- Monday
- June 15th, 2026
1997ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் வசமிருந்த வவுனியாவின் மிகப்பெரும் நெற்களஞ்சிய சாலை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நெற்களஞ்சிய சாலையை விடுவிக்குமாறு வவுனியா மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந் நிலையில் நேற்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ரோகண புஸ்பகுமார மற்றும் மாவட்ட விசாய பணிப்பாளர் ஆகியோர் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட...
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பணிப்புரைக்கமைய யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த 10 பேர் கொண்ட விசேட மோட்டார் சைக்கிள் பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு செயற்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்கவின் கண்காணிப்பின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்படுகின்றது. தினமும் காலை 7 மணியில்...
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு 150 படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்கும் உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் நேற்றுக் கையொப்பமிட்டன. மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடல் நிகழ்வில் இந்திய அரசியல் சார்பில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே. சிங்ஹாவும், இலங்கையின் சார்பில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யு....
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வால்பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம் என அவர் ஆதரவு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எந்த யோசனையாக இருந்தாலும் அதனை நாடாளுமன்றில் முன்வையுங்கள். அதை நாம் கருத்திற்கொள்வோம் என்றும் தெரிவித்தார். சிறிகொத்தவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஆலோசனை கூறி, கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில்...
ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை எடுத்துச் செல்லாது சாதாரண பயணிகள் விமானத்திலேயே மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பிரிவினருடன் சென்று வந்துள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் புதிய கட்டடத் தொகுதியை நேற்றுத் திறந்து வைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த...
மன்னாரில் மீண்டும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளதாக கவலையடைந்துள்ளனர். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு முன்பாக குறித்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வருகின்றது. யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகுட்பட்ட மறவன்புலோ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள மீட்கப்பட்டுள்ளமை மற்றும் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட...
இந்த நாட்டில் காணாமல்போன ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என ஆட்சியாளர்கள் கூறும்வரை நாம் மக்களுக்காக உரத்துக் குரல் கொடுக்கவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 'காணாமல் ஆக்குவதை காணாமல் ஆக்குவோம்' என்னும் தொனிப்பொருளில் கடந்த புதன்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெற்ற காணாமல்போனோரின் உறவுகளின் கவனயீர்ப்பு நிகழ்வில்...
சாவகச்சேரி பகுதியில் இருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் மிதவாத குழுக்களின் செயற்பாடுகளாக இருக்கலாம் என, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நேற்றைய சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என வெளியாகும் தகவல்களில் எந்தவொரு உண்மையும் இல்லை...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சமி பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின்(89 ரன்கள்)...
முல்லைத்தீவு மாவட்டதில் தொடரும் வெப்பமான காலநிலையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் காலநிலை மாற்றத்தால் பெருமளவு வெளிநோயாளர்கள் முல்லைத்தீவு அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவதாக அறியமுடிகின்றது. வெப்பம் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் வர்த்தக நிலையங்கள் வெறிச்சோடிகிடக்கின்றது. எனினும் இன்று காலை சிறிதாக மழைபெய்து ஓய்ந்துள்ளது தொடர்ந்தும் மழை பெய்யாதா என்று முல்லைமக்கள்...
தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த திருநெல்வேலி பனிக்கர் வீதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 28) என்பவருக்கு, மரணதண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று தீரப்பளித்தார். 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், 5 முறை கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தசாமி ஜெயன் என்பவர்...
சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்து குறித்து, அவரிடம் விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, 'பொலிஸாரால் எதிர்வரும் நாட்களில் இந்த விசாரணை நடத்தப்படும்' என்றார்.
சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை இன்றைய தினம், நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த விவகாரம் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடப்போவதாகவும் குறிப்பிட்டார். நிதி அமைச்சுக்கான புதிய கட்டடத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு...
ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கண்மூடித் தனமாகத் கொலைவெறித் தாக்குதல் நடாத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 7 தமிழ் மாணவர்கள் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் அளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களை உதவிக்கு அழைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து இணங்காணப்பட்ட மேலும் சில பகுதிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கான விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியினை அண்மித்த பகுதிகள் குறிப்பாக நடேஸ்வராக் கனிஸ்ர வித்தியாலையத்தின் பின்புறத்தில் இருந்து இராணுவத்தின் தல்சவென கோட்டல் வரையிலான சில பகுதிகள் விடுவிப்பதற்கு படைத்தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது. முன்பு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள படை முகாம்களை...
சாவகச்சேரி - மறவன்புலோ பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டது அரசாங்கம், அரசாங்கத்தின் கீழ் உள்ளவர்களின் சதி திட்டம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். தந்தை செல்வாவின் 118வது பிறந்த தினமான இன்று வியாழக்கிழமை தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
காரைநகர், கசூரினா கடற்கரையில் ஆணொருவரின் சடலம் புதன்கிழமை (30) மதியம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். 5 அடி 4 அங்குலம் உயரமும், பொதுநிறமும், கறுப்பு நிற தலைமயிரும் பச்சை நிறத்தில் ஸ்ரீலங்கா என எழுத்துப் பொறிக்கப்பட்ட காற்சட்டை அணியப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது. மேலும், கடற்கரையில் இருந்து மேலதிகமாக வெள்ளைச்சறமும், நீலச்சேட்டும் மீட்கப்பட்டது. ஆனால்,...
சாவகச்சேரி பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை என்ன காரணத்துக்காக எங்கிருந்து கொண்டுவந்ததான தகவல்களை, அவ்வீட்டின் உரிமையாளரான சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் பழைய வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்த வாகனத்துக்குள்ளேயே, மேற்படி அங்கி மற்றும் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் அவற்றிலிருக்கும் வெடிபொருட்களை மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்தவே எடுத்து வந்ததாகவும் அச்சந்தேகநபர் கூறியுள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த...
அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தில் இருந்த நபர் இனங்காணப்பட்டுள்ளதாக, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மயிலை ஒரு கையிலும் துப்பாக்கியை மறு கையிலும் பிடித்தவாறு வௌியான குறித்த புகைப்படத்தில் இருந்த நபர் வென்னப்புவ - பொரலெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த டப்ளியூ.பிரியந்த பிரணாந்து எனத் தெரியவந்துள்ளது. இவர் தற்போது இத்தாலியில் பணிபுரிந்து வருகின்றார்....
Loading posts...
All posts loaded
No more posts
