புனர்வாழ்வு பெறும் போராளிகளின் புத்தாண்டு நிகழ்வு!

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு நிலையத்தின்...

இலங்கை வருகிறது அவுஸ்திரேலியா

இவ்வாண்டு ஜூலை மாதத்தில், முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வரவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடருக்காகவே, அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு வரவுள்ளது. இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பித்து, செப்டெம்பர் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அவுஸ்திரேலிய அணி...
Ad Widget

பஸ்கள் போட்டிபோட்டு ஓடுவதற்கு யாழ்ப்பாணச் சாலை முகாமையாளரே காரணம்

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் தனியார் பஸ்களுடன் போட்டிபோட்டு ஓடுவதற்கு யாழ்ப்பாணச் சாலை முகாமையாளரே காரணம். தனியார் பஸ்ஸை முந்திச் செல்லாவிட்டால் சாரதி மற்றும் நடத்துநருக்கு எதிராக தண்டப்பணத்தை யாழ்.சாலை முகாமையாளர் அறவிடுகின்றார் என ஸ்ரீங்கா சுதந்திர போக்குவரத்துச் ஊழியர் சங்கம், தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம்...

தலைவர் பிரபாகரன் மரணித்ததை அடுத்து புலிகள் இயக்கத்திற்கு உயிர்கொடுக்க எவரும் இல்லை: சி.வி.கே

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும், மீண்டும் தலைதூக்காது. தமிழ் மக்கள், ஒருபோதும் மீண்டுமொரு யுத்தத்துக்குள் தள்ளப்பட மாட்டார்கள். தெற்கைச் சேர்ந்த சில அரசியல் சக்திகளுக்கே, யுத்தமொன்றின் தேவை அவசியமாகியுள்ளது' என்று வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கடந்த...

பொருத்து வீட்டுத் திட்டம்: உடன் இடைநிறுத்த ஜனாதிபதி பணிப்பு!

பொருத்து வீட்டுத் திட்டப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், மீளாய்வின் பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்கலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெற்றது. இதன்போது பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த வீட்டுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்புக்கள் வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில்...

முஸ்லிம் இளைஞர்கள் காட்டுத்தனம்!! சிறுமியையும் யுவதியையும் கடத்திச் சென்று வன்புணர்வு!

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியையும் 19 வயது யுவதியையும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என இரு முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் வக்கிர சம்பவம் மட்டக்களப்பு கிரான் தெற்கு வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியையும் யுவதியையும் கடத்திச சென்ற முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மறுநாள்...

போதைப்பொருளை இல்லாதொழிக்கும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகள்!

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கும் பங்களிப்புச் செய்யும் எல்லா அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி விருதுகள் வழங்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை இவ்வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பங்களிப்புகளை வழங்கும் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பில் முன்னுரிமை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்...

பாடசாலைக்கு சென்ற மாணவி இரண்டு மாதங்களின் பின் கணவனுடன் திரும்பினார்

காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தமது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளர். இச்சம்பவம் ஊவா – பரணகமையில் 05.04.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி பாடசாலை சென்று வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் ஊவா – பரணகமைப்...

என்னை அழைத்த சீ.ஐ.டி சிவாஜிலிங்கத்தை அழைக்கவில்லை! -பீரிஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் விவசாயிகளுக்கான உற்சவத்திற்காக மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வுக்கான உணவு, அலங்காரம், பஸ்களில் ஆட்களை அழைத்து வருதல் மற்றும் பரிசுப் பொருட்களுக்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான விலைப் பட்டியல் தன்வசம் உள்ளதாகவும் அவர்...

WIFI வசதியை மேலும் விரிவுபடுத்துவது குறித்து சந்திப்பு

இலங்கையில் வைபை வசதியை மேலும் விரிவுபடுத்துவதற்காக கூகுள் பலூன் வேலைத் திட்டத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் அமெரிக்காவின் Social Capital நிறுவனத்தின் நிறுவுனரான ஷமத் பலிஹபிட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் வைபை வசதியை மேலும் வலுப்படுத்தும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கடந்த வருடம் ஜூன் 28ம் திகதி கூகுள் மற்றும்...

இந்திய மீனவர்கள் 32 பேர் விடுதலை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இந்திய மீனவர்களை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவின் அடிப்படையில் மல்லாகம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்கள், செவ்வாய்க்கிழமை (05) விடுதலை செய்ததாக, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.றமேஸ்கண்ணா தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம்...

தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கற்றைநெறியைக் கற்று வெளியேறிய மாணவர்கள், தங்களுக்கு அரசாங்க வேலையைப் பெற்றுத்தருமாறு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று புதன்கிழமை (06) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். வடமாகாண தொழில்நுட்பச் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. தங்கள் சங்கத்தில் மொத்தம் 350பேர் இருப்பதாகவும் தங்களுக்கு நிபந்தனைகள் இல்லாமல் நேரடியாக உள்வாங்கும் படியும்...

இலங்கையின் தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்

உலக இருபதுக்கு-20 தொடரில் இலங்கை அணிக்குப் பெறப்பட்ட தோல்விகளுக்கும் அத்தொடருக்காக இலங்கைக் குழாமில் லஹிரு திரிமான்ன சேர்க்கப்பட்டமைக்குமான பொறுப்பை ஏற்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளரும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். உலக இருபதுக்கு-20 தொடரில், நடப்புச் சம்பியன்களாகக் களமிறங்கிய இலங்கை அணி, சுப்பர் 10 சுற்றோடு வெளியேற்றப்பட்டது. அதில்,...

ஐ.சி.சி உலக லெவன் அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு

ஐ.சி.சி உலக லெவன் டி 20 போட்டித் தொடர் அணியின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஜேசன் ராய் (இங்கிலாந்து), குவிண் டன் டி காக் (தென் ஆப்ரிக்கா, விக்கெட் கீப்பர்), விராட் கோலி (இந்தியா, கேப்டன்), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), ஆன்ட்ரே ரஸ்ஸல்...

ஐபிஎல் தொடக்க விழாவில் கேத்ரினா கைப் நடனம்

ஐபிஎல் டி20 தொடரின் 9வது சீசன் தொடக்க விழாவில் பிரபல நடிகை கேத்ரினா கைப், நடிகர் ரன்வீர் சிங் உள்பட நட்சத்திர பட்டாளம் பங்கேற்கிறது. மும்பை, ‘நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா’ அரங்கில் நாளை மறுநாள் மாலை நடைபெற உள்ள பிரமாண்டமான தொடக்க விழாவில், வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாப்...

நூறுநாள் வேலைத்திட்டத்தை இந்த ஆண்டிலும் முன்னெடுக்க வேண்டுமேன கூட்டுறவாளர்கள் அமைச்சர் ஐங்கரநேசனிடம் கோரிக்கை

கூட்டுறவு அமைச்சால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டத்தைப்போன்று கூட்டுறவு அமைப்புகளின் அபிவிருத்தி கருதி இந்த ஆண்டும் நூறுநாள் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு கூட்டுறவாளர்கள் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டுறவு அமைச்சர் ஐங்கரநேசனுக்கும் வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (05.04.2016) கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில்...

சமுர்த்தி முகாமையாளர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள்

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்ட சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் நெடுந்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், யாழ்.மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ளது. ஏழாலையிலுள்ள சமுர்த்தி முகாமையாளருக்கு எதிராகப் பெண் ஊழியர்களினால், யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆகியோரிடம் முறைப்பாடு...

‘பனாமா பேப்பர்ஸ்’ உலகை அதிர வைத்துள்ள நிதி மோசடி!! ராஜபக்ஷவினருக்கு தொடர்புள்ளதா?

விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர். வொஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கமே (International...

ஐக்கியநாடுகளுக்கான புதிய செயலாளர் நாயகம் யார்?

தற்போது ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலராக இருக்கும் பாங்கி மூனின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய இருக்கும் நிலையில் புதிய ஐக்கிய நாடுகளுக்கான செயலாளர் நாயகத்தைத் தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, நியூசிலாந்தின் முன்னாள் பிரதமரும், தற்போது ஐநா வில் மூன்றாவது முக்கிய பதவியில் இருப்பவரும், அபிவிருத்தித் திட்ட நிகழ்ச்சித்திட்டப் பொறுப்பாளராகவும் செயற்படும்...

நிரந்தர இராணுவ முகாமை கூழாவடியில் நிறுவ முயற்சி!

ஆனைக்கோட்டை கூழாவடியில் தனியாருக்குச் சொந்தமான 16 பரப்புக் காணியை இராணுவ முகாம் அமைப்பதற்காகச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அந்தக் காணியை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை வருகை தரவுள்ளதாகக் காணி உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு மாகாண முதலமைச்சர்...
Loading posts...

All posts loaded

No more posts