- Sunday
- May 17th, 2026
இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், வெள்ளைக்கொடி ஏந்திவந்து இரண்டு தடவைகள் படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர் என்றும் அரச பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் பொருளாளரான சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ சார்ஜன்ட்டே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த இராணுவ சார்ஜன்ட் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டார் எனவும், பின்னர் இராணுவத்தில் இணைந்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் இனத்தைச்...
ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக நான்கு இரசாயன மூலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த அட்டவணையின் ஏழாவது வரிசை பூர்த்தியாகி இருப்பதோடு உலகெங்குமுள்ள அறிவியல் பாடப்புத்தகங்கள் புதுப்பிக்கப்பட வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூலகங்கள் ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு 114 மற்றும் 116 மூலகங்கள் இணைக்கப்பட்ட பின்னர் ஆவர்த்தன...
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை, கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை யாழ் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவை ஏற்பாட்டில் ஏழாவது தடவையாக நடைபெறும் இக்கண்காட்சியில் வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில், உள்நாட்டு, வௌிநாட்டு நிறுவனங்கள் பல...
ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து, அதன் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. முந்தைய இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்கா ஒரு ஹீரோயினாகவும், மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதிஹாசனும் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த மூன்றாகம் பாகத்துக்கு வழக்கம்போல சிங்கம் தலைப்பைச் சூட்டாமல், புதிய தலைப்பைச் சூட்ட முடிவெடுத்துள்ளனர். புதிய தலைப்பையும் முடிவு...
2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கொலைகள், பெண்கள் துஷ்பிரயோகம், தற்கொலைகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பான விரிவான அறிக்கை, இன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவால், வௌியிடப்பட்டது. பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கொலைகள் 2014ம் ஆண்டு - 548...
பொங்கலுக்கு முன்னதாக தனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், தமிழக முதல்வர் அலுவலகத்தின் தனிப்பிரிவில் மனு அளித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு தூக்குத்...
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 65,000 வீடுகளை கட்டும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளின் தேவை என்பது இதைவிட இருமடங்கு அதிகமாக இருந்தாலும் முதல் கட்டமாக இதை முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளது என மீள்குடியேற்றத்துறை துணை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். அந்தப்...
ஸ்ரீலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடமாகின்ற போதிலும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் இருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தெரிவித்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் நாளை வியாழக்கிழமை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கவலையளிக்கும்...
வட மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் குடும்ப நல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள், தங்களுக்கான இடமாற்றங்களை நியாயமான முறையில் வழங்குமாறு கோரி வட மாகாண சுகாதார திணைக்களத்தின் முன்பாக புதன்கிழமை (06) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். 5 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் மேற்பார்வை குடும்ப நலன் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்காதது ஏன்? திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியொன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையொன்றை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக, நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறிந்து கொண்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நுகர்வோர் அதிகாரசபையின் உரிய அனுமதி இன்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் அதிகார சபையால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கோதுமை மாவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்கள் விலையை அதிகரிக்க உரிய அனுமதி வழங்கப்படவில்லை...
ஆஸ்திரேலிய பெண்ணிடம் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஆணுறுப்பை காட்டியதாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் மீது புகார் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடரில் ஆடிவரும் கிறிஸ் கெயில், டிவி வர்ணனையாளரிடம் மது குடிக்க வருமாரு அழைப்புவிடுத்து சர்ச்சையில் சிக்கி அபாரதத்திற்கு உள்ளானார். இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், கெயில் பற்றி...
வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு காலத்தின் தேவையாகும். இந்த அமைப்பிற்கு எனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் மேதகு யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார். இன்றைய தினம் (06.01.2016) தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா,...
வடகொரியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு அதி பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததே காரணம் என்ற பகீர் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே...
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தான் நடிக்கும் கொடி படத்திற்கு சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் தனுஷ். ஏற்கனவே இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் தனுஷ். இதனால் தனுஷ் - அனிருத்தின் 4 வருடக் கூட்டணி முடிவிற்கு வந்ததா? என்ற கேள்வி தமிழ்த்திரையுலகில்...
தமிழரின் பெருமையை உலக அரங்கில் கம்பீரமாக அரங்கேற்றிய கலைஞர்களில் ஒருவரான ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். உலகின் மிக பிஸியான இசைக் கலைஞனான அவருக்கு உலகமே இன்று வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ரோஜாவில் தொடங்கிய அவர் இசைப் பயணம், இன்று மொழிகள், நாடுகள் என்ற எல்லைகள் தாண்டி உலகெங்கும் வியாபித்து...
இன்று சர்வதேச வேண்டி தினம் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி ஆண்கள் வேட்டியணிந்த தங்களது புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ‘ஆள் பாதி ஆடை பாதி' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்று கூறப்படுவதுண்டு. ஒருவர் அணிந்துள்ள ஆடையைக் கொண்டே அவரது குணம், ரசனை, பொருளாதார...
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து வாக்குமூலம் அளிக்கவே அவர் அழைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் எட்டு இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவினை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இலங்கை மீனவர் ஒருவரின் படகை, கூட்டமாக அந்தப் பகுதிக்குள் வந்த இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளில் ஒன்று மோதியுள்ளது. இதனால் இலங்கை...
Loading posts...
All posts loaded
No more posts
