அதிக வருமானம் பெறும் அமெரிக்க நிர்வாகியாக கூகுள் சுந்தர் பிச்சை!

அமெரிக்காவில் மிக அதிக வருமானம் பெறும் உயர் அதிகாரியாக கூகுள் (Google) நிறுவனத்தின் தலைவரான, இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை தெரிவாகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பிறந்தவரான43 வயதான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபரில், கூகுள் அதன் தாய் நிறுவனமான, ஆல்பபெட், நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார். அவருக்கு...

அதிக தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்த நீச்சல் வீரர்

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று தனது 7வது தங்கப் பதக்கத்தை மெத்திவ் அபேசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். இதன்படி, இலங்கைக்காக அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர் என்ற, பெருமையை அவர் தனதாக்கியுள்ளார். முன்னதாக ஜூலியன் போலிங் (Julian Bolling) இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ad Widget

இலங்கை தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில்...

இனி பிரதமரிடம் நேரடியாக கேள்வி கேட்கலாம்!

ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பாராளுமன்ற அமர்வுகளின் போது, அரை மணிநேரம் பிரதமரிடம் நேரடியாக உறுப்பினர்கள் தமது கேள்விகளை கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வடமாகாண தொண்டர் ஆசியர் நியமன விவகாரத்தில் எம்மால் எதுவும் செய்ய முடியாது

வடமாகாண தொண்டர் ஆசியர்களை, ஆசிரியர்கள் நியமனத்துக்குள் உள்வாங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தின் மூலம் மத்திய அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் பிரமாணக் குறிப்பை மீறி எம்மால் எதுவும் செய்ய முடியாது என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்தார். வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என கல்வி...

பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க த.தே.கூ ஆதரவு

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(09) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர்...

மீண்டும் வருவேன் என்று புறப்பட்டார் ஹுஸைன்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், மீண்டும் இலங்கைக்கு வருவேன் என்று கூறிவிட்டு, இன்று (10) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறினார். இன்று அதிகாலை 3 மணியளவில், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர், டுபாய் நோக்கிப்...

அஸியில் இருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது!

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரை, குற்றப்புலனாய்வு பிரிவினர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைது கைதுசெய்துள்ளனர். அவ்விருவரும் சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். அவ்விருவரையும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.

யாழில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு பொது மக்களின் கருத்தறியும் செயலமர்வு

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் கருத்தறியும் செயலமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 15...

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (10) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா, மடு ஆகிய கல்வி வலயங்களில் சுமார் 10 வருடங்களாக கடமையாற்றுகின்ற தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவை பத்திரம்...

ஐரோப்பிய கண்டத்தில் 5 நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டம்

ஐரோப்பா கண்டத்தில் 5 நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றன. எனவே, அவர்களை அழிக்க அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன. அதை பொறுத்து கொள்ள முடியாத ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஐரோப்பா கண்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். கடந்த நவம்பர் 13–ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில்...

சித்திரை மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் !!

யாழ்.மாவட்டத்தில் பயணிகள் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு சித்திரை மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக மீற்றர் பொருத்தப்படவேண்டும். என தெரிவித்திருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் என் வேதநாயகன், முச்சக்கர வண்டிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி உரிய தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம். எனவே உரிய நடைமுறை ஒழுங்குகளை சாரதிகள் பின்பற்றவேண்டும்....

விஜய் படத்தின் கதாநாயகி – கீர்த்தி சுரேஷ்!

தெறி படத்துக்குப் பிறகு விஜய்யின் படத்தை பரதன் இயக்குகிறார். கில்லி, வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தாக பணியாற்றிய பரதன், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். விஜய் 60 என்று தற்போது குறிப்பிடப்படும் இந்தப் படத்தில் விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்...

T20 உலக கோப்பை: பாகிஸ்தான் அணி இந்தியா செல்ல தயக்கம்?

பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணி பங்கேற்காது என தெரியவந்துள்ளது. ஆறாவது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 19 தர்மசாலா நகரில்...

எம்.ஜி.ஆர். பாடல்களை உதாரணம் காட்டியே ஜெ.வை தொடர்ந்து விமர்சிக்கும் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் வெளியிடுகிற அறிக்கைகளில் எம்.ஜி.ஆர். பாடல்களை உதாரணம் காட்டியே முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், அன்றாடம் ஏதேனும் ஒரு பிரச்சனையை முன்வைத்து அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இதில் கடந்த சில நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிக்கும் அறிக்கைகளும் அடக்கம். ஜெயலலிதாவை...

150 கிலோ எடைக்காக தினம் 50 முட்டை, அரை கிலோ சிக்கன் சாப்பிடும் நடிகர்!!

பாகுபலி முதல் படத்தின் போது 62 கிலோவாக இருந்த தனது உடல் எடையை 130 கிலோவாக அதிகரித்து 6 அடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் நடித்து இருந்தார் பிரபாஸ். தற்போது பாகுபலி 2 படத்திற்காக இன்னும் 20 கிலோ எடையை அதிகரித்து சுமார் 150 கிலோ தோற்றத்துடன் பிரபாஸ் நடிக்க இருக்கிறார் என்று ஹைதராபாத் வட்டார...

வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்த புதிய அமைப்பு உதயம்

வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் ஒன்றியம் எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் ஆலோசகர் கிருஸ்ணபிள்ளை மனோகரன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அணுசரணையடன் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். பாடி விருந்தினர்...

சாதித்தது இலங்கை அணி ; இந்தியாவிற்கு எதிராக இலகு வெற்றி

இந்­தி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது இரு­ப­துக்கு இரு­பது போட்­டியில் இலங்கை 5விக்கெட் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றுள்­ளது. [caption id="attachment_57868" align="aligncenter" width="900"] Milinda Siriwardana of Sri Lanka celebrates the win with Seekkuge Prasanna of Sri Lanka during the first Paytm T20 Trophy International match between India and Sri...

நாடு பூராகவும் 40,000 போலி வைத்தியர்கள்!

இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். நாடளாவிய ரீதியில் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நடவடிக்கையின் போதே மேற்படி தகவல்கள் பெறப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைப்பாடு தொடர்பாக...

எரிபொருளுக்கான விலை குறைக்கப்படாது!

எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.உலக சந்தையில் பாரியளவில் எரிபொருளுக்கான விலைகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அதன் நன்மைகள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. எரிபொருள் விலை தொடர்பில் விலைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் என அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது. எனினும் நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக எரிபொருளுக்கான விலைகளை...
Loading posts...

All posts loaded

No more posts