கிராமசேவகர்கள் தாக்கப்பட்ட விவகாரம்- கொழும்பிலிருந்து சென்றது இராணுவ விசாரணைக்குழு!

கொக்குத்தொடுவாய் பகுதியில் கிராம சேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து இராணுவ தரப்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று கொழும்பிலிருந்து சென்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் தெரிவித்தார். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் கிராம சேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் முல்லைத்தீவில் கிராம அலுவலர்கள் இணைத்து ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டிருந்தனர்....

தாயையும் குழந்தையையும் காணவில்லை

ஈச்சமோட்டை, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது பெண் குழந்தையையும் காணவில்லையென அவர்களது உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (11) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோகன்ராஜ் ஜனாகி (வயது 23) மற்றும் மோகன்ராஜ் சுருதிகா (வயது 3 ½ ) ஆகிய இருவருமே காணாமல்போயுள்ளனர். கடந்த 10ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள்...
Ad Widget

வலி. வடக்கில் 6.1 ஏக்கர் விடுவிப்பு

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6.1 ஏக்கர் காணிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (12) கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 26 வருடங்களாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஜே-226 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட 17 பேருக்குச் சொந்தமான காணிகளே இவ்வாறு கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் கனகராஜா ஸ்ரீமுருகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பகுதியில் உள்ள...

சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரம்: மேலும் எண்மர் கைது

சாவகச்சேரி பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணிவந்த மேலும் 8 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணிய ஐவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, மேலும் மூவர் கைது...

ஜனாதிபதியுடன் பேச முதலமைச்சர் சி.வி.க்கு அழைப்பு

வடக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் எதிர்வரும் 18ஆம் திகதி கலந்துரையாடுவதற்கு, தனக்கு அழைப்பு வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. சபை அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...

சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு ஒருபோதும் வேண்டாம்!

சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீட்டை வன்மையாகக் கண்டித்துள்ள வடக்கு மாகாண சபை, இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரேரணை ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரனினால் சமர்ப்பிக்கப்பட்டது. பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றிய ரவிகரன்,...

இராணுவ வாகனம் மோதி தாயும் மகளும் நசியுண்டு பலி!

திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓட்டோவில் பயணித்த தாயும் மகளும் பலியாகியுள்ளனர். அத்துடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் முன்னால் உள்ள பிரதான வீதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக வந்த இராணுவத்தின் டிபெண்டர் ரக வாகனம், ஓட்டோவை மோதித்தள்ளியதில் சாம்பல்தீவு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த நடராசா வாசுகி (வயது...

வடக்கின் தீர்வுத் திட்ட இறுதி வரைவு 22ஆம் திகதியே சபையில் சமர்ப்பிப்பு!

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைவு, முதலமைச்சருக்கு நேரமின்மையால் இறுதி செய்யப்பட்டு சபையில் நேற்றுச் சமர்ப்பிக்கப்படவில்லை. தீர்வுத் திட்ட இறுதி வரைவு எதிர்வரும் 22 ஆம் திகதியே வெளியிடப்படும் என்றும், 30ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்படும் எனவும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு...

இனிமேலும் காணி சுவீகரித்தால் விளைவுகள் மோசமாக ஏற்படும்!

"காணி சுவீகரிப்பு இனிமேலும் தொடருமாக இருந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். இதனை நாம் நல்லாட்சி அரசுக்கு இங்கிருந்து எச்சரிக்கின்றோம்." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று சபையில் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பதவிகளில் மாற்றங்கள்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் அரவிந்த டி சில்வா இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் ஆசேகராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் இதனைக் கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குப் பின்னர் இந்த நியமனம் அமுலாகும் என்று இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது. இதேவேளை முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரிய தேசிய கிரிக்கட்...

நுரைச்சோலை மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது பிரிவில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். மூன்றாவது பிரிவின் வெப்பத்தை சேமிக்கும் குழாயில் ஏற்பட்ட திடீர் கசிசே இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. எவ்வாறாயினும் இதனால் மின் விநியோகத்தில்...

நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷன் விருது

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் டாக்டர் சாந்தா ஆகியோருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். 2016-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு 112 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதற்கட்டமாக 56 பேருக்கு கடந்த மாதம் 28-ம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி...

ஈழ அகதி குடும்பம் மீது தாக்குதல்!!

ஈழ அகதி குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய நான்கு ஈழ அகதிகள் கைதுசெய்யப்பபட்டுள்னர். பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள கோட்டூர் அகதிகள் முகாமில் உள்ள அகதிகள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நான்கு சந்தேகநபர்களும் புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, இதுவொரு சிறிய குழு மோதல் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். என்.பிரதீபன், பி.பார்தீபன்,...

உலகில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்

உலகில் கடந்த ஒரு நூற்றாண்டில் புலிகளின் எண்ணிக்கை முதல் முறையாக அதிகரித்துள்ளதாக சூழலியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 3 ஆயிரத்து 890 புலிகள் தற்போது வாழ்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச வனவிலங்கு நிதியம் மற்றும் உலகளாவிய புலிகள் மன்றம் ஆகியன கூறியுள்ளன. ஆயிரத்து 900 ஆண்டு ஒரு இலட்சமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010 ஆம்...

மாலிங்கவை பின் தள்ளினார் பிராவோ

9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்தித்தது. அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் (2 ரன்) வெய்ன் பிராவோ பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார். அதே ஓவரில் கேப்டன் டேவிட் மில்லரும்...

புத்தாண்டை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை 14ஆம் திகதி இடம்பெறவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ்.நகர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வன்முறை மற்றும் குழப்பகரமான நிலமைகளை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் டி.டி.பி வீரசிங்க தெரிவித்துள்ளார். யாழ். நகரில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக...

பேரவையின் செயற்குழுவிலிருந்து விலகினார் முதலமைச்சர்!

தமிழ் மக்கள் பேரவையின் குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தின் நிறைவில் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையினரால் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பு இறுதி செய்யும் முகமாக நேற்று முன்தினம் யாழ். பொது நூலகத்தில் கூடியது இதில் கலந்து கொண்ட முதலமைச்சரே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்கள்...

பிற்பாக்கெட் அடித்த பெண் 15 நிமிடங்களில் கைது

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சந்தேகநபரான குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை, 15 நிமிடங்களில் நேற்று திங்கட்கிழமை (11) மாலை பொலிஸார் கைது செய்தனர். புதுவருட கொள்வனவை முடித்துவிட்டு நண்பிக்காக மேற்படி பெண் காத்திருந்த வேளை, பெண்ணின் பின்பக்கமாகச் சென்ற சந்தேகநபரான பெண்,...

வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு பூரணப்படுத்தப்படவில்லை

அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான வட மாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு இன்னமும் பூரணப்படுத்தப்படவில்லை. இன்னும் சில தினங்களில் பூரணப்படுத்தப்பட்டு, சபையில் முன்வைக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும்' என வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான வட மாகாண சபையின் கொள்கை...

துர்முகி வருடப் பிறப்பு : உங்கள் ராசிக்கு எப்படி?

அறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி வருடம் நாளை மாலை மலரவிருக்கின்றது. இதனை எதிர்கொள்ள இறுதிக்கட்ட பொருள் விற்பனையிலும் கொள்வனவிலும் வர்த்தகர்களும் பொது மக்களும் ஈடுபட்டுள்ளனர். மலிவு விற்பனை ஒருபுறம் ஏட்டிக்குப் போட்டியாக நடக்க மறுபுறம் வீதியோர வியாபாரம் மட்டுமன்றி வீதிக்கு வீதி மக்களின் காலடியிலும் வியாபாரம் நடைபெற்று வருகின்றது. புதுவருட பிறப்பு பற்றி...
Loading posts...

All posts loaded

No more posts