Ad Widget

பொருத்து வீடுகள் தொடர்பில் மக்களிடம் அபிப்பிராயம்!

வடக்கில் அமைக்கப்படவுள்ள 65,000 வீடுகள் தொடர்பில் மக்களிடம் கருத்தறியும் செயற்பாடொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு முன்னால் மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் இந்த அறுபத்தையாயிரம் வீடுகள் அமைப்பதில் மக்கள் தமக்குரிய அபிப்பிராயங்கள் மற்றும் குறைகள் தொடர்பில் எழுதிப் போடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைவிட பொருத்துவீடுகளை விரும் பயனாளிகளுக்கு இந்த வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எமது பிரதேசத்தில் நிலவும் காலநிலைக்கும், கலாச்சார ரீதியிலும் இந்த வீடு எமது பிரதேசத்திற்கு ஒத்துவராது என வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கருத்துத் தெரிவித்திருந்ததுடன், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்த வீடுகள் அமைப்பதற்கு செலவிடப்படும் 21 மில்லியன் ரூபா பணத்தில் எமது சாதாரண வீடுகள் இரண்டு கட்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts