மும்பையின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து லசித் மாலிங்க விலகல்!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன அண்மையில் விலகினார்.

அவருக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பொல்லார்ட் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்து 3 பேர் பரஸ்பர சம்மதத்துடன் விலகி உள்ளனர்.

வேகப்பந்து வீச்சு பற்சியாளராக இருந்த இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, இந்திய முன்னாள் வீரர் பராஸ் மாம்ப்ரே, களத்தடுப்பு பயிற்சியாளராக பணியாற்றிய இங்கிலாந்து முதல் தர கிரிக்கெட் வீரர் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோர் தங்கள் பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர்.

Related Posts