தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பஸ் மீது தாக்குதல்

அரியாலை கனகலிங்கம் வீதியில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கியிருந்த தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் வருகைதந்த பஸ் மீது வியாழக்கிழமை (21) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது இனந்தெரியாதோர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற்பகலில் கடும் மழை பெய்யும்

நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பிறகு கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் கடும் மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் தெற்கு கரையோரங்களில் இன்று காலை முதல், சிறிமதளவு மழை பெய்யக்கூடும்.
Ad Widget

கடற்படை வசமுள்ள முள்ளிக்குளம் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்

கடற்படையினரின் வசமிருக்கின்ற முள்ளிக்குளம் காணிகள், வெகுவிரைவில் விடுவிக்கப்படும்' என, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்தக் காணி விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இடம்பெயர்ந்த முள்ளிக்குளம் கிராம மக்கள், தமது சொந்தக் காணிகளில் மீண்டும் வாழ வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கின்றார்கள். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், அவர்களின் மீள்குடியேற்றத்தில்...

சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு!!

உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சிற்றுண்டிகளின்...

சீருடைக்கான வவுச்சர் முறையை ரத்து செய்யுமாறு கோரிக்கை

பாடசாலை மாணவர்களின் சீருடைத் துணியைக் கொள்வனவு செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ள வவுச்சர் வழங்கும் முறையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2017ஆம் ஆண்டில், இந்த வவுச்சர் முறையை ரத்து செய்து, இதுவரை காலமும் இருந்துவந்தது போல், பாடசாலை ரீதியில் சீருடைக்கானத் துணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம்...

ஈக்வேடாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்றைய நிலநடுக்கம் 6.0 ரிக்டராக பதிவாகியுள்ளது. போர்ட்டோவிஜோ நகரில் இருந்து நூறு கிலோமீட்டர் வடமேற்கே பூமியின்...

பாப் இசை உலகின் பிரபல பாடகர் பிரின்ஸ் மர்ம மரணம்

லிப்ட்டின் உள்ளே மர்மமான முறையில் இறந்துகிடந்த பாப் இசை உலகின் பிரபல பாடகர் பிரின்ஸ் ரோஜர்ஸ் நெல்சனின் மரணத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார். ரிதம் அன்ட் புளூஸ், ஃபங்க், ராக் அண்ட் ரோல் போன்ற புதியவகை மேற்கத்திய இசையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் பிரின்ஸ் ரோஜர்ஸ் நெல்சன்(57) அமெரிக்க...

வடக்கு மாகாணசபையினால் திரட்டப்பட்ட தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணம் அனுப்பிவைப்பு

வடக்கு மாகாணசபையினால் திரட்டப்பட்ட தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் நிதியத்தினில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ் நாட்டில் கொட்டித் தீர்த்த கன மழையின் காரணமாக பாதித்த மக்களிற்கு உதவும் வகையில் வடக்கு மாகாணசபையினால் திரட்டப்பட்ட தமிழ்நாடு...

ஓட்ட எண்ணிக்கையைவிட படுக்கையை பகிர்ந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய டினோ பெஸ்ட் திடுக்கிடும் ஒரு தகவலை தனது சுய சரிதை புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். உலகமெங்கிலும், இதுவரை 500 முதல் 650 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளதாகவும், ஆண் விபச்சாரியை போல, தான், செயல்பட்டதாகவும் அந்த தகவலில் டினோ பெஸ்ட் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல்...

கிளிநொச்சியில் 4 ஆயிரத்து 284 சிறுவா்கள் பெற்றோரை இழந்துள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 284 சிறுவா்கள் தந்தை அல்லது தாய், அல்லது இருவரையும் இழந்தவா்களாக காணப்படுவதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 ஆம் ஆண்டின் கணிப்பின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.3 ஆயிரத்து 44 சிறுவா்கள் தந்தையையும், 764 சிறுவா்கள் தாயையும், 476 சிறுவா்கள் தாய் தந்தை இருவரையும் இழந்துள்ளனா். கரைச்சி...

பூசா முகாமில் சகோதரனுக்கு சித்திரவதை: சகோதரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிளிநொச்சியில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞரின் பெற்றோர் கொழும்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளனர். கிளிநொச்சி – திருவையாறை சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு கொழும்பு –...

கோட்டாவைக் கைது செய்யும் கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு தமிழ் அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை அமெரிக்கா மறுத்துள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஒரு வாரகாலமாக அமெரிக்காவில் தங்கியுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் யுத்தக்குற்றவாளியான அவரை அமெரிக்காவில் வைத்து கைது செய்ய வேண்டும்...

புலிகளின் பாடலைக் கேட்டதாக குருநகர் இளைஞர் கைது!

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் பாடல்களை கேட்டு ரசித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று சிவில் உடையில் சென்ற பொலிஸாரினாலேயே 25 வதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்று மாலை யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதியின்...

ஜெனிவா கூட்டத்தொடருக்கு அமைச்சர்கள், அதிகாரிகளை தயார்படுத்துகிறது அரசாங்கம்!

ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான குழுவை பங்கேற்கவைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுவதால் அரசாங்கம் உயர்மட்டக்குழுவை...

வடக்கு கிழக்கில் பாரிய முதலீடு ஈழத் தமிழர் முயற்சி!

சமூக, பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள டென்மார்க்கைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஸ்கன்டினேவியன் (Scandinavian) பொருளாதார முதலீட்டுக் குழுமம் திட்டமிட்டுள்ளதாக அதன் சர்வதேச மற்றும் இலங்கைத் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் தருமன் தர்மகுல சிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள இவர் கடந்த வாரம் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியிலுள்ள...

திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!

கன்னியா வெந்நீரூற்று திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக வரலாறுச் சான்றுகள், ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகளும் உள்ளன. கன்னியா வெந்நீரூற்றுககு அருகில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டன. தற்போது...

விஜய் படத்தில் மம்முட்டி நடிக்க மறுத்தது இதனால் தான்!

'தனி ஒருவன்' படத்தின் ஸ்பெஷலே, ஒருகாலத்தில் சார்மிங் ஹீரோவாக வலம் வந்த அரவிந்த்சாமி அந்தப்படத்தின் வில்லனாக நடித்தது தான். அதேபோலத்தான் தற்போது விஜய்க்காக உருவாக்கியிருக்கும் கதையில் மாஸ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முதலில் நினைத்தார்களாம். அதற்காக படத்தின் இயக்குனர் பரதன், மம்முட்டியை இந்தப்படத்திற்குள் இழுக்க முயற்சி செய்ததாராம். ஏற்கனவே தமிழ்சினிமாவில்...

ஆளுமா டோளுமா போன்று சிவகார்த்திகேயனுக்கு பாடல் ரெடி பண்ணிய அனிருத்!

3 படத்தில் அனிருத் கம்போஸ் செய்த ஒய்திஸ் கொலவெறி பாடல் சிவகார்த்திகேயனை மிகவும் கவர்ந்த பாடல் என்பதால், அதன்பிறகு அவர் நடித்த பல படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். அந்த வகையில், மான்கராத்தேயில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடிய ராயபுரம் பீட்டரு உள்ளிட்ட சில பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. அதனால் இப்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமோ...

சிம்புவுக்கு ராதிகா அட்வைஸ்

நடிகர் சங்கத்திலிருந்து விலகப் போவதாக நேற்று தன்னுடைய நெருக்கமான சில பத்திரிகையாளர்களுக்கு மட்டும் செய்தியை வழங்கினார் சிம்பு. நேற்று முழுவதும் தன்னைப் பற்றிய மீடியாக்கள் பரபரப்பாகப் பேசுவார்கள் என்று சிம்புவும் எதிர்பார்த்தார். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. சிம்புவின் அந்தச் செய்தி வெளிவந்ததுமே 'இது நம்ம ஆளு' படத்திற்கு 'பப்ளிகுட்டி ஸ்டன்ட்' அடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றுதான்...

கழுத்தில் கத்திவைத்து படுகாடு தமிழ் விவசாயிகளுக்கு சிங்களவர்கள் அச்சுறுத்தல்

திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட படுகாடு விவசாயிகளை இலக்கத்தகடு இல்லாத உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற சிங்களவர்கள் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தியதாக முறையிடப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளின் பின்னர் சிங்கள விவசாயிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது விவசாய நிலங்களிற்கு கடந்த திங்கட்கிழமை சென்ற நிலையில் இன்று வியாழக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts