- Tuesday
- June 16th, 2026
யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டினைமுன்னிட்டு மாநகரசபை மைதானத்தில் அழகு ராணிப் போட்டியினை நடாத்தவுள்ளனர். குறித்த நிகழ்வுகள் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளின் அங்கமாக நடைபெறவுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி வீரசிங்க தெரிவித்தார். சித்திரை புத்தாண்டில் தங்க இல்லம் எனும் தொனிப்பொருளில் ஏப்ரல் 18 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் நகர சபை...
தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்துத்துவோரின் வாகன அனுமதிப்பத்திரத்தை மீண்டும் கையளிக்கப்போவதில்லை என்றும், நேற்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். 'இதற்கு முன்னரும், மது போதையில் வாகனம் செலுத்தியவர்களின்...
இலங்கைக்கான அமெரிக்க தேசிய உதைபந்தாட்ட அணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு வீரர்கள் தெரிவாகியுள்ளனர். இந்த அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் முறையே யாழ் வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி.தினோஜன், வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் டி.நிமல்ராஜ், யாழ். கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எச்.எம்.டி.டி. நாரண்பணாவ, யாழ் புள்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பிரசாத்குமார்ஆகியோரே தெரிவாகியுள்ளனர். கடந்த...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வீதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. நாமல் ராஜபக்ச நடனமாடும் போது, அவரை சுற்றி, சிறுவர்களும் சிறுமிகளும் துணை நடனமாடுகின்றனர். தனது மகன் நடனமாடுவதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேடிக்கை பார்த்தவாறும் கைகளையும் தட்டுகிறார். இந்த காணொளியை அருகில் இருந்த ஒருவர் படமாக்கி இணையத்தளத்தில்...
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமிழகத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அரசியல் ரீதியான பயணமாக கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அந்த வேலைகளை முடித்துக்கொண்டு தனிப்பட்ட பயணமாக தமிழ்நாட்டிற்கு சென்றபோதே இச்சம்பவம் நாடைபெற்றுள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி...
சம்பூர் அனல் மின் நிலைய விடயத்தில் இந்தியா மக்கள் நலன் கருதி சிந்தித்து செயற்படும் என நான் நம்புகின்றேன். இந்தியாவுடனும் இலங்கை அரசுடனும் பேச்சு நடத்தி இவ்விடயத்தில் நல்ல முடிவை நாம் காண்போம் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மூதூருக்கு நேற்று விஜயம் செய்த அவர் சம்பூர்...
நிதி, அறிவு, திறமை ஆகியவை உள்ளடங்கலாக புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதாரம் மற்றும் மனிதவளம் ஆகியவற்றின் வினைத்திறன் மிக்கதான ஒழுங்கமைப்பும் ஒருங்கமைப்புமே தமிழ் மக்களின் சுபீட்சதின் திறவுகோலாக அமைய முடியும் என்று வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் லண்டன் ஹரோவில் நேற்று பிரமாண்டமான முறையில்...
புதுவருட தினத்தையொட்டில், ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில், நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் என்று மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.
கிராம சேவையாளர்களை அவர்களது கடமையை மேற்கொள்ளவிடாது இடையூறு விளைவித்த இராணுவத்தினரைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட கிராம சேவையாளர்களால் நேற்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் கிராம சேவையாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கில், தென்னிலங்கை மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் வாடிகள் அமைத்து தொழில் நடவடிக்கையில்...
இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்துப் பாவனை தொடர்பான குற்றச்சாட்டிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று உத்தியோக பூர்வமாக இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்திய, சீன கூட்டுத் தயாரிப்பான குங்பூ யோகா திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதுவரை சீனாவில் நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. கதைப்படி, ஒரு புதயலைத்தேடி ஜாக்கிசான் இந்தியா வருகிறார். ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள ஒரு பழமையான அரண்மணையில் அந்த புதையல் இருக்கிறது. இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்...
படத்துக்குப் படம் தன்னுடைய படத்தின் பிசினஸை அதிகரித்துக்கொண்டே போகிறார் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தின் வசூல் 50 கோடியை தாண்டியதால் தற்போது அவர் நடித்து வரும் ரெமோ படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை 60 கோடிக்குக் குறைவாக கொடுக்க மாட்டேன் என்கிறாராம். இந்தப் படம் கண்டிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் செய்யும் என்று...
'வேதாளம்' படத்தின் டீசர் சாதனையை சர்வ சாதாரணமாக 'தெறி' படத்தின் டீசர் முறியடித்தது. அஜித் ரசிகர்கள்தான் இணையத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தவறான இமேஜை விஜய் ரசிகர்கள் உடைத்து எறிந்தனர். அது மட்டுமல்லாமல் 'தெறி' டீசர் இந்தியாவிலேயே அதிக லைக்குகளை வாங்கிய டீசராகவும் உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த டீசராகவும் விளங்கியது. இன்னமும்...
இசையமைப்பளாராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து சலீம், இந்தியா-பாகிஸ்தான், பிச்சைக்காரன் படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதிலும் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் சூப்பர்-டூப்பர் ஹிட்டானதோடு, வசூலையும் வாரிக்குவித்தது. இப்படம் இப்போது பல மொழிகளில் ரீ-மேக்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து ''நான்'' படத்தை...
வடமாகாண சபை அமைச்சர்கள் நால்வரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரி பெற்றுக்கொள்ளப்பட்ட கையெழுத்து அடங்கிய விண்ணப்பம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் அறுவர் அடங்கிய குழு இன்று மாலை 5.30க்கு முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இதன்போதே குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டுள்ளதாக அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். இந்தக்...
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி திருவையாறு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய விஜயகுமார் கேதீஸ்வன் என்ற நபரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட...
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் நேற்று மாலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் நோக்குடன் வாடிகளை அமைக்க வந்த முப்பதுக்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களுக்கும் கொக்கிளாய் கிராம வாசிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்றப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, நேற்று மாலை 5 மணியளவில் இராணுவத்தின் அனுசரணையுடன் தென்னிலங்கையை சேர்ந்த...
மத்திய அரசாங்கத்தின் மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வட மாகாணசபை முட்டுக்கட்டையாக செயற்படுகிறது என்று சிறைச்சாலை மறு சீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் யுத்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு 65,000 வீடுகளை அமைப்பதற்கு மீள் குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு...
நாரஹேன்பிட்டியில் கூரியர் நிறுவன தலைமையகம் ஒன்றில் மீட்கப்பட்ட புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பி தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. லண்டனுக்கு அனுப்பப்பட இருந்த குறித்த தொப்பி விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டு அம்மானினால் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் சில தகவல்கள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ள நிலையில் அதனை உறுதி...
நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில் முதல் கட்டமாக 750 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கண்காணிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இதுவரை விஞ்ஞான...
Loading posts...
All posts loaded
No more posts
