- Monday
- June 15th, 2026
வரும், 14ம் தேதி வெளியாகவுள்ள, தெறி படத்துக்காக, இப்போதே தவமிருக்க துவங்கி விட்டனர், விஜய் ரசிகர்கள். இந்த படத்தில், விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதால், ஆக் ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர், ரசிக மகா ஜனங்கள். படத்தின் டிரெயிலரை இணையதளத்தில், 50 லட்சம் பேர் பார்த்ததை படக்குழுவினர் பெருமையாக பேசிக் கொள்கின்றனர். அண்டை மாநிலங்களை பொறுத்தவரை,...
அனிருத்தை இசையமைப்பாளராக்கியவர் தனுஷ். அந்த வகையில், தான் நடித்த சில படங்களில் அவரை இசையமைக்க வைத்தார். அதேபோல் சிவகார்த்திகேயனும் தனது படங்களுக்கு அனிருத் இசையமைக்க சிபாரிசு செய்து வருகிறார். இந்த நிலையில், அஜீத்தின் வேதாளம் படத்துக்கு இசையமைத்த பிறகு நட்சத்திர இசையமைப்பாளராகி விட்டார் அனிருத். என்றாலும், இடையினில் பீப் சாங் விவகாரத்திற்கு பிறகு அனிருத்தின் அதிரடி...
எல்ல வெல்லவாய கரந்தகொல்ல பிரதேசத்திலுள்ள இராவண எல்ல கற்குகை ஒன்றினுள் சுயநினைவிழந்து காணப்படுவதாகக் கூறப்படும் இராவணனை நினைவு திரும்பச் செய்வதாகத் தெரிவித்து மொறட்டுவ பிரதேசத்திலுள்ள மந்திரவாதி பெண்ணொருவர் உட்பட 18 பேர் நேற்றுமுன்தினம் அக்குகையினுள் சென்றிருந்த போது தாக்குதலுக்கு உள்ளாகினர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று இக்குகையினுள் வழமைக்கு மாறாக ஏதாவது ஒரு...
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல்களுடன் தொடர்புபட்ட தடயங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படும் வெலிசறை கடற்படை முகாமின் இரகசிய அறை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டி சில்வா...
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவுள்ள 65,000 உருக்கு வீடுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வதிவிடப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் வெளிநாட்டு நிதியுதவியுடன் வீடமைப்புத் திட்டம் ஒன்றினை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. இவ்வாறு அமைத்துக் கொடுக்கப்படும் வீடுகள் முன்னரே தயாரிக்கப்பட்ட உருக்கு, பிளாஸ்டிக்...
சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி ஆகியனவற்றை கண்டு பிடித்த பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. வெடிபொருட்களை கண்டு பிடித்து மீட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சுற்றி வளைப்பிற்கு காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் உயர்...
வட பகுதியெங்கும் பௌத்தர்களே இல்லாத இடங்களில் கூட அடாத்தாக பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண சபை உறுப்பினர்கள், இவை திட்டமிட்ட இனத்துவ அடையாள அழிப்பின் நோக்கமே என்றும் குறிப்பிட்டுள்ளனர். முதலமைச்சருக்கும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது நயினாதீவில் 62 அடி...
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்துக்குச் சொந்தமான காணியின் பின் பகுதியில் இருந்து, ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர். 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், குறித்த கமநல சேவைகள் நிலையத்துக்கு சொந்தமான காணியில் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையம் இயங்கிவந்தது....
சாவகச்சேரி, மறவன்புலவில் மீட்கப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் வெடிபொருள்கள் குறித்த தகவலை கைதானவரின் இரண்டாவது மனைவியே வழங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று மேற்படி விடயத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. மறவன்புலவில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருள்கள் சிக்கின. சந்தேகநபரை வன்னேரிக்குளத்தில் வைத்து பொலிஸார் கைது...
வடக்கில் எவ்வாறான அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் இராணுவத்தினர் தயார் நிலையில் இருக்கின்றனர் என யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ். சாவகச்சேரி பகுதியில் நேற்று வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். இந்நிலையில், முழுமையான விசாரணைகளின்...
தற்போதுள்ள கல்வி முறைமையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்க தற்போதய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரோயல் கல்லூரியில் நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இம் மாற்றத்தினை எதிர்வரும் மே...
சாவகச்சேரி பகுதியில் ஜெகட் இரண்டு, சீ நான்கு (பிளாஸ்டிக் வெடிபொருள்) பேக் மூன்று மற்றும் சிம் காட் ஐந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அரசாங்கம் முயற்சிப்பது உண்மையை மறைத்து இது குறித்து குறைந்த மதிப்பீடுகளை வழங்கவே எனவும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் இது உண்மை...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அரைஇறுதியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது....
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி கொழும்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதனை தமிழ் நாட்டில் இயங்கும் பல அமைப்புக்கள் எதிப்பு தெரிவிக்கின்றனர். அந்த வகையில் முருகசேனை என்னும் அமைப்பு விடுத்துள்ள கண்டண அறிக்கை... தனது இசை வளத்தின் மூலம் தமிழ் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் மதிமயக்கிய...
பாடசாலை மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கிய வயோதிபர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குழந்தைக்கும் 20 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் இன்று புதன்கிழமை (30) தீர்ப்பளித்தார்.
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் உட்பட ஆயுதங்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றப்பட்டு உள்ளன.குறித்த வீட்டில் இருந்த நபர் தப்பி சென்று இருந்த நிலையில் கிளிநொச்சி வன்னேரி பகுதியில் வைத்து இன்று மதியம் கிளிநொச்சி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த வீட்டினுள் போதைப்...
சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவது இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பிற்கும் சில இடங்களில் கண்டுப்பிடிக்கப்படும் பொருட்களுக்கும் நிறைய...
வடக்கில் அமைக்கப்படவுள்ள 65,000 வீடுகள் தொடர்பில் மக்களிடம் கருத்தறியும் செயற்பாடொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு முன்னால் மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த அறுபத்தையாயிரம் வீடுகள் அமைப்பதில் மக்கள் தமக்குரிய அபிப்பிராயங்கள் மற்றும் குறைகள் தொடர்பில் எழுதிப் போடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட பொருத்துவீடுகளை விரும்...
கனடாவில் கிழக்கு கியூபெக் நகர் சென்ற தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக மகட்லான்ட் தீவில் தரையிறங்கியபோது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த கனடாவின் முன்னாள் அமைச்சர் உள்பட 7 பேர் பேர் உயிரிழந்தனர்.
அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகள் மஹாபொல புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொள்ள வசதியாக மூன்று இலட்சம் வருமானம் என்ற கட்டுப்பாட்டை ஆறு இலட்சமாக அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு உத்தேசித்துள்ளது. தற்போது அரசாங்க ஊழியர் ஒருவர் மூன்று இலட்சம் ரூபாவை வருடாந்த வருமானமாக பெறுவாராயின் அவரது பிள்ளை மஹாபொல புலமைப் பரிசிலைப் பெறும் தகுதியை இழக்கின்றார். இந்த மூன்று...
Loading posts...
All posts loaded
No more posts
