60 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மஹோதயப் புண்ணியகால தீர்த்தம் வடமராட்சியில்!

60 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மஹோதயப் புண்ணியகால தீர்த்த உற்சவம் நேற்று அதிகாலை தொடக்கம் மாலை வரை தொண்டைமானாறு வரையான பாக்குநீரிணை வங்காள விரிகுடா கடலில் இடம்பெற்றது. வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து சுவாமி எழுந்தருளி கடலில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது. சிம்மராசியில் குரு பகவானும் நிற்க,...

தொடரை வென்றதால் 2-வது இடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. ஏற்கனவே முடிவடைந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் இருந்தது. நேற்றய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்று விடலாம் என்பதால் இரு அணிகளும்...
Ad Widget

கிரிக்கெட் தேர்தலில் அநீதி – மனித உரிமை ஆணைக்குழுவில் அர்ஜூன முறைப்பாடு

அண்மையில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் தொடர்பில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின் போது, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ஒரு பக்கத்திற்கு அதிக பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தியதாகவும், எனினும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அர்ஜூன...

புங்குடுதீவு மாணவி படுகொலை : சந்தேகநபர்கள் ஆரோக்கியத்துடன் உள்ளனர்!!

புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபர்கள் தாங்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி தெரிவித்திருந்தனர். ஆனால், திங்கட்கிழமை (08) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 10 சந்தேகநபர்களும் முழுமையான தேக ஆரோக்கியத்துடன் மன்றுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டனர். தங்கள் வழக்கை துரிதப்படுத்த வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சந்தேகநபர்கள் கடந்த...

கச்சத்தீவு தேவாலய திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஏற்பாடுகளுக்கான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று இடம்பெற்றது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன், திருப்பலி ஆரம்பமாகின்றது. 21ம் திகதி காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத்...

வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னாள் போராளிகள் புறக்கணிப்பு!

முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தமக்கான வேலைவாய்ப்பைப் பெறுவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவன தலைவர் மு.சர்வானந்தன் தெரிவித்துள்ளார். அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் பல பில்லியன் டொலர்களில் முதலீடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும், இவர்கள் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 12000 முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு...

இல்ல மெய்வன்மை போட்டியில் பங்குபற்றிய மாணவி உயிரிழப்பு!

இல்ல மெய்வன்மை போட்டியில் பங்குபற்றிய போது, மயங்கி வீழ்ந்து, உயிரிழந்த மாணவி, சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமையாலேயே மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது. அம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சனிக்கிழமை(06) இடம்பெற்ற இச்சம்பவத்தில், யோகலிங்கம் அனோஜா (வயது 13) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் முதலில் அணி நடையில் ஈடுபட்ட பின்னர், தொடர்ந்து...

விபத்துக்கு உள்ளானவர் கடிதம் எழுதி தந்த பின்னரே சிகிச்சை அளிப்பேன்- ஊர்காவற்துறை ஆதார வைத்திய சாலை வைத்தியர்

விபத்துக்கு  உள்ளானவர் கடிதம் எழுதி தந்த பின்னரே சிகிச்சை  அளிப்பேன் என ஊர்காவற்துறை பி.தர ஆதார வைத்திய சாலை வைத்தியர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் குறித்து  தெரிய வருவதாவது , ஊர்காவற்துறை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்கு உள்ளாகி இருந்தது. அதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் , துவிச்சக்கர...

புங்குடுதீவு மாணவி படுகொலை : சிறை மாற்றம் செய்ய நீதவான் மறுப்பு

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்களில் 10ஆவது சந்தேக நபரை யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் மறுத்தார். புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, இன்று திங்கட்கிழமை (08), பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மறுப்பு...

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம் : மஹிந்த கையொப்பமிட்டார்

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

சரத் பொன்சேகா எம்.பியாகிறார் ?

ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வாரென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இதேவேளை இவருக்கு படையினர் நலன்புரிகள் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிக் கட்சியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி...

சம்பந்தன் கண்ணீர் வடித்தது ஆச்சரியமே – வீ.ஆனந்தசங்கரி

“இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட AnanthaSangaree.போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததாக வெளியான செய்தி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில்...

ஐ.பி.எல் : அணிகளும் வீரர்களும் முழு விவரம் !

9 - வது ஐ.பி.எல். சீசன் ஏலம் நடைபெற்றது. இதில் ஷேன் வாட்சன், பவன் நேகி, யுவராஜ் சிங், கிறிஸ் மோரிஸ், மோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், இந்த ஐ.பி.எல்...

ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே ஏலம் போன பரிதாபம்!

9வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே விலை போயுள்ளார். மற்ற 15 பேரையும் சீந்தக் கூட ஆள் இல்லை. திசரா பெரைரா மட்டுமே ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மற்ற பிரபலங்கள் உள்ளிட்ட யாரையும் எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை. இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு இது...

வடசென்னை : ரவுடியாக தனுஷ், விலைமாது வேடத்தில் ஆண்ட்ரியா

வடசென்னை படத்தின் கதை 35 வருட ரவுடி ஒருவனின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்நிலையில் இவரது அடுத்த படமான வடசென்னை பற்றிய சில தகவல்களை வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இதில் தனுஷ், சமந்தா மற்றும்...

நிலாவில் நீண்ட தூரம் நடந்த சாதனையாளர் எட்கரின் மரணம்

நிலாவில் கால் பதித்து நடந்த 6வது வீரர் என்ற பெருமைக்குரிய அமெரிக்க விண்வெளி வீரர் எட்கர் மிட்செல் புளோரிடாவில் காலமானார். கடந்த 1971ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி அப்பல்லோ 14 விண்கலம் மூலம் எட்கர் மிட்செல் (85) நிலாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் ஆலன் ஷெப்பேர்டு என்ற வீரரும் சென்றிருந்தார். அவர்கள்...

கருத்து சுதந்திரத்தில் அரசியல் நுழையக் கூடாது – கமல்

ஆட்சி அதிகாரத்தால் கருத்து சுதந்திரம் பாதிக்கக் கூடாது என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இந்தியா எதிர்நோக்கியுள்ள வாய்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பில் கடந்த 6, 7 ஆகிய தேதிகளில் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல் ஹாஸன் மாணவர்களிடையே உரையாற்றினார்....

மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள்

தற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அன்றாடம் வெளியாகி கொண்டே இருக்கின்றது. கணினியில் குறிப்பிட்ட மென்பொருள் இருந்தால் கன நேரத்தில் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்க...

போரின் பாதிப்புக்கள் தொடர்பில் தகவல் திரட்ட தமிழ் மக்கள் பேரவை தீர்மானம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் மற்றும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் பற்றிய விபரங்களை திரட்டுவதற்காக செயலணி குழுக்களை நியமிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகால போரில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான சரியான விபரங்கள் எதுவும் மதிப்பிடப்படவில்லை என்றும் அரசாங்கம் மேற்கொண்ட புள்ளிவிபரங்கள்...

யாழ் புதிய இராணுவ கட்டளைத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இராணுவ கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க நேற்று தனது கடமைகளை பொறுபேற்றுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று ஜெனரலாக நியமிக்கப்பட்டதை அடுத்து சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts