Ad Widget

வடக்கு விவசாய அமைச்சால் வவுனியாவில் 641பேருக்கு வாழ்வாதார உதவிகள்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மூலம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 641பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (20.04.2016) நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு விவசாய அமைச்சால் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் போசாக்கை மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாகாவே வவுனியா மாவட்டத்தில் 270பேருக்கு தலா 20 ஒருமாத வயதுடைய கோழிக்குஞ்சுகளும், 300பேருக்கு தலா 30 ஒருநாள் கோழிக்குஞ்சுகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 15பேருக்கு தலா இரண்டு நல்லின ஆடுகளும், 40பேருக்கு இன விருத்திக்கான நல்லின ஆட்டுக்கடாக்களும், நல்லினக் காளைகளும், 16பேருக்கு புற்தரைகளின் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கென முட்கம்பிச் சுருள்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்பட்ட உதவிகளின் மொத்தப் பெறுமதி 3.6 மில்லியன் ரூபாய்கள் எனவும், இந்நிதி வடமாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து செலவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சி.வசீகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்கள் இ.இந்திரராசா, ம.தியாகராசா, அ.ஜெயதிலக, விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

14

15

16

Related Posts