இலங்கையின் தமிழ் பேஸ்புக் பயனர்கள் ஒன்றுகூடல்

இலங்கையின் தமிழ் பேஸ்புக் பயனர்கள் முதன்முறையாக ஒழுங்கமைக்கும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை வருமாறு: Facebook தமிழா-2016 ஒன்றுகூடல் நிகழ்வு ஊடக அறிக்கை திகதி: 24/04/2016 இடம்: AVS மண்டபம், #8, லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி நேரம்- முப 10.00 – பிப 2.00 வரை இலங்கை சமூக...

யாழில் வடக்கு தெற்கு மாணவர்களின் ஒன்றுகூடல்

வடமாகாண சபை, வடமாகாண ஆளுநர் செயலகம், மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் என்பன இணைந்து தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையில் சமத்துவ ஒற்றுமையினைக் கட்டி எழுப்பும் வகையிலும் ,நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையிலும் “பனை ஓலையும்,தென்னை ஒலையும்” எனும் தொனிப்பொருளிலான தமிழ்- சிங்களப் புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்து நடாத்துகின்றன. தென் மாகாணத்திலிருந்து 100 மாணவர்கள்...
Ad Widget

விக்னேஸ்வரன், சம்பந்தனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

நாட்டில் பிரிவினையினை தூண்டுவதாகவும் புலிகளை நியாயப்படுத்தி ஆயுதப்போராட்டத்தை மீண்டும் தோற்றுவிக்கும் வகையிலும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோர் செயற்படுவதாகக் கூறியும் உடனடியாக இவர்கள் இருவரையும் கைதுசெய்து விசாரிக்குமாறு வலியுறுத்தியும் பொதுபல சேனா, சிங்கள ராவய , ராவணா பலய ஆகிய அமைப்புகள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன. பொலிஸார் விசாரிக்க...

தற்கொலை அங்கி விவகாரம் தொடர்பில் 23 பேர் கைது

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் இதுவரையில் 23 பேருக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் 8 பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வதாக கூறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட பலர் முன்னாள் போராளிகள் என்றும், அவர்களில் சிலர் அரசாங்கத்தின் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவில்லை என்றும்...

கடன்சுமையால் ஒருவர் தற்கொலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் பகுதியில் குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் பகுதியில் வசித்துவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். வளமைபோன்று நேற்றயதினம் வீட்டுக்கு வந்த நபர் தன்னுடைய ஆண்மகனுடன் முற்றத்தில் படுத்துறங்கியிருக்கிறார். மனைவியும் பெண்பிள்ளையும் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனைவியை அழைத்து...

ரொறன்ரோ பிராந்தியத்தில் தமிழ்பெண்ணைக் காணவில்லை!

ரொறன்ரோப் பிரதேசத்தினை அண்மித்த யோர்க் பிராந்தியத்தில் வசித்து வந்த 44 வயதுடைண தமிழ்ப் பெண்ணைக் காணவில்லை என்று அந்தப் பிரதேசப் பொலிசார் அறிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி இவர் தனது வீட்டைவிட்டுச் சென்றுள்ளார். இவர் சென்ற வாகணம் அண்மையிலுள்ள வணிக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் அவர் தான் 15 நாட்களிற்குள் திரும்பி வருவேன்...

சம்பந்தனை அனுமதித்த இராணுவச் சிப்பாயின் கன்னத்தில் அறைந்த கேணல்!

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பரவிபாஞ்சான் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வதற்கு வழியைத் திறந்துவிட்ட இராணுவ சிப்பாய்க்கு இராணுவ கேணல் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சிக்கு கடந்த 16 ஆம் திகதி பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம், மீள்குடியேற்றத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படாத பரவிபாஞ்சான் கிராம மக்கள் சிலர், தங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு...

பெண் போராளி மரணத்தை ஏழு ஆண்டுகளுக்குப் பின் உறுதிப்படுத்திய உறவினர்கள்!

இறுதிப் போரின் பின்னரும் உயிரோடு இருக்கின்றார் என்று உறவினர்களால் நம்பப்பட்ட கணினிப் பிரிவுப் பெண் போராளி ஒருவர், ஏழு வருடங்கள் கடந்த நிலையில் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கணனிப்பிரிவுப் போராளியான மேகலாவை முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை கண்ட உறவினர்கள், அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியாத போதும், உயிரோடு இருப்பார் என்று நம்பியிருந்தனர்....

முன்னாள் புலிப் போராளி கைது!

கிளிநொச்சி, ஆனந்தபுரத்தை சேர்ந்த தாமோதரம்பிள்ளை ஜெயகாந்த் என்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், விடுதலை புலிகள் இயக்கத்தில் ஊடறுப்பு பிரிவில் இருந்து புனர்வாழ்வு பெறவில்லை என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் வவுனியா பயங்கரவாத தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

இரணைமடு, திருவிலாறில் குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி இரணைமடு, திருவிலாறு பிரதேசத்தில் 5 கிரனைட் குண்டுகள், பாதுகாப்பு படைகளால் நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹஷான் திலகரத்னவின் மனைவிக்கு மகளிர் கிரிக்கெட் அணியில் பதவி

இலங்கை கிரிக்கெட்டின் மகளிர் அணியின் பொறுப்பதிகாரியாக, டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலகரத்னவின் மனைவி அப்சாரி திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர், எதிர்வரும் மே மாதம் முதல் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டைப் பிரிக்காத நிலைப்பாடே தீர்வுத் திட்ட முன்மொழிவுகள்!

"நாட்டைப் பிரிக்காது நாம் தனித்து வாழும் அதே நேரம் சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். அதனை வலியுறுத்தியே அரசியல் தீர்வுத் திட்டத்துக்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரைவை நாம் தயாரித்திருக்கின்றோம்." இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். "நாம் பிரிந்து செல்ல விரும்பாது ஒருங்கிணைந்து வாழ முன்வந்துள்ளமையால் சிங்கள மக்கள் எங்களுக்குச் சகல ஒத்துழைப்பையும்...

சமஷ்டி அதிகாரப் பகிர்வுதான் அர்த்தமுள்ள தீர்வாக அமையும்!

"ஒற்றையாட்சி முறைமை, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை மற்றும் நாடாளுமன்றத்துக்கு உச்ச அதிகாரம் போன்றவை நீக்கப்பட்டு முழுமையான சமஷ்டி முறைமையின் கீழ் வழங்கப்படும் அதிகாரப் பகிர்வுதான் அர்த்தமுள்ள தீர்வாக அமையும். தற்போதைய அரசமைப்பைக் கொண்டு இதைச் செய்ய முடியாது. ஆகவே, புதிய அரசமைப்புத் தேவைப்படுகின்றது." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி...

அதிகாரப் பகிர்வை அர்த்தமுடையதாக்க தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியில் முழு ஆதரவு!

"புதிய அரசமைப்பையும் அதனூடாக வரப்போகும் அதிகாரப் பகிர்வையும் அர்த்தமுடையதாக - அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்குவதற்கு அரசமைப்பு உருவாக்கத்தின் முயற்சிக்கு தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்." இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புதிய அரசமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு...

நிரந்தர நியமனம் கோரி சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதர்களின் கீழ் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி அமைதியான ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். வடமாகாண சபையின் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை காலைமுதல் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட ஊழியர்கள், நண்பகல் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்தினை சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த...

விக்னேஸ்வரனை கைது செய்யக் கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல

அரசியலமைப்பு தீர்வுத் திட்டம் குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தாக்கி பேசுவதும், கைதுசெய்ய வலியுறுத்துவதும் தேவையற்ற விடயம் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி. கே. சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 50வது அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடமாகாண சபையின் அரசியலமைப்பின் தீர்வு திட்டத்தில் மாற்றத்தினை மேற்கொள்ளவதற்கான ஆலோசனைகளைப் பெறும் போதே இவ்வாறு...

பிரதான ஆறு விடயங்களில் அவதானம்; புதிய பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் திணைக்களம், இனிமேல் இலங்கை பொலிஸ் என அழைக்கப்படும் என்று புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று பூஜித்த ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து இடம்பெற்ற முதலாவது ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறினார். கடந்த காலங்களில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் நீண்ட இடைவௌி இருந்ததாகவும் இதன்...

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் வடமாகாண சபையின் யோசனை நிறைவேற்றம்

வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட யோசனை நேற்று வெள்ளிக்கிழமை 19 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்ற நிலையில், வடக்கு மாகாண சபையும், புதிய அரசியலமைப்பு கருத்துக்களை முன்வைப்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் மூன்று...

தெறி’ – மில்லியன் டாலர் ‘பேபி’

'தெறி' படத்திற்கு விமர்சனங்கள் அப்படி, இப்படி என இருந்தாலும் வசூலைப் பொறுத்தவரையில் விஜய்யின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான 'துப்பாக்கி, கத்தி' ஆகிய படங்களை விட வசூல் நன்றாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இப்படத்திற்கு ஒரே மாதிரியான வரவேற்பு இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள். அந்த வரவேற்பே இந்தப்...

2.ஓ படத்தில் ரஜினியுடன் மோதும் வாரிசு வில்லன்

ரூ 350 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் படம் 2.ஓ. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி என விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதையடுத்து மொராக்கோ நாட்டுக்கு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும். இந்த படத்தில் ரோபோ வில்லனாக இந்தி நடிகர் அக்சய்குமார் நடிக்கிறார். அவரும், ரஜினியும்...
Loading posts...

All posts loaded

No more posts