இணையத்தள சேவைக்கு பதிலாக வேகமாக செயற்படக்கூடிய நவீன தொழில்நுட்பத்துடனான 10 Mbps இலிருந்து 100 Mbps வரையான வேகமான இணைய வசதி சகல பாடசாலைகளுக்கும் பெற்றுக் கொடுக்கப்படும்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே கொழும்பு காலி மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட 60 பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதிவேக இணைய வசதியினை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது பாடசாலைகளுக்காக வழங்கப்படும் இணைய வசதிகளுக்காக கல்வியமைச்சு மாதாந்தம் 17 இலட்சம் வரையில் செலவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts