- Monday
- June 15th, 2026
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கைக்குண்டுகளையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. குறித்த வீட்டில் கஞ்சா உட்பட்ட பல போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடி...
காஷ்மீர் தீவிரவாதிகளை மையப்படுத்தி 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம் ரோஜா. இப்படம் பல விருதுகளை வாங்கி இந்திய அளவில் புகழ் பெற்றது. இந்த படத்தில் கண்கவரும் காஷ்மீர் காட்சிகளும், கடத்தல் காட்சிகளும் நெஞ்சை அள்ளும் வகையிலும் த்ரில்லாகவும் தந்தார் மணிரத்னம். இவர் தற்போது கார்த்தி, சாய்பல்லவியை வைத்து இயக்கபோகும் படமும் ஒரு தீவிரவாதிகளை...
தேசிய விருதுகள் பட்டியல் வந்ததில் இருந்தே பல சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பாகுபலி சிறந்த படமா, தொழில்நுட்ப ரீதியில் தானே விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பக்கம் விக்ரமுக்கு ஏன் விருது இல்லை எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல் இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு சர்ச்சை கிளம்பிவிட்டன. கங்கை அமரன் தேசிய விருது கமிட்டி...
இறுதிப்போரின்போது செல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நந்திக்கடலில் மிதந்தபோது, எனது மகள் உயிருடன் வருவாள் என அங்கேயே காத்திருந்தேன் என்று மகளைப் பறிகொடுத்த தாயொருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார். வவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சிவபாதம் செல்வராணி என்ற தாயார் இவ்வாறு சாட்சியமளித்தார். குறித்த...
கல்வி பொதுத் தாராதரப் பத்திர சாதாரணத் தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்த 8,698 மாணவ, மாணவிகள் பிரதான ஆறு பாடங்களில் சித்திபெற தவறிவிட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. இது பரீட்சை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையில் 3.18 சதவீதம் என்பதுடன் 2014ஆம் ஆண்டு 8,147 பேர் பிரதான ஆறு பாடங்களில் சித்திபெற தவறியிருந்தனர். இது 3.17 சதவீதமாகும்.
'வாழையிலையில் சுற்றிக்கொண்டுவந்த சாப்பாட்டைத்தான், அன்று நான் சாப்பிட்டேன். அதேபோலத்தான் இன்றும் சாப்பிடுகின்றேன்' என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'மன்னன் சாப்பிட்டது போல நான் சாப்பிடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கலின் பெறுபேறாகவே தான், ஜனாதிபதியானார் எனக் கூறிய ஜனாதிபதி, அதேபோல அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட அரச சேவையாளர்களுக்குத் தேவையான நிவாரணங்களை, வழங்குவதற்குக் குழுவொன்றை நியமிப்பேன்...
'தமிழர்கள், வெள்ளவத்தையில் காணிகள் வாங்கி அங்கு குடியேறி குட்டித் தமிழகம் அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள். அதுபோல, வடக்கிலும் சிங்களவர்கள் காணிகள் வாங்கலாம்' என்று, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். சர்வோதயம் அமைப்பின் யாழ்ப்பாண அலுவலக ஏற்பாட்டிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு, நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது....
சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் எந்தத் தடைகள், சவால்கள் வந்தாலும் அவற்றை வெற்றி கொண்டு அமைத்தே தீருவோம்.இப்படி உறுதிபடக் கூறியிருக்கிறார் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய. 'மின்தடை' தொடர்பில் ஒருவருக்கொருவர் சுட்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்காது எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட உறுதி பூணுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
புத்தரின் போதனைக்கு அமைய நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தனக்கு ஞாபகமூட்டினார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுத் தெரிவித்தார். புத்தரின் போதனைக்கு அமைய செயற்படாமல் விகாரைகளுக்குச் செல்வதிலும் பலனில்லை என்றும், விகாரைகளுக்கு செல்வதால் மட்டும் பௌத்தர் ஆகிவிட முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில்...
அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் என்று கூறப்படும் இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்தது. 16 விமானங்களை அழித்து 400 கோடி ரூபாயை நஷ்டப்படுத்தியது மாத்திரமன்றி பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த...
வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வீட்டுத்திட்டத்தை நிறுத்தி, அந்த வீடுகள் வடக்குக்கு பொருத்தமானவையா என்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை நேற்று (29) அனுப்பி வைத்துள்ளார். இக்கடிதத்தின் பிரதிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேற்படி வீட்டுத்திட்ட...
24 வயது இளைஞர் ஒருவர் இரத்தக் கறையுடனும், அடிகாயங்களுடனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில் தில்லையம்பதி அம்மன் ஆலய பகுதியைச் சேர்ந்த சின்னராசா மகிந்தன் (வயது 24 ) என்ற இளைஞரே சடலமாக நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளார். யாழ். கோண்டாவில் தில்லையம்பதி அம்மன் ஆலய பின் வீதிப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும்...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில் சூளைமேட்டைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி நேற்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் சாட்சியளித்தார். சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கு சென்னை 4வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம்...
ஈஜிப்ட் ஏர் விமானக் கடத்தலில் சிக்கிய அனைத்து பயணிகளும் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டது. லார்னகா விமானநிலையத்தில் ஒரு பதற்றமான நெருக்கடி நிலைக்குப் பின்னர் , விமானத்தைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். தனது கைகளைத் தூக்கியபடி விமானத்திலிருந்து வெளியே வந்த அவர், பின்னர் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளிடம் சரணடைந்தார். அதற்கு சில...
எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற விமானத்தை ஒரு தீவிரவாதி கடத்தினான். கடத்தப்பட்ட எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS181 தடம் எண் கொண்ட அந்த விமானத்தில் 55 பயணிகளும், விமானி உள்பட ஏழு பேரும் இருந்ததாக தெரியவந்தது. அந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் தீவில்...
நல்லூர், கல்வியங்காடு, யமுனா வீதியிலுள்ள காணியொன்றில் புதையுண்ட நிலையில் வெடிமருந்து எனச் சந்தேகிக்கப்படும் பரல் ஒன்று திங்கட்கிழமை (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், சில பரல்கள் அங்கு புதையுண்டு இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திய பொலிஸார், அந்த இடத்துக்கு பூரண பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன், பரல்களை மீட்டு அதனை பரிசோதிப்பதற்கான பொறுப்பை விசேட அதிரடிப் படையினர்...
'நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தை மறைக்கும் வகையில் நாகதீப விகாரைக்கு முன்பாக புத்தர் சிலை அமைக்கப்படவுள்ளதாக செய்திகளை வெளியிட்டு, மதங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதற்கு சிலர் முனைகின்றனர்' என நாகதீப விகாராதிபதி நவதகல பதுமகித்தி தேரர் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும்...
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 14 பேர் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் தற்போது 16 இலங்கைத் தமிழர்கள், ஒரு நைஜீரியர் என 17 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மகேந்திரன் என்ற இலங்கைத் தமிழர், தன்னை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி 2...
மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு 'மின்சாரப் பரிசு' வழங்கும் வேலைத்திட்டமொன்றை, இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, 'கடந்த ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டவர்களும் இந்த போட்டியில் உள்ளடக்கப்படுவார்கள்' என்று கூறினார். இந்தப் போட்டியில்...
பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 1960-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 6 மொழிகளில் 17,695 பாடல்களை அவர் பாடியுள்ளார். இதன் மூலம் அதிக பாடல்களை பாடியவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக கின்னஸ் புத்தக அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
Loading posts...
All posts loaded
No more posts
