இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை ஐ.நா முன்கூட்டியே அறிந்திருந்தது!

இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை அறிந்து வைத்திருந்தமை குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது. இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய...

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு: 13ஆவது சந்தேகநபரும் சிக்குவார்

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குத் தொடர்பில் 13ஆவது சந்தேகநபரை கைது செய்யவுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில், இன்று திங்கட்கிழமை (11) தெரிவித்தனர். குறித்த வழக்கு, நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னதாக கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, 'கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களுக்கு மேலதிகமாக 13ஆவது...
Ad Widget

ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ எடுத்த இராணுவம்

ஆனைக்கோட்டை, கூழாவடியில் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணியை இராணுவ முகாமின் நிரந்தர தேவைக்காக சுவீகரிப்பதற்காக இன்று திங்கட்கிழமை (11) மேற்கொள்ளப்படவிருந்த நிலஅளவை பணியை தடுத்து நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்த மக்களை, இராணுவ சிப்பாய் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் வீடியோ எடுத்தார். அலைபேசி ஒன்றில் உரையாடிக்கொண்டு, பிறிதொரு அலைபேசியை மதிலில் வைத்து, ஆர்ப்பாட்டம் செய்த அனைவரையும்...

வித்தியா வழக்கு – சந்தேகநபர்களுக்கு எச்சரிக்கை

புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள் தொடர்பில், நீதிமன்றத்தில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க முடியும், அதனைவிடுத்து, வெளியே கருத்து தெரிவிக்க முடியாது, அவ்வாறு கருத்து தெரிவித்தால் அது தொடர்பில் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் சந்தேகநபர்களுக்கு கடும் எச்சரிக்கை...

யாழ் அரசாங்க அதிபர் அலுவலகத்தை பூட்டி முற்றுகை போராட்டம்

யாழில் சுவீகரிக்கப்படவிருந்த காணிகளை சுவீகரிக்காது தடுத்து நிறுத்துமாறு வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் யாழ். அரசாங்க அதிபர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். யாழ். ஆணைக்கோட்டை, கூழாவடி இராணுவ முகாம் பகுதியிலுள்ள ஐந்து தனிநபர்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு காணிகளை இன்று திங்கட்கிழமை நில அளவையாளர்கள் அளப்பதற்கு முற்பட்டனர். இந்தநிலையில்,...

ஆட்டோ சாரதிகளே எச்சரிக்கை..!

முச்சக்கர வண்டியொன்றில் கூடிய சத்தத்துடன் பாடலை ஒலிக்கச் செய்துகொண்டு சென்ற சாரதிக்கு மூவாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது. பதுளை, தெய்யனாவலையைச் சேர்ந்த ஏ.ஐ.ஆர் ஆனந்த என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில்...

அதிக வெப்பநிலையால் சிறுவர்கள் பாதிப்பு

வடமகாணத்தில் தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இன்று காலை 9.00 மணியில் இருந்து 11.00 மணிவரைக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் 100க்கு மேற்பட்ட சிறுவர்கள் வெளிநோயாளர் பிரவில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், வெளிநோயாளர்கள் என பலர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். தொடர்ந்து...

பொலிஸ் சேவைக்கு பத்தாயிரம் வெற்றிடங்கள்!

பொலிஸ் கான்ஸ்டபிள் சேவைக்கு பத்தாயிரம் வெற்றிடங்கள் நிலவுவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொலிஸ் சேவையை சிறந்த முறையில் முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலளார் ஆரியதாச குரே மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 2500 பேரை சேவையில் அமர்த்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்....

ஒருநாள் கூத்துக்காக பழமையான கோட்டையை உடைத்த இராணுவத்தினர்!

கலாசார நிகழ்வு ஒன்றுக்காக தொன்மை மிக்க பூநகரி கோட்டையின் சில பகுதிகளை இராணுவத்தினர் நேற்று உடைத்துள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் கோட்டையின் சில பகுதிகளை உடைத்து தங்களது நிகழ்வு ஏற்பாட்டு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பூநகரி-வாடியடிச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கோட்டையின் சில பகுதிகளே இராணுவத்தினரால் உடைக்கப்பட்டுள்ளது....

மலர்வளையங்களிலும் மகிந்த கொள்ளை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொள்வனவு செய்த பெறுமதிமிக்க மலர்வலயங்கள் தொடர்பிலான நிதி முறைகேடு குறித்த விசாரணைகளை சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தடுத்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச, பொதுமக்களின் வரிப்பணங்களின் மூலம் பெறுமதி மிக்க மலர்வலயங்களை கொள்வனவு செய்துள்ளார். இதன்போது அவர் மலர்வலயங்களின் பெறுமதியை காட்டிலும் அதிக விற்பனை விலைகளிலேயே அதற்கான ரசீதுகளை பெற்றுள்ளார்....

