- Monday
- June 15th, 2026
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம், வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார்சைக்கிளில் தினமும் இரவில் உலாவுவதாக அறியமுடிகின்றது. புதுக்குடியிருப்பில் இருந்து குறித்த பிரதேசங்கள் நீண்ட தூரம் என்பதினால் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை தாமதமாக இருக்கின்றது. குறித்த மர்ம நபர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பயணிக்கின்றனர். குறித்த பிரதேசத்தில்...
சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் என்பன புலிகளினால் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த வெடிபொருட்கள் தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு...
கடந்த காலங்களில் காணாமல் போனதாக கருதப்பட்டு, காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நால்வர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருவர் அல்லது மூவர் மாலைதீவில் உள்ள சிறைச்சாலையில் இருப்பதாகவும், காணமற்போனோர்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். பட்டியலில் உள்ள நால்வர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் குறித்த விபரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்....
ஒரு இடத்தில் காசு கொடுத்து காணி வாங்கி அங்கு வசிப்பது வேறு, அரசாங்கத்தால் முறையற்ற விதத்தில் குடியேற்றம் செய்வது வேறு. இதனை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உணரவேண்டும் என வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வெள்ளவத்தையில் தமிழர்கள் காணிகள் வாங்கி குட்டித் தமிழகம் போன்று குடியேறி வாழ்வது போன்று, வடக்கிலும் சிங்களவர்கள் காணிகளை...
யாழ். குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவை...
உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் தொழில்நுட்பம் ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சி.சி.டிவியில் பதிவாகியுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும். குற்றம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதற்கு இது உதவும் என இதனை உருவாக்கியுள்ள பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் கணிணி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இது...
கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் 800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனம் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கான சர்வதேச தரத்திலான தொழில்சார் பயிற்சிகளை வழங்கும் நோக்குடன் நிர்வகிக்கப்பட்டு வரும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கட்டுமானப் பணிகள்...
ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட இருந்த பெறுமதி சேர் வரி (VAT) மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மறு அறிவித்தல் வரும் வரை முன்னர் இருந்தது போன்று...
கம்பியில்லா இணையத்தள வசதியை இலங்கை முழுவதும் குறைந்த கட்டணத்தில் வழங்கும் கூகுள் லூன் பலூன் செயற்திட்டம் இன்று மீண்டுமொரு முறை தோல்வியடைந்துள்ளது. சீகிரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யொவுன்புர இளைஞர் ஒன்றுகூடல் மைதானத்தில் இருந்து கூகுள் பலூனை வானுக்கு ஏவும் செயற்திட்டத்தின் இரண்டாவது முயற்சி இன்று மேற்கொள்ளப்பட இருந்தது. எனினும் பலூனுக்கு காற்றைச் செலுத்தும் முயற்சியின் போது...
“விடுதலைப்புலிகள் மீது “பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்”என்று அபாண்டமாக குற்றம் சாட்டியவருக்கு திமுக கூட்டணியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்கப்பட்டுள்ளது! இதுவரை விடுதலைப்புலிகள் மீது, ‘பெண்களை கற்பழித்தார்கள் என்றோ, பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்கள்’ என்றோ சிங்கள பேரினவாதிகள் கூட குற்றம் சாட்டியதில்லை. ஆனால், பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள்...
'ஒரு செம்பு தண்ணி கொடுத்தவர்கள், தகவல் தெரிவிக்காதவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் சிறைகளில் வாழ்கின்ற நிலையில், சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்ததாக முன்னரே அறிந்தும் அரசாங்கத்துக்கு தகவல் தெரிவிக்காத முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை கைது செய்து புனர்வாழ்வளிக்க வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
ஏப்ரல் 17-ந் திகதி சென்னையில் நடைபெறவிருக்கிற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன்களின் விவரம் வெளியாகியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 17-ந் திகதி சென்னையில் நடைபெற இருக்கிறது....
பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வரும் மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் சிம்பு, 90 கிலோ எடை கொண்ட குண்டான மனிதர் கெட்டப்பிலும் நடிக்கவிருக்கிறாராம். சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பெயரிப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு மேக்கப் போடுவதற்காக ஹாலிவுட் கலைஞர் சீன்...
அண்மையில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் எட்டு பேரில் அறுவருக்கு ஒரு பக்க சிறுநீரகம் மாத்திரமே இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களுடைய ஒருபக்க சிறுநீரகம் அகற்றப்பட்டிருப்பது கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார். கடந்த மார்ச் 04ம் திகதி...
முன்னாள் போராளிகளை ஏற்று அவர்களையும் எமது சமுதாயத்துடன் இணைத்து நடாத்த எமது சமூகம் முன்வருவது அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், முன்னாள் போராளிகள் பலரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர்....
உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி அவர்கள் பற்றி தெட்சணாமூர்த்தி அறக்கட்டளையின் ஆதரவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளி அம்ஷன்குமார் தயாரித்த ஆவணப்படமும் மற்றும் 'தெட்சணாமூர்த்தி: எட்டாவது உலக அதிசயம்'எனும் நூல் அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ தூங்க்காபி சமூக...
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு தொடர்பான மக்கள் கருத்தறியும் செயற்திட்டம் நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக பேரவை அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த நிபுணர்குழு இன்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடர்ச்சியாக ஒன்று கூடி தீர்வுத்திட்ட இறுதி வரைபை எதிர்வரும் சில நாட்களில் தயாரித்து முடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தீர்வு திட்ட இறுதி வரைபானது சர்வதேசத்திடமும்,...
இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பில் வடமாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகள் 7ம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனிடம் நேரில் கையளிக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சிமாற்றத்தின் பின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் யாப்பு மறுசீரமைப்பு ஒன்றிற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் வடமாகாண மக்களின்...
மாகாண முதலமைச்சர்களிடம் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழு தீர்மானித்துள்ளது. மக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக அந்த குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார். 5000 இற்கும் அதிகமான யோசனைகளை பதிவுசெய்துள்ளதாக அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவின் தலைவர்...
சாவகச்சேரி மறவன்புலவில் தற்கொலை அங்கி,கிளைமோர் மீட்பு சந்தேக நபர் கைது-அதே இடத்தில் 16 சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தமிழ் இராணுச் சிப்பாய் ஒருவரும் ஒரே நாளில் கைதாகியுள்ளமை பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மீட்க்கப்பட்ட வெடிபெருட்க்கள் யாவும் சிங்கள மொழிப் பத்திரிகையினால் சுற்றப்பட நிலையில் காணப்படுவதனால் பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. கைதாகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாம்.
Loading posts...
All posts loaded
No more posts
