- Monday
- May 18th, 2026
காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர். ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல் போகவில்லை. வடக்கில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெரியும். விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தில்...
முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினரிடமிருந்து மீட்டு மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் 45ஆவது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றய தினம் வடமாகாண சபையின் 45ஆவது அமர்வு நடைபெற்றிருந்த நிலையில் மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி பிரேரணையினை சபையில் முன்மொழிந்திருந்தார். குறித்த பிரேரணை...
இலங்கையின் நீதித்துறை கடந்த சில காலமாகவே அதிக அளவில் அரசியல் மயமாக்கப்பட்டு, சமநிலையை இழந்து, நம்ப முடியாத நிலையை எட்டியதால்தான், இலங்கையில் நடந்து முடிந்த போரில் இருதரப்புகளாலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற உருவக்கப்பட வேண்டிய பொறிமுறைகளில் சர்வதேச வல்லுநர்கள் பங்கு பெறுவதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் பிரேரித்ததாக ஐ.நா. மனித...
செங்கோலை தூக்கிச்சென்று சபை நடவடிக்கைகளைக் குழப்பியடிப்பதற்கு மஹிந்த அணியினர் வகுத்த திட்டத்தை முறியடித்து சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டது நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசு. இதனால் சபைக்கு நடுவில் கூட்டாக களமிறங்கி சபா பீடத்தை சூழ்ந்துகொண்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு ஊளையிட்ட மஹிந்த அணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. பொது எதிரணி என்ற அந்தஸ்துடன் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச்...
19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த உலகக் கோப்பையின் லீக் சுற்றில் அயர்லாந்து, நியூஸிலாந்து, நேபாள அணிகளையும், காலிறுதியில் நமீபியாவையும் தோற்கடித்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி...
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் தர்மபுரம் நெத்தலியாற்றுப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 35 ஏக்கர் காணியை இராணுவம் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். பரந்தன்...
ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர், இளவரசர் செய்த் ரா-அத் அல்-ஹுஸைன் இன்று (09) எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வந்தபொழுது, புகைப்பட ஊடகவியலாளர்களுடன் அளவளாவினார். அத்துடன் தனக்கும் புகைப்படம் தொடர்பில் ஆர்வம் இருப்பதை தெரிவிக்கும் வகையில் கமெராவை கையில் எடுத்த அவர், ஊடகவியலாளர்களை படம் எடுத்ததோடு அவர்களோடு செல்பியும் (Selfie) எடுத்துக் கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றதாக கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவிக்கப்படும் சில கருத்துக்கள் கன்சாட்டில் இருந்து நீக்கப்படுகின்றது என கூறப்பட்டால், அவற்றை ஊடகங்களில் செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டார். மேலும், உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்தானது, மாகாண சபையின் பதிவுப் புத்தகமான கன்சாட்டிலிருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஊடகங்களில் அவை செய்தியாக வருகின்றன. இதனால் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன....
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மத்திய அரசாங்கத்தால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படவுள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்போது வடமாகாண சபையும் கலைக்கப்படுமா என்பது தொடர்பில் தெரியவில்லையென வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வட மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றபோதே...
இளம் இயக்குநர்கள் செம உஷார் பார்ட்டிகளாக இருக்கிறார்கள். தன்னுடைய படம் ஓடினால்தான் அடுத்தப் படம் கிடைக்கும் என்பதை மட்டுமல்ல, தனக்குக் கிடைக்கும் வெற்றியை உடனடியாக பணம் பண்ணுவது எப்படி என்பதையும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இப்படிப்பட்ட உஷார் பார்ட்டி இயக்குநர்களின் அட்லியும் ஒருவர். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன்...
கௌதம் மேனன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா இணையும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் கடந்த வாரம் ஆரம்பமானது. அந்தக் கூட்டணியைப் பற்றி அப்போதே பலரும் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். தனுஷின் கால்ஷீட்டை வாங்குவதற்காகத்தான் கௌதம் மேனன் செல்வராகவனுடன் இணைந்தார் என்றும் சொன்னார்கள். அது தற்போது நிஜமாகப் போகிறது. சிம்பு நடிக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு கௌதம்...
தமிழரின் தேசம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா இல்லை மக்கள் கூட்டம் என்ற வார்த்தையை பிரயோகிப்பதா என்பது தொடர்பில் தமிழ்த் தலைமைகளினுள் விவாதங்கள் காணப்படுவதே தற்போதைய யதார்த்தமாகவுள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்களே இறுதிதீர்மானம் எடுக்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்...
பேஸ்புக் மூலம் தோழிகளான பெண்கள் 2500 பேர் சேர்ந்து மிகப்பெரிய போர்வையை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர். இந்த போர்வையின் அளவானது கிட்டத்தட்ட அமெரிக்காவின் 2 கால்பந்து மைதானங்களுக்குச் சமமாகும். இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் சுமார் 1000 பேர் இணைந்து உருவாக்கிய போர்வையே உலக சாதனையாகக் கருதப்பட்டு வந்தது. தற்போது அந்தச் சாதனையை இந்தியப் பெண்கள்...
போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். நேற்று அதிகாலை வேளையில் இவர்கள் இருவரையும் கைது செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படிகள் வைத்து செய்யப்பட்ட குழிக்குள் இறங்கி செடி ஒன்றுக்கு தண்ணீர் ஊற்றும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேன மாத்திரமல்லாது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இவ்வாறே தற்காலிகமாக படிகள் வைத்து செய்யப்பட்ட குழிக்குள் இறங்கி செடிக்கு தண்ணீர் ஊற்றியது புகைப்படம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும்...
அனுமதி பத்திரம் வழங்குவதற்குரிய அதிகாரம் மாகாண போக்குவரத்து அதிகார சபை அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கே உள்ளது. ஆனால், இலங்கையில் எந்த இடத்திலும் இல்லாதவாறு யாழ். மாவட்டத்தில் மாத்திரம் மாவட்டச் செயலாளர் அவ் அதிகாரத்தை தன் கையில் வைத்துள்ளார். முறையற்ற விதத்தில் தனியார் பஸ்களுக்கு வழங்கப்படும் வழி அனுமதிப்பத்திரமே இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கும் தனியார்...
விபத்துக்குள்ளான இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்வதற்காகவே தான் கடிதம் கோரியதாக ஊர்காவற்றுறை “பி” பிரிவு ஆதார வைத்தியசாலை வைத்தியர், ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னிலையில் தெரிவித்தார். ஊர்காவற்றுறை சந்தைக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை (08), மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றார். விபத்தின்...
இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர். நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித்...
Loading posts...
All posts loaded
No more posts
