- Monday
- June 15th, 2026
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் மைத்துனனைக் குத்திக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ள மேல் நீதிமன்றம், எதிரியின் சார்பில் முன்வைக்கப்பட்ட கருணை மனுவின் அடிப்படையில் அதனை ஆயுட்காலச் சிறைத் தண்டனையாக மாற்றும்படி ஜனாதிபதிக்குப் பரிந்துரைத்திருக்கின்றது. இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றுள்ளது....
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பிறகு முதலில் சிம்பு, பிறகு பிரபுவோ ஆகியோரை காதலித்தவர் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் முந்தைய காதல்கதையில் திருமணம்வரை சென்றது பிரபுதேவா உடன்தான். அவருக்காக இந்துவாக மதம் மாறினார் நயன்தாரா. பிரபுதேவாவோ நயன்தாராவுக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்தார். இத்தனை தியாகங்களுக்குப் பிறகும் நயன்தாரா – பிரபுதேவா...
வட மாகாணசபை அமைச்சர்கள் அனைவரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரும் மனுவில், இதுவரை 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் 4 அமைச்சர்கள் நீங்கலாக மொத்தம் 24 உறுப்பினர்கள் இதில் கையெழுத்திடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைப் பொருளாளரும், வடமாகாண சபை பிரதி...
வடமராட்சி மணற்காடு பிரதேசத்தில் 4 ஏக்கர் சவுக்கு காடுகள் திங்கட்கிழமை (04) மாலை ஏற்பட்ட தீ விபத்தால் அழிவடைந்துள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன், செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தார். சவுக்கு காட்டில் ஏற்பட்ட தீயை யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அணைத்தமையால் தீ மேலும் பரவாமல்...
யாழ். நீதிவான் நீதிமன்றில் வைத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் 500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற சந்தேகத்தில் கைதான பொலிஸ் உத்தியோகத்தரை இன்று புதன்கிழமை (06) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முற்படுத்துமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் தண்டப்பணம் செலுத்திவிட்டு...
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் 23 சதவீதமான மாணவர்கள், காலை உணவை உட்கொள்ளாமலேயே பாடசாலைக்குச் செல்கின்றனர்' என்று யாழ்ப்பாணம் பாடசாலை மருத்துவ அதிகாரி மருத்துவர் வைத்திலிங்கம் யோகேஸ்வரன் தெரிவித்தார். 'வேதநாயகம் தபேந்திரனின் யாழ்ப்பாண நினைவுகள் - 3' நூல் வெளியீட்டு நிகழ்வில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்றது....
'இஸ்லாமிய அடிப்படை' வாதம் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் செயற்படுகின்ற வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டுக் கல்வி பயின்று, தொழில் புரிந்து அல்லது வேறு பணிகளுக்காகச் சென்று திரும்பி வருகின்ற முஸ்லிம் இனத்தவர்கள் மற்றும் இந்நாட்டிலுள்ள இனங்காணப்பட்டுள்ள கடும்போக்காளர்கள் ஆகியோரின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் செயற்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன' என்று சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல...
விடுமுறைக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அதிபரின் அறைக்கு சென்ற ஆசிரியையைத் தும்புத்தடியால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட களுத்துறை மஹாநாம வித்தியாலயத்தின் அதிபர் யமுனா நயனா காந்தி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்வதற்கு, நீதவான் சந்திம...
தமிழ்-சிங்கள புத்தாண்டு சேவையில் 3,000 பஸ்களை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அந்த பஸ்கள் யாவும், 8ஆம் திகதிமுதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 25ஆம் திகதி வரையிலும் ஈடுபடுத்தப்படும் இந்த விசேட பஸ் சேவையின் போது, பயணிகளிடமிருந்து அறவிடும் பஸ் கட்டணத்தை ஒன்றரை மடங்காக அதிகரித்து அறவிடுவதற்கு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இந்த...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை, முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இச்சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, அதற்குப்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. 130 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புத் தகவல் தெரிவிக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் இந்தியா டிவியும், சி-வோட்டர்ஸ் அமைப்பும் இணைந்து மார்ச் மாதம் 4ஆவது வாரத்தில் கருத்துக்...
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட 69 ஆயிரத்து 992 ஏக்கர் நிலப் பரப்பில், மைத்திரி அரசு 2 ஆயிரத்து 565.5 ஏக்கரை மாத்திரமே விடுவித்துள்ளது. இது அபகரிக்கப்பட்ட நிலப் பரப்பின் 3.6 சதவீதமாகும் என்று பிரிட்டன் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. "இலங்கை அரசின் மீது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தம்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தகவலை மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவிலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினரில் 50 பேர் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக கடமையிலிருந்து நீங்கும்படி இராணுவத் தலைமையகம்...
தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமான வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கை நேற்று முன்தினம் பி.ப 3.00 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் வீட்டுத் தோட்டப்பயிர்கள் மாவட்ட...
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளராக இவர் பணியாற்றி வருகிறார். ஹர்சா போக்லேயுடன் இணைந்து கிரிக்கெட் வாரிய மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறார். கவாஸ்கரின் வர்ணனையாளர் ஒப்பந்தம் ஏப்ரல் – மே மாதத்துடன் முடிகிறது. அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கவாஸ்கருக்கு கொடுக்கப்படும் பணம்...
சூர்யா நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தன் சிங்கம்-3 படப்பிடிப்பிறகாக ஆந்திராவில் பிஸியாகவுள்ளார் சூர்யா. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து காரில் வந்த போது, ஒரு பெண் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடியுள்ளார். இதைக்கண்ட சூர்யா உடனே தாமதிக்காமல் அவரை தன் காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தற்போது அந்த பெண்ணிற்கு...
பாடசாலையிலிருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தப்பட்டமை குறித்து, 34வயதுடைய திருமணமான நபர் ஒருவர் 04.04.2016 அன்று இரவு எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெமோதரை தமிழ் வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்று வந்த 9வயது நிரம்பிய மாணவியே இவ்வாறு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டவராவார். அம்மாணவி, ஆபத்தான நிலையில்...
இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 99 பேரை விடுதலை செய்ய அரசு நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை இராமநாதபுரத்தைச் சேர்ந்த 49 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்கள், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், தஞ்சாவூரைச் சேர்ந்த 3 மீனவர்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த 20 மீனவர்கள்...
நடிகர் சங்க கட்டடத்திற்காக நிதி திரட்ட, ஏப்., 17ம் தேதி, சென்னை, சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதற்காக, ஆறு பேர் வீதம், எட்டு அணிகள் மோத உள்ளன. இதில், நடிகர்கள் விஷால், சிவகார்த்திகேயன், கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா தலைமையிலான அணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. கோப்பை அறிமுக...
நாகார்ஜூனாவுடன் இணைந்து கார்த்தி நடித்து வெளியாகியுள்ள படம் தோழா. தெலுங்குப்பட டைரக்டர் வம்சி இயக்கியுள்ள இந்த படம் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது திரைக்கு வந்தது. கிரிக்கெட் விளையாட்டினால் ரசிகர்கள் தியேட்டருக்கு வராமல் தியேட்டர்கள் காற்று வாங்குமோ என்று பயந்து கொண்டிருந்த தோழா யூனிட்டுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரசிகர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
