சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைக்குண்டுகளையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டில் கஞ்சா உட்பட்ட பல போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இதனுடன் தொடர்புடைய வேறெந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
அண்மைக்காலமாக கஞ்சா பொதிகள் கைப்பற்றப்படும் தருணங்களில் குற்றவாளிகள் தப்பித்து விட்டதாக வருகின்ற செய்திகளும் தற்கொலை அங்கி சுற்றப்பட்டுள்ளபத்திரிகை சிங்கள பத்திரிகையொன்றாக இருப்பதும் பிராந்தியத்தில் பதட்டத்தினை ஏற்படுத்தும் நோக்கிலான செயற்பாடாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது
பிந்திய செய்தி
சந்தேக நபர் அக்கராயன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