த.தே.கூட்டமைப்பினர் இந்தியாவில் உள்ள தமது குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்க்காகவே மௌனம் காக்கின்றனர்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழையும் இந்திய மீனவர்கள் தொடர்பிலும் சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பிலும் கூட்டமைப்பு மௌனம் காக்க காரணம் இந்தியாவில் உள்ள தமது குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற காரணத்தால் தான் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில்...

இரசாயன உரத்தைப் பயன்படுத்தாமல் தெல்லிப்பழையில் இயற்கை விவசாயம்!

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மானிடம் இயற்றை விவசாயப் பண்ணையை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டதுடன் இதுபோன்ற இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் இராசாயன உரம் மற்றும் கிருமிநாசினிகளின் தாக்கத்தினால் மக்கள்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான ஆய்வு மற்றும் பயிற்சித் தொகுதி!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மற்றும் பயிற்சித் தொகுதியை நிர்மாணிப்பதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்துக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தினூடாக (ஜய்கா) ஜப்பான் யென் 1,667,000,000 (அண்ணளவாக 2,100 மில்லியன் ரூபா) மானிய உதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் பிரதான நோக்கம் பயனுள்ள...

யாழ் முயற்சியாளர் 2016 கண்காட்சி நிகழ்வு

உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி ஒன்றின் ஆரம்ப நிகழ்வு இன்று (10) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ் மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு அறிமுகம் செய்யும் நோக்கிலும் அதற்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் நடாத்தப்படும் இக்கண்காட்சியானது இன்றும்...

தமிழ் மக்கள் பேரவையின் வரைவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வின் முன்மொழிவு வரைவு தீர்வு திட்டம் இன்று ஏகமனதாக வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய வைத்திய கலாநிதி ப.லக்ஸ்மன் தெரிவித்தார். இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அச்சு பிரதிகளையும் மிக விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

தனியார் விவசாய நிறுவனங்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் -பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள்

வடக்கில் அண்மைக்காலமாகப் பல தனியார் நிறுவனங்கள் புதிய பயிரினங்களை விவசாயிகளிடையே அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிறுவனங்களின் நம்பகத்தன்மையைத் தெரிந்து கொள்ளாமல், வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். எழுதுமட்டுவாழ் பிரதேச கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.04.2016) நடைபெற்றது....

சேந்தாங்குளம் ஆலயத்திற்கு சொந்தமான 36 ஏக்கர் காணி படையினரால் விடுவிப்பு

யாழ்ப்பாணம் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 36 ஏக்கர் காணி கடற்படையினரால் இன்று சனிிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – சேந்தாங்குளத்திலுள்ள ஆலயத்திற்கு சொந்தமான குறித்த ஏக்கர் காணிகள் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தநிலையில், கத்தோலிக்க மக்கள் மற்றும் குருக்களின் எதிர்ப்பினால் குறித்த காணி விடுவிக்கப்பட்டதாக அருட்தந்தை ஜெ.ஏ.அருள்தாஸன் தெரிவித்தார். குறித்த காணியை...

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் ஆயுதக் கிளர்ச்சி ஏற்படும்!- ஜனாதிபதி எச்சரிக்கை

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் எதிர்காலத்தில் நாட்டை பிரிப்பதற்கான ஆயுதக் கிளர்ச்சிகள் மீண்டும் தலைதூக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகாவின் மக்கள் புரட்சி சுதந்திர வெற்றியின் 60ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும்...

வட மாகாணசபையின் தீர்வு யோசனை தெற்கில் இனவாதத்தை தூண்டிவிடுமாம்!

வட மாகாண சபையினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் தீர்வு யோசனை தெற்கில் இனவாதத்தைத் தூண்டிவிடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். “யுத்தம் நிறைவுக்கு வந்து நாட்டில் நல்லிணக்கம் உருவாகி வரும் நிலையில் வட மாகாண சபை முன்மொழிந்துள்ள யோசனை காலத்துக்கு பொருத்தமற்றது.” என்றும் அவர்...

பேஸ்புக் மூலம் யுவதியை ஏமாற்றி நகைகளை அபகரித்த பொறியியலாளர் கைது!

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, பெண்ணொருவரை திருமணம் புரிவதாகக் கூறி ஏமாற்றி, அவரிடமிருந்து 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளையும், பணத்தையும் அபகரித்த பொறியியலாளர் ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன், 2012 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமாகிய குறித்த...
Loading posts...

All posts loaded

No more posts