பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை!! புதைக்கப்பட்டது!!!

2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப்போரில் வீரச்சாவடைந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை புதைக்கப்பட்டது என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறீலங்கா இராணுவத்தளபதியாக இருந்தவரும் தற்போதைய அரசாங்கத்தால் இராஜதந்திரியாக நியமிக்கப்பட்டவருமான மேஜர் ஜெனரல் தயாரத்நாயக்கா அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்குகையில் போரில் வீரமரணமடைந்த பொட்டம்மான் மற்றும் பிரபாகரன் ஆகியோரின் உடல்கள் எரிக்கப்பட்டு சாம்பல்...

புலிகளின் பெயரால் படுகொலைகளைச் செய்த சிறீலங்கா புலனாய்வுப் பிரிவு

விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, படைஅதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை படுகொலை செய்ததாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக சத்ஹண்ட என்ற சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில், முன்னாள் படை அதிகாரியும், பின்னர் அரசியலில் ஈடுபட்டவருமான மேஜர் ஜெனரல் லக்கி அல்கம, மற்றும் சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை...
Ad Widget

யுத்த காலம் போன்று படையினரின் சோதனை நடவடிக்கைகள்

படையினர் சோதனை நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொலஸஸார், முப்படையினர், புலனாய்வுப் பிரிவினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி மற்றும் மன்னாரில் ஆயுதங்கள், தற்கொலை குண்டு அங்கி போன்றன மீட்கப்பட்டதனைத் தொடர்ந்து இவ்வாறு பாதுகாப்பு படையினர் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத சந்தேகத்திற்கு இடமான நபர்களை கைது...

வட மாகாண முதலமைச்சரின் அலுவலகம் இன்று முதல் கைதடி பேரவைச் செயலகத்தில்

வட மாகாண முதலமைச்சரின் அலுவலகம் இன்று திங்கட்கிழமை தொடக்கம் கைதடியில் உள்ள பேரவைச் செயலக வளாகத்திற்குள் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் இயங்கவுள்ளது. வட மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் நேற்று வரை யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கிவந்த முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் அமைச்சிற்குரிய அலுவலகம் என்பன இன்று முதல்...

வடமராட்சி கிழக்கில் பொதுமக்களின் காணிகள் தேசிய பூங்காவாக பிரகடனம்: மக்கள் எதிர்ப்பு

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் 5 கிராமங்களில் பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்கள், விவசாய நிலங்கள், கடற்றொழில் செய்யும் பகுதிகள் உள்ளடங்கலாக பெருமளவு நிலத்தை வன ஜீவராசிகள் திணைக்களம் அடாத்தாக எல்லையிட்டு தேசிய பூங்காவாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்தியிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் சுண்டிக்குளம், போக்கறுப்பு, முள்ளியான், கட்டைக்காடு, நித்தியவெட்டை ஆகிய...

இந்திய நிறுவனத்தின் வீடமைப்பு உடன்படிக்கை ரத்தாகவுள்ளது!

இலங்கையில் வீடமைப்பு திட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த இந்திய ஹைதராபாத் நிறுவனம் ஒன்றுடனான உடன்படிக்கை ரத்துச்செய்யப்படவுள்ளது. ஐவிஆர்சிஎல் என்ற இந்த நிறுவனத்தின் உடன்படிக்கையே ரத்துச்செய்யப்படவுள்ளது. இந்த நிறுவனத்தினால் கொல்கத்தாவில் அமைக்கப்பட்ட மேம்பாலம் அண்மையில் உடைந்து வீழ்ந்து 24 பேர் அதில் பலியாகினர். இதனையடுத்து இலங்கையின் நகர அபிவிருத்தி சபை குறித்து நிறுவனத்துடனான உடன்படிக்கையை ரத்துச்செய்யவுள்ளது. குறித்த நிறுவனத்தினால்...

காணாமல்போனோர் தொடர்பில் 3,000 இரட்டை முறைப்பாடுகள்!

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வடக்கு, கிழக்கிலிருந்து 3 ஆயிரம் இரட்டை முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன், காணாமல்போனவர்கள் தொடர்பில் இதுவரையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும், நிர்வாக மட்டத்திலான சிக்கல்கள் இருப்பதால் அவற்றை விசாரிப்பதற்கு நீண்டநாட்கள் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்....

தற்கொலை அங்கி சூத்திரதாரி பிரபாகரனின் நண்பர்?

தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களுடன் சாவகச்சேரி பிரதேசத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி சந்தேநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முக்கிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், கைப்பற்றப்பட்ட...

விடுவிக்கப்பட்ட பலாலி பகுதிகளில் சட்டவிரோத கல் அகழ்வு

அண்மையில் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பகுதிகளான பலாலி வடக்கு, பலாலி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத கல் அகழ்வு மற்றும் காட்டுமரங்கள் திருடப்படுவதாக அப்பகுதியில் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். விடுவிக்கப்பட்ட பகுதிகள், பலாலி பொலிஸ் எல்லைக்குட்பட்டதாக காணப்படுகின்றது. பலாலி பொலிஸ் நிலையம் மக்கள் மீளக்குடியமர்ந்தும் தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணப்படுவதானால், தாம் பெரிதும் சிரமங்களை எதிர்;கொண்டு...

மக்களின் கருத்தறிய பிரதேச செயலகங்களில் கருத்துப் பெட்டி

வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பான மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கான முயற்சிகளில் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு ஈடுபட்டுள்ளது. அதற்கமைய மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கான கருத்துப் பெட்டிகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக இக்கருத்துப் பெட்டி வைக்கப்பட்டுள்ளன. இவ்வீட்டுத் திட்டம் தொடர்பில் பல தரப்புகளிலும் பல்வேறு...

யாழில் புதிய ஹோட்டல் திறப்பு – ஜனாதிபதி பங்கேற்பு

யாழ். நகரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஹோட்டலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். அத்துடன் இதன்போது, யாழ். கரைநகர் பகுதியில் உள்ள சுற்றுலா மற்றும் ஹோட்டல் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்கள் ஐவருக்கு ஜனாதிபதி சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், அம் மாணவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வில்...

வடக்கில் புத்தர் சிலை அமைப்பது குறித்த சர்ச்சைக்கு மனோவின் பதில்

யாழ் நாகவிகாரையினால் கடற்கரையோரம் அல்லது கடலுக்குள் கட்டப்படவிருந்த புத்தர் சிலை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி வழங்கப்படாததால் நிறுத்தப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் கடற்கரையோரம் அல்லது கடலுக்குள் எந்தவித கட்டுமானமும் செய்ய முடியாது என்பது யாழ் நாகவிகாரை அதிபதிக்கு தெரிந்து இருக்க வேண்டும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்...

மகளின் கொலைக்கு நீதி தேவை: வித்தியாவின் தாய்

புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தனது மகளுக்கு நீதி வேண்டும் என வித்தியாவின் தாய் பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் கோரியுள்ளார். ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்த உறுதியின்படி ஞாயிறன்று வவுனியாவில் அவர்களது குடும்பத்திற்கு என வீடு ஒன்று வழங்கப்பட்டது. இதனை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ருவான் விஜேவர்தன வழங்கினார். வவுனியா கொக்குவெளி என்ற இடத்தில் இராணுவத்தினரின்...

வட இலங்கை மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசு உறுதி

இலங்கையின் வடக்குப் பகுதி மீனவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை முல்லைத்தீவில் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அளித்துள்ளார். முல்லைத்தீவில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடி ஆராய்ந்ததன் பின்னர் அதற்கு தீர்வு காணும் நோக்கில் குழு ஒன்றையும் அவர் அமைத்துள்ளார். அரசாங்க அனுமதி பெற்ற...

பெண்கள் உலக கோப்பை போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக ‘சாம்பியன்’ (Highlights இணைப்பு)

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக சாம்பியன் கோப்பையை தனதாக்கி வரலாறு படைத்துள்ளது. 5–வது பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று பிற்பகல் நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. இதில்...

வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது முறையாக ‘சாம்பியன்’ (Highlights இணைப்பு)

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீசும்,...

நாவலர் விருதுக்கான குறும்படப் போட்டி 2016

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் மற்றும் பாரதி விளையாட்டுக்கழகம் - பிரான்ஸ் இணைந்து நடாத்தும் நாவலர் விருதுக்கான குறும்படப் போட்டி 2016 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது .ஈழத்தில் வசிப்பவர்கள் அனுமதிப்பணமாக 50 யூரோ செலுத்த வேண்டியதில்லை. பணப்பரிசுகளை பெற்றால் மட்டும் 50 யூரோ செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் போட்டியானது ஈழத்து கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன்...

கோத்தபாயவின் கொலைகளை அம்பலப்படுதவுள்ள புலனாய்வு அதிகாரி!

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை வழங்க, கடற்படையின் சிரேஷ்ட புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை, பாடசாலை மாணவர்களை கடத்தி சென்று கொலை செய்தமை மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல குற்றங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஆயுத்தமாக...

யாழ். செயலகம் முன் வேலணை மக்கள் ‘அம்மா’வுக்காக ஆர்ப்பாட்டம்!

வேலணை பிரதேச செயலாளர் மஞ்சுளா தேவி சதீஸ்வரன் யாழ். மாவட்ட செயகத்திற்கு மாற்றப்பட்டதை கண்டித்து, அவர் மீண்டும் வேலணை பிரதேச செயலகத்திற்கு வரவேண்டும் எனத் தெரிவித்து வேலணை பிரதேச மக்கள் நேற்று மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களுக்காக கடலில் நடந்த பெண், மக்கள் பசி தீர்த்த எமது அம்மா வேண்டும், சமூக சேவையாளர்...

ஹெல உறுமயவின் குற்றச்சாட்டை விக்னேஸ்வரன் நிராகரிப்பு!

வடமாகாண தமிழ் மக்களால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதால் அவர்களின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்குமே பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளதென முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஹிக்கடுவயில் இடம்பெற்ற 32வது முதலமைச்சர்கள் மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமை தொடர்பாக ஜாதிக ஹெலஉறுமயவின் தேசிய அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்....
Loading posts...

All posts loaded

No more posts