Ad Widget

கடன்சுமையால் ஒருவர் தற்கொலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் பகுதியில் குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் பகுதியில் வசித்துவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

வளமைபோன்று நேற்றயதினம் வீட்டுக்கு வந்த நபர் தன்னுடைய ஆண்மகனுடன் முற்றத்தில் படுத்துறங்கியிருக்கிறார். மனைவியும் பெண்பிள்ளையும் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனைவியை அழைத்து வெளியிலே பனி மகனை உள்ளே தூங்கவைக்குமாறு கூறிவிட்டு வெளியில் படுத்திருந்திருக்கிறார். மனைவி மகனை வீட்டினுள் உறங்க வைத்துவிட்டு சிறிது நேரத்தில் கணவனை அழைக்கவந்தபோது அவரை காணவில்லை அதன்பின்னர் தேடிச்சென்றபோது அவர்களுடைய காணியிலுள்ள மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தநிலையில் இருந்திருக்கிறார்.

இதுதொடர்பாக ஊர் மக்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில் எமது பகுதியில் குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர் எனினும் ஒருவர் தெய்வாதினமாக தப்பியுள்ளார் இவருடன் இருவர் இறந்துள்ளனர் என தெரிவித்தனர். இருப்பினும் தமது பகுதியில் கசிப்பு உற்பத்தி மிகவும் அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் பலர் பாதிக்கப் படுவதாகவும் தெரிவித்தனர். அவர்கள் இன்று இறந்தவர் கூட சொப்பினில் கசிப்பு கொண்டுவந்து அருந்திவிட்டு தான் தூக்கில் தொங்கியதாகவும் அந்தமரத்தில் அந்த சொப்பின் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு தமது பகுதி மக்கள் கடந்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறி பலத்த கஸ்ரங்களின் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் எல்லா இடங்களிலும் கடன்களை எடுத்து கிழமைக்கு கிழமை கடனை கட்ட முடியாது பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் இவ்வாறான சூழலிலேயே இங்கு பலர் வாழ்ந்து வருவதாகவும் இறந்தவருக்கும் இவ்வாறான பல துன்பங்களும் நீதிமன்றத்துடன் சம்மந்தப்பட்ட விசாரணைகளும் இருந்ததாகவும் விரக்தியினாலேயே இவர் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்கலாம் எனவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.

எது எவ்வாறிருப்பினும் இது முல்லைத்தீவு மாவட்ட அரச அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும்.

Related Posts