Ad Widget

அமெரிக்க உதைபந்தாட்ட அணிக்கு யாழிலிருந்து நால்வர் தெரிவு!

இலங்கைக்கான அமெரிக்க தேசிய உதைபந்தாட்ட அணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.

foodboll

இந்த அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் முறையே யாழ் வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி.தினோஜன், வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் டி.நிமல்ராஜ், யாழ். கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எச்.எம்.டி.டி. நாரண்பணாவ, யாழ் புள்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பிரசாத்குமார்ஆகியோரே தெரிவாகியுள்ளனர்.

கடந்த வருடமே இந்த விளையாட்டு யாழில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் பயிற்றுவிப்பாளராகவும் திரு. குலசிங்கம் குலரட்ணம் பணியாற்றி வருகின்றார். இவர் அண்மையில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நடைபெற்ற நீளம் பாய்தல் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கத்தினை வென்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பெருமைசேர்த்தவராவார்.

Related Posts