Ad Widget

மாலிங்கவை பின் தள்ளினார் பிராவோ

9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்தித்தது.

bravo-ipl-m

அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் (2 ரன்) வெய்ன் பிராவோ பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார். அதே ஓவரில் கேப்டன் டேவிட் மில்லரும் (15 ரன்கள்) வெய்ன் பிராவோ பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

குஜராத் லயன்ஸ் அணி வீரர் வெய்ன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) நேற்று 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் பஞ்சாப் கேப்டன் டேவிட் மில்லர் விக்கெட்டை சாய்த்த போது 300 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.

எல்லா வகையான 20 ஓவர் போட்டிகளிலும் சேர்த்து இலங்கை வீரர் மலிங்கா 299 விக்கெட்டுகள் (221 ஆட்டங்களில்) வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதனை தகர்த்த வெய்ன் பிராவோ 20 ஓவர் போட்டியில் மொத்தம் 302 விக்கெட்டுகளை (292 ஆட்டங்களில்) வீழ்த்தி இருக்கிறார்.

Related Posts