Ad Widget

சாதித்தது இலங்கை அணி ; இந்தியாவிற்கு எதிராக இலகு வெற்றி

இந்­தி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது இரு­ப­துக்கு இரு­பது போட்­டியில் இலங்கை 5விக்கெட் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றுள்­ளது.

Milinda Siriwardana of Sri Lanka celebrates the win with Seekkuge Prasanna of Sri Lanka during the first Paytm T20 Trophy International match between India and Sri Lanka held at the MCA Cricket Stadium in Pune on the 9th February 2016 Photo by:  Ron Gaunt / BCCI / Sportzpics
Milinda Siriwardana of Sri Lanka celebrates the win with Seekkuge Prasanna of Sri Lanka during the first Paytm T20 Trophy International match between India and Sri Lanka held at the MCA Cricket Stadium in Pune on the 9th February 2016
Photo by: Ron Gaunt / BCCI / Sportzpics

இந்­தியா இலங்கை அணி­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது இரு­ப­துக்கு இரு­பது கிரிக்கெட் போட்டி நேற்று புனேவில் நடை­பெற்­றது. நாண­யச்­சு­ழற்­­சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்­த­டுப்பை தெரிவு செய்ய சொந்­த­மண்ணில் சாதிப்­ப­தற்கு கள­மி­றங்­கி­யது இந்தியா.

அறி­முக வேகப்­பந்து வீச்­சா­ள­ரான கசூன் ராஜித மற்றும் திஸ­ர­பெ­ரேரா ஆகியோர் பந்து வீச்சில் இந்­தி­யாவை திண­ற­டித்­தனர்.

முதல் ஓவரை வீசிய கசூன் ராஜித ஆரம்ப அதி­ர­டித்­து­டுப்­பாட்ட வீரர் ரோஹித் சர்மா இரண்­டா­வது பந்தில் ஓட்­ட­மெ­டுக்­காது ஆட்­ட­மி­ழக்க தொடர்ந்து ரஹானே(4) அரங்கு திரும்­பினார். அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து இந்­திய துடுப்­பாட்ட வீரர்கள் மீள்­வ­தற்குள் தவான்(9), ரெய்னா(20) யுவராஜ்(10) டோனி(2), பண்­டியா(2), ஜடேஜா(6) என அடுத்­த­டுத்து அரங்கு திரும்­பினர். சுழல்­பந்து வீச்­சாளர் அஸ்வின் மட்­டுமே 31 ஓட்­டங்­களை எடுத்தார். இறு­தியில் இந்­தியா 18.5 ஓவரில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 101 ஓட்­டங்­க­ளைப்­பெற்­றது.

இலங்கை சார்பில் ராஜித, சானக்க ஆகியோர் தலா மூன்று விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­ய­தோடு சமீர இரண்டு விக்­கெட்­டுக்­களை கைப்­பற்­றினார்.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்­கையின் விக்­கெட்­டுக்கள் குறிப்­பிட்ட இடை­வெளியில் வீழ்த்­தப்­பட்­டாலும் 18ஆவது ஒவரில் 5 விக்­கெட்டு­களை மட்டும் இழந்து 105 ஓட்­டங்­களைப் பெற்று இல­கு­வெற்றி பெற்­றது இலங்கை.

அணித்­த­லைவர் தினேஷ் சந்­திமல் 35 ஓட்­டங்­க­ளையும் கபு­கெ­தர 25 ஓட்­டங்­க­ளையும் எடுத்து வெற்­றியை உறுதி செய்தனர்.

ஆட்டநாயகனாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ராஜித தெரிவானார்.

இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.

Related Posts