- Monday
- June 15th, 2026
தென்மராட்சி – வரணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வரணி மத்தியகல்லூரிக்கு அருகிலுள்ள வீதியூடாக குறித்த நால்வரும் பணித்துக்கொண்டிருக்கையில் இடைமறித்த குழு ஒன்று அவர்களை வாள்களால் வெட்டியதுடன் இரும்புக் கம்பிகளாலும் தாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கவுள்ள 65,000 இரும்புப் பொருத்து வீட்டுத்திட்டத்தை மாற்றி கல்வீடுகளை வழங்குமாறு கோரியும், திருகோணமலை சம்பூர் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் அமையவுள்ள அனல் மின்நிலையத் திட்டத்தை நிறுத்தி மாற்றுத்...
புதிய அரசின் மீது வடக்கு மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது குறைந்து கொண்டு போகிறது என யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் அங்கத்தவர்காளான 9 பேர் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட்...
சித்திரைப் புத்தாண்டு சமயத்தில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டின் போது கவனமாக செயல்படுமாறு இலங்கை கண் அறுவை சிகிச்சை விஷேட வைத்தியர் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தீப்பொறி பரவல் காரணமாக சிறுவர்களுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று அந்த சங்கம் கூறுகின்றது. அதன்காரணமாக பிள்ளைகளின் கண்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு விஷேட வைத்தியர் தர்மா இருகல்பண்டார...
செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் கூட தமிழ் மக்களுக்காக என்று மட்டும் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை, தமிழ் பேசும் மக்கள் என்றே நடைபெற்றிருக்கின்றன, தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எங்களுடைய ஒற்றுமை மூலம் தான் அதிகாரப் பகிர்வின் முழுமையைப் பெறமுடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர்...
காங்கேசன்துறை கடற்பகுதியில் தென் பகுதியைச் சேர்ந்த 11 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கு இடமான முறையில் மூன்று படகுகளில் பயணித்து கொண்டிருந்த போதே, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு சிறுபடகுகளும், 40 அடி நிளமான பெரிய படகும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களை மாவட்ட பிரதி நீரியல்வளத்துறை பணிப்பாளர் ரமேஸ் கண்ணாவிடம் கடற்படையினர்...
கடற்படைமுகாம் மற்றும் இராணுவ முகாம் அமைப்பதற்கு தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக காணி அளவீடு செய்யும் பணியினை மேற்கொள்ள கூடாது என கோரி நில அளவை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.திருநெல்வேலியில் உள்ள நிலஅளவை அலுவலகம் முன்பாக இன்று காலை 8.30 மணி முதல் குறித்த மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டன. இந்த போராட்டத்தின்...
இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் அக்ஷய் குமார், இன்னும் பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். ரஸ்டோம் படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார். ஆனால் அவர் காலாவதியான விசா வைத்திருந்தாக கூறி விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் அவரை காக்கவைத்த அதிகாரிகள், பிரச்சனையை...
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (08) முதல் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது. பயணிகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இந்த சேவை இடம்பெறவுள்ளதாக அந்த சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக கூறினார். அத்துடன், புத்தாண்டின் பின்னர் வெளிப்பிரதேசங்களிலிருந்து விஷேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும்...
அடுத்து வரப்போகும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஈபிடிபி கட்சி இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தற்போதைய சிறீலங்காவின் அதிபரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான மைத்திரிபாலசிறிசேனவின் ஆலோசனைக்கமைய, கட்சியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர நட்புக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையிலீடுபட்டுள்ளார். முதற்கட்டமாக, எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன்...
இலங்கை கிரிக்கெட் விளையாட்டு சபையில் மீண்டும் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார். அதனைத்தாண்டி இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்படுமாயின் எனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு செல்வேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ்...
பங்களாதேஷ் பகுதியில் பேஸ்புக் இணையத்தளப் பக்கத்தில் மதத்துக்கு எதிரான தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்திய சட்ட மாணவர் ஒருவர் வெட்டுக் கத்தியால் வெட்டி புதன்கிழமை பின்னிரவு படுகொலை செய்யப்பட்டுள் ளார். நஸ்முதீன் சமாத் (26 வயது) என்ற மேற்படி சட்ட மாணவர் மதத் தலைவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவ தினம் டாக்கா பல்கலைக்கழகத்துக்கு...
யாழ். இந்தியத் துணைத் தூதரகமானது வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து பட்டிமன்றமொன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. சுதந்திர இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி டீ.சு.அம்பேத்கார் அவர்களின் 125வது பிறந்த தின நினைவு நாளை முன்னிட்டும்,தமிழ் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் எதிர்வரும் 14ம் திகதி 5.30 மணிக்கு சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்வு...
யாழ்ப்பாணத்தில் படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் சுமார் 60 ஏக்கர் காணியும், ஆனைக்கோட்டை பகுதியில் 16 பரப்பு காணியும் படையினரின்...
வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட வரைவு எதிர்வரும் 16 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட வரைவு வடமாகாண சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த வரைபு எதிர்வரும் 16 ஆம் திகதி தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான...
இலங்கையர்கள் 46 பேர் பணப் பதுக்கல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து பனாமா பேப்பர்ஸ் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் இலங்கையின் பெரும் வர்த்தகர்களான போரா சமூக முஸ்லிம்கள் 13 பேர் மற்றும் ஐந்து தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர். சிங்களவர்கள் 25 பேரில் லக்பிம பத்திரிகை மற்றும் சுமதி குரூப் நிறுவனங்களின் தலைவரும், அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவருமான...
ஈபிடிபி உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்ற ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமான கைத்துப்பாக்கிக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியமை சட்டரீதியானதா என்பது குறித்து ஆலோசனை பெற்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணித்துள்ளார். அரசாங்கத்தின் அனுமதிப் பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார் என்பதற்காக ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்...
யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் தொடர்பான...
சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பிரதான சந்தேகநபரின் அலைபேசியிலிருந்து உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி,...
யாழ் மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அரசாங்க அதிபர் இங்கு உரையாற்றுகையில், மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியின்மூலம் பல்வேறு செயற்றிட்டங்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனடிப்படையில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதுடன், மூவாயிரம்...
Loading posts...
All posts loaded
No more posts
