யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான ஆய்வு மற்றும் பயிற்சித் தொகுதி!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மற்றும் பயிற்சித் தொகுதியை நிர்மாணிப்பதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்துக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தினூடாக (ஜய்கா) ஜப்பான் யென் 1,667,000,000 (அண்ணளவாக 2,100 மில்லியன் ரூபா) மானிய உதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் பிரதான நோக்கம் பயனுள்ள விதத்தில் வட மாகாணங்களிலுள்ள உலர் வலய விவசாயங்களில் ஆய்வுகள், கல்வி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் என்பவற்றை மேம்படுத்துவதாகும்.

மேலும், விலங்கு விஞ்ஞானம், பயிர் விஞ்ஞானம், விவசாய இரசாயனவியல், விவசாய உயிரியல், விவசாய எந்திரவியல் மற்றும் விவசாயப் பொருளியல் போன்ற பாரிய விவசாயத் துறைகளில் எதிர்காலத்தில் ஏற்படும் கேள்விகளை எதிர்கொள்ளும் பொருட்டு பல விசேட துறைகளை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே விடயம் தொடர்பில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்துடன் (ஜய்கா) மானிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts