பறவை காவடி எடுத்த இளைஞன் பலி!!!

முல்லைத்தீவு அம்பகாமம் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழாவிவை முன்னிட்டு ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்திலிருந்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்ற பறவைக் காவடி எடுத்துவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உழவு இயந்திரம் குடைசாய்ந்ததினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட இடதுகரை முத்து ஜயன் கட்டையைச் சேர்ந்தவரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து...

அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமறியல்

இணுவில் முதலிகோயில் பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரையும், எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ரி.கருணாகரன், நேற்று புதன்கிழமை (20) உத்தரவிட்டார். குழு மோதல் ஒன்றுக்கு மேற்படி மாணவர்கள் இணுவில் பகுதிக்கு வந்திருப்பதாக...
Ad Widget

பல்கலைக்கழகங்களுக்கு புதிய சட்டங்கள்

பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளுக்காக, எதிர்காலத்தில் புதிய சட்டங்களைக் கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை )21) தெரிவித்தார். கொழும்பு, கலதாரி ஹோட்டலில் இன்று நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் இடம்பெறும் பகிடிவதை, பாலியல் மற்றும் பாலினச் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறும் துன்புறுத்தல்களைத் தடுப்படு...

இபோச சாரதிகள் போதையில் வாகனம் செலுத்தினரா?

புது வருடத்தை முன்னிட்டு விஷேட சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளின் சாரதிகள் மது போதையில் இருந்ததாக, பொலிஸார் குறிப்பிட்டமையானது முரன்பாடான விடயம் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு தகவல் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் பொலிஸாரிடம் இது குறித்த அறிக்கை...

யாழில் மே மாதம் 3000 வீட்டுத் திட்டம் ஆரம்பம்

யாழ். மாவட்டத்திற்கு 39 ஆயிரம் வீட்டுத் தேவைகள் இருப்பதாகவும், முதற்கட்டமாக மூவாயிரம் வீட்டுத்திட்ட வேலைகள் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, இதன்படி பயனாளிகளுக்கான விண்ணப்ப படிவங்கள்...

வடக்கு விவசாய அமைச்சால் வவுனியாவில் 641பேருக்கு வாழ்வாதார உதவிகள்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மூலம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 641பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (20.04.2016) நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வடக்கு விவசாய அமைச்சால் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின்...

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு திடீர் விலகல்

நடிகர் சங்கத்தில் இருந்து விலகப்போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் நடிகர்களை ஜோக்கர்கள் ஆக்கியதுதான் மிச்சம் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவது குறித்து நடிகர் சிம்பு கூறியதாவது: பல்வேறு காரணங்களுக்காக நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். நடிகர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் உதவத்தான் நடிகர் சங்கம்...

கொழுத்தும் வெயிலில் வடக்கில் மக்கள் அவதி

யாழ் குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கடும் வெப்பத்தினால் ஏற்படும் பல்வெறு நோய்களுக்கும் மக்கள் ஆளாகிவருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் குடாநாட்டில் கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் வெயிலின் கொடூரம் அகோரமாகவுள்ளது. இதனால் அத்தியவசியப் பணிகளைத் தவிர்த்து வெளியில் செல்வதை...

வித்தியா கொலை: எதுவும் தெரியாதென கைவிரித்த 12 ஆவது சந்தேகநபர்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய 11வது மற்றும் 12வது சந்தேக நபர்கள் நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, 12வது சந்தேக நபரான ரவீந்திரன் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கினார். இதன்போது, வித்தியா கொலை சம்பந்தமாக தனக்கு வேறு எதுவும் தெரியாது என்றும், எல்லோருக்கும் தெரிந்த விடயமே தனக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். புங்குடுதீவு...

வவுனியாவில் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட தாய்!

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் ஒருவர் 95 வயதான தனது பெற்ற தாயை 5 வருடங்களாக கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. அதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், தாயை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதேவேளை, குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, தாயை கொடுமைப்படுத்தவில்லை...

12 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தமிழ் அரசியல் கைதிகள் 12 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 12 பேர் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின்...

வடக்கிற்கு பயணம்செய்யும் வெளிநாட்டவர்கள் இராணுவ விசாவைப் பெறவேண்டும்!

சிறீலங்காவில் வடபகுதிக்குப் பயணிக்கும் வெளிநாட்டவர்கள் இராணுவத்தினரிடம் பதிவை மேற்கொள்ளவேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் பிரசுரமாகியுள்ளது. மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஐரோப்பாவிலிருந்து வருகைதந்த ஒரு ஈழத்தமிழர் மனித உரிமை ஆணையகத்தில் இது தொடர்பில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வடபகுதியில் கடத்தல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் இச்...

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் அடாவடி!

கிளிநொச்சி நகரை அண்டிய சில பிரதேசங்களிலுள்ள வியாபார நிலையங்களின் விபரங்களைத் திரட்டிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும் வியாபார நிலையங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு வியாபார நிலையமாகச் சென்ற இரண்டு இராணுவத்தினர் கடையின் பெயர், கடையின் உரிமையாளர் பெயர், கடையில் எத்தனைபேர் வேலைசெய்கிறார்கள், கடையில் என்ன வியாபாரம் நடக்கின்றது, எந்தக் கிராமசேவையாளர் பிரிவு,...

குடும்பத்தகராறு: மனைவி தீக்குளித்து மரணம்!! கணவரின் நிலை கவலைக்கிடம்!!!

மனைவி தீக்குளித்த போது, அத்தீயை அணைப்பதற்கு முயற்சி செய்த கணவனும் தீயில் எரிந்த பின்னர், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மனைவி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக யாழப்பாணம் போதான வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த யோசப் அன்ரனி மரியம்மா (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மதுபோதையில் கடந்த...

மீண்டும் சேவையில் இணைந்த பாதை

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையில் கடல்வழி சேவையில் ஈடுபட்டு பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பாதை புதன்கிழமை (20) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியது. இந்தப் பாதைச் சேவையானது, நாளொன்றுக்கு 6 தடவைகள் என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால், இலவசமாக நடத்தப்பட்டது. இதன் மூலம் பயணிகள், மோடடார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியவற்றை கொண்டுச் செல்லக்கூடியதாக...

பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படாது

'பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்றால் அதற்கு இணையான அல்லது நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான புதிய பலமான சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படாது' என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புச்சட்டம் அகற்றிக்கொள்ளப்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே...

27,603 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி!

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 27 ஆயிரத்து 603 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 25 ஆயிரத்து 200 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டடனர். இம்முறை 2 ஆயிரத்து 403 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது,

வித்தியா கொலை வழக்கு: ஜின்ரெக் நிறுவனப் பணிப்பாளரை மன்றில் முன்னிலையாகப் பணிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் டி.என்.ஏ அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்காமை குறித்து மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு 'ஜின்ரெக்' நிறுவன அதிகாரிக்கு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவில் மாணவி வித்தயா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் நெருங்குகிறபோதும் டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை....

தனியார் வைத்தியசாலை செயற்பாடுகளில் கட்டுப்பாடு

தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்களை பார்வையிடுவதற்கான கட்டணம் மற்றும் வைத்தியர்கள் நோயாளிகளுடன் செலவிட வேண்டிய நேரம் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரைவில் சுற்று நிருபங்கள் அனுப்பப்படவிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். வற் வரி மறுசீரமைப்பில் தனியார் வைத்தியசாலைகளின் சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. எனினும், மருந்துகளுக்கான விலை அதிகரிக்கப்படாது. வற் வரி...

‘இதுவே என் கடைசி உரையாக இருக்கலாம்’- ஃபிடல் காஸ்ட்ரோ உணர்ச்சிகர பேச்சு

இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்" என ஃபிடெல் காஸ்ட்ரோ தனது உரையில் தெரிவித்துள்ளார். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு அதிகாரபூர்வமாக...
Loading posts...

All posts loaded

No more posts