Ad Widget

ஐக்கியநாடுகளுக்கான புதிய செயலாளர் நாயகம் யார்?

தற்போது ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலராக இருக்கும் பாங்கி மூனின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய இருக்கும் நிலையில் புதிய ஐக்கிய நாடுகளுக்கான செயலாளர் நாயகத்தைத் தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

HelenClarkRTa1200

இதற்காக, நியூசிலாந்தின் முன்னாள் பிரதமரும், தற்போது ஐநா வில் மூன்றாவது முக்கிய பதவியில் இருப்பவரும், அபிவிருத்தித் திட்ட நிகழ்ச்சித்திட்டப் பொறுப்பாளராகவும் செயற்படும் ஹெலன் கிளார்க் ஐநாவின் உயர் பதவியான செயலர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் 193நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய பொதுச்சபைக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் யார் என விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

article-doc-9c85z-55PtEAV3tb373293650ebfdcfb9b-517_634x397

Related Posts