Ad Widget

ஓட்ட எண்ணிக்கையைவிட படுக்கையை பகிர்ந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய டினோ பெஸ்ட் திடுக்கிடும் ஒரு தகவலை தனது சுய சரிதை புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

Tino-Best-west-

உலகமெங்கிலும், இதுவரை 500 முதல் 650 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளதாகவும், ஆண் விபச்சாரியை போல, தான், செயல்பட்டதாகவும் அந்த தகவலில் டினோ பெஸ்ட் கூறியுள்ளார்.

தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல் கிப்சை போல எப்போதும் மொட்டை தலையுடன், காணப்படும் குழந்தை போன்ற முகத்துக்கு சொந்தக்காரரான டினோ பெஸ்ட் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூர முகம் இருந்தது சுய சரிதை புத்தகத்தால் அம்பலமாகியுள்ளது.

2003 முதல் 2013ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஆடியவர் டினோ பெஸ்ட். மொட்டை தலை, ஆக்ரோஷ பந்து வீச்சு ஆகியவை இவரை ரசிகர்கள் எளிதில் நினைவில் வைத்திருக்கும் காரணங்கள்.

மேற்கிந்திய தீவுகளுக்காக, 25 டெஸ்ட் போட்டிகள், 26 ஒருநாள், 6 இருபது-20 போட்டிகளில் டினோ பெஸ்ட் ஆடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 401 ஓட்டங்களையும், ஒரு நாள் போட்டியில் 76 ஓட்டங்களையும், இருபது -20 போட்டியில் 17 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

இவரது சுய சரிதைப்படி பார்த்தால், இவர் 10 வருடங்களாக கிரிக்கெட்டில் எடுத்த ஓட்ட எண்ணிக்கையைவிட இவர் படுக்கையை பகிர்ந்த பெண்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

இதுபற்றி டினோ பெஸ்ட் புத்தகத்தில் கூறியிருப்பது: எனது முதல் காதலி மெலிஸ்சா. அவரோடு இணைந்து குடும்பம் நடத்தியதில் தமனி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன்பிறகுதான் எனது வாழ்க்கை பிளேபோயாக மாறிவிட்டது.

கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம், அங்குள்ள பெண்களிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு படுக்கைக்கு அழைப்பேன். தனியாக பெண்கள் இருந்தால் போதும். நானே அவர்களிடம் சென்று பழகுவேன்.

“ஹலோ, என் பெயர் டினோ, உங்கள் பெயர் என்ன..?” என்ற கேள்வியோடு பெண்களை அணுகுவேன். டேட்டிங் செல்வேன். நான் விரும்பிய எந்த பெண்ணும், படுக்கையை பகிராமல் இருந்தது கிடையாது. உலகிலேயே, மொட்டை தலையர்களில் நான்தான் அழகு என நினைத்துக்கொள்வேன். இவ்வாறு டினோ பெஸ்ட் கூறியுள்ளார்.

ஆண்கள், பெண்கள், இளையோர் உலக கிண்ணங்களை மேற்கிந்திய தீவுகள் அணி வென்று அசத்திய இந்த ஆண்டில்தான், இப்படி அந்த அணியின், தனி நபர் ஒருவரின் ஜகதல பிரதாபமும் வெளியே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts