Ad Widget

யாழில் மே மாதம் 3000 வீட்டுத் திட்டம் ஆரம்பம்

யாழ். மாவட்டத்திற்கு 39 ஆயிரம் வீட்டுத் தேவைகள் இருப்பதாகவும், முதற்கட்டமாக மூவாயிரம் வீட்டுத்திட்ட வேலைகள் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

இதன்படி பயனாளிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, அந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குறித்த வீடுகள் வழங்கப்படும், அத்துடன், யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்திற்கு அமைவாக பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

சுமார் 8 இலட்சம் பெறுமதியான புதிய கல் வீடுகளை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மூவாயிரம் வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதேவேளை, பயனாளிகள் தெரிவில் குறைகள் இருப்பின் பிரதேச செயலாளர்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், எதிர்வரும் மே மாதத்திற்குள் மூவாயிரம் வீடுகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வருட இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டுமென அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related Posts