நானும், ரஜினியும் நடிக்காததற்கு இதுதான் காரணம்- கமல்!

தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரைப்படத் துறையில் பன்முகம் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள், பன்னாட்டு விருதுகள் என அவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனுக்கு பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த திரைப்பட ஆவணக் காப்பாளரான ஹென்றி லாங்லாய்ஸ் பெயரில் அளிக்கப்படும் விருது பாரீஸில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டுள்ளது....

தேசிய அரசாங்கத்தை கடுமையாக எச்சரிக்கும் வேலையில்லா பட்டதாரிகள்!

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பு கோட்டையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளார்கள். பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகள், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அரசாங்கம் தங்களுக்கு தருவதாகக் கூறிய வேலைவாய்ப்புக்களை இதுவரை வழங்கவில்லை எனவும், “தொழில் வழங்கப்படும்” என்ற உறுதிமொழி வாய் வார்த்தையில் மட்டுமே காணப்படுவதாகவும், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவில்லை...
Ad Widget

சாவகச்சேரி சந்தேக நபர் இதுவரை கொழும்புக்குக் கொண்டுவரப்படவில்லை

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்னமும் கொழும்புக்கு கொண்டுவரப்படவில்லையெனவும் அவர் வவுனியாவில் வைத்தே விசாரணை செய்யப்படுவதாகவும் சிறீலங்காக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைது தொடர்பாக கடந்த திங்கட் கிழமை தீவிர விசாரணைப் பிரிவின் ஆய்வாளர் இந்துனில் கொழும்பு நீதிமன்ற நீதவான் அருணி ஆட்டிக்கல முன்னிலையில்...

யாழ்ப்பாணத்தில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து 9 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை மாற்றி கல்வீடுகளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 அளவில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பால் வெளியிட்டுள்ள...

65,000 வீட்டுத் திட்ட வடிவமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துக- வட மாகாண ஆளுநர்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ள வீடுகளின் வடிவமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பரிந்துரை செய்துள்ளார். இந்தியாவின் த ஹிந்து பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த திட்டத்தை நிறுத்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ள வட மாகாண ஆளுநர் பல்வேறு மாற்றங்களுடன் அதனை...

1,200 இந்தியர்கள் இலங்கையில் சிறுநீரக தானம்!

கடந்த நான்கைந்து ஆண்டுகளில் சுமார் 1,200 இந்தியர்கள் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக தானம் செய்திருப்பதாக நீதிமன்றம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு நகரில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் தரப்பு வழக்கறிஞர் லஷான் டயஸ் நீதிமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட...

வடமராட்சியில் மூடப்பட்டிருந்த மதுபானசாலை! ஆளுநரின் முயற்சியினால் மீண்டும் இயங்க அனுமதி

ஆளுநர் மற்றும் அரச அதிபரின் முயற்சியினால் வடமராட்சியில் பூட்டப்பட்ட மதுபானச்சாலையினை சட்டத்தின் பிரகாரம் தற்காலிகமாக இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பல்லாயிரக் கணக்கான வெடிகள் கொளுத்தி மிகப் பெரும் ஆரவாரத்துடன் மீண்டும் திறக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் பிரதான சிவன் ஆலயம் ஒன்றிற்கு மிக அருகிலும் மற்றும் வேறு சில காரணங்கள் தொடர்பிலும் முன்னாள் ஆளுநர்...

புலிகளின் இராணுவப் பேச்சாளராக பீரிஸ் மாறியது எப்போது? – சிவாஜிலிங்கம் கேள்வி

விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் எப்போது மாறினார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார். தன்னைப் போன்று கருத்துக் கூறிய வடமாகாண சபை...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் 'தராக்கி' சிவராமின் 11ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ். முற்றவெளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியின் முன்னால் இம்முறை தராக்கியின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதியுடன் ஊடகவியலாளர் 'தராக்கி' சிவராம் கொல்லப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. தாராக்கியின் 10ஆவது...

வடக்கு கடலில் சோதனைகளை தீவிரப்படுத்த கடற்படைக்கு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவு!

வட இலங்கையின் ஆட்புல கடல் எல்லைக்குள் பயணிக்கும் அனைத்து படகுகளையும் திடீர் சோதனை நடத்தி போதைப்பொருள் கடத்தல்களைத் தடுத்து நிறுத்துமாறு வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார். அதேநேரம் கொழும்பில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரின் பிரிவொன்றை வடகடலில் கடலோரக் காவல் நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு...

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் சிக்கினர்

அச்சுவேலி பகுதியில் உள்ள 3 வீடுகளில் 110 பவுண் நகைகள், சனிக்கிழமை (02) இரவு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான சந்தேகநபரான வான் சாரதி அன்றைய தினம் இரவே கைது செய்யப்பட்டதாகவும், மேலும் இரண்டு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (03) கைது...

வீடு புகுந்து தாக்கிய இருவர் கைது

கொழும்புத்துறையிலுள்ள வீடொன்றுக்குள் கடந்த 2ஆம் திகதி புகுந்து வீட்டிலிருந்தவர்களை தாக்கியதுடன் பொருட்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை திங்கட்கிழமை (04) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குருநகர் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும்...

சாவகச்சேரி சம்பவத்தின் உண்மை விரைவில் வரும் என்கிறார் சுமந்திரன்!!

"ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுவது சர்வசாதாரண விடயம். ஆனால், சாவகச்சேரி சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், தமிழரின் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்கப் போகின்றது என்றும் தெற்கில் உள்ள சிலர் ஊளையிடுகின்றனர். இது வேடிக்கையானது. மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடி உரிமைகளைப் பெறவே...

8ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடாளாவிய ரீதியிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளும் முதலாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 08ஆம் திகதி மூடப்படும். அப்பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக 25ஆம் திகதியன்று திறக்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. மேலும், முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் முதலாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 11ஆம் திகதியன்று மூடப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவிததுள்ளது.

சிறுநீரகம் வழங்கியதை சந்தேகநபர்கள் ஒப்புக் கொண்டனர்

சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள எட்டு பேரில் அறுவர் தாங்கள் சிறுநீரகத்தை வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளதாக, நீதிமன்றத்தில், அவர்களது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். சந்தேகநபர்கள் இந்த நாட்டின் சட்டத்துக்கு அமையவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக சுகாதார...

யாழில் சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு

கொடிகாமம் பகுதியில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு விஷேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர். பருத்தித்துறையில் இருந்து கொழும்பிற்கு 95 கிலோ 865 கிராம் நிறையுடைய சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகளை கடத்த முயற்சித்த, நிலையில் அந்தக் கடத்தல்...

சென்னை-28 இரண்டாம் பாகம் தொடங்கியது- ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை-28 படம் தான் முதன் முதலாக சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து எடுத்து சூப்பர் ஹிட் ஆன படம். இந்த படத்தின் பாணியில் பல படங்கள் பிறகு வந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று தொடங்கியுள்ளது. இதில் முதல் பாகத்தில் நடித்த பலரும் இருக்க, வைபவ். மஹத் இணைந்துள்ளனர். ஆனால், முதல் படத்தில் கிட்டத்தட்ட...

சிம்புவும் தனுஷூம் சேர்ந்து துருக்கி பயணம்?

கௌதம்மேனன் இப்போது சிம்புவை வைத்து அச்சம்என்பதுமடமையடா படத்தையும் தனுஷை வைத்து எனைநோக்கிப்பாயும்தோட்டா படத்தையும் எடுத்துக்கொண்டிருக்கிறார். அச்சம்என்பதுமடமையடா படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்டதாகவும் பாடல் மட்டும் படமாக்கப்படவேண்டியிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. இதற்குநடுவே தனுஷ் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இவ்விரு படங்களின் பாடல்களைப் படமாக்க துருக்கி செல்லத் திட்டமிட்ட இயக்குநர்...

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தம்?

பிரபல இசைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இலங்கை இசை நிகழ்ச்சியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒஸ்கார் விருது நாயகன் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இம்மாதம் 23ம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்படவிருந்தது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தரப்பிடமிருந்து ஏற்பாடுகளை மற்றுமொரு தரப்பு பறித்துக்கொள்ள முயற்சித்துள்ளது. இந்த இரண்டு தரப்புமே நல்லாட்சி அரசாங்கத்தை வெற்றியீட்டச்...

வடக்கிற்கு ரயில் மூலம் மேலதிக படையினர் அனுப்பி வைப்பு!

வடக்கில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில், நேற்று முன்தினம் வடக்கு நோக்கிச் சென்ற ரயில் ஒன்றில் இராணுவத்தினரும் இராணுவத் தளபாடங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பாதுகாப்பாக உலங்கு வானூர்தி ஒன்று ஆகாயத்தில் பறந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வடக்கில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையினரும் முப்படையினரும், புலனாய்வுப் பிரிவினரும்...
Loading posts...

All posts loaded

No more posts